
France நாட்டை சேர்ந்த விவியன் முல்லர் என்ற விஞ்ஞானி Solar இலைகளுடன் கூடிய Bonsai சார்ஜர் என்ற மரம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
மரங்களை தொட்டியில் வளர்க்கும் கலைக்கு bonsai என்று பெயர். இக்கலையையும் Solar தொழில்நுட்பத்தையும் சேர்த்து Bonsai சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.
இதுகுறித்து முல்லர் கூறுகையில், சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு Electree என்று பெயர் வைத்திருக்கிறேன்.
இதை உருவாக்க 3 ஆண்டுகள் ஆனது. வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளிபடும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.
சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய solar panel-கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
மேலும் இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட battery தக்கவைத்துக் கொள்ளும். முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் Electree 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றார்.


Windows கணினிகளில் System Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது கணினிகளில் ஏதேனும் software install செய்வதற்கு முன்னர் Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்ப்பட்டு கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் crash ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்லப் போனால் System Restore Point உங்கள் கணினி settings backup எடுத்து வைப்பது எனக் கூறலாம்.







