Pages

2 Dec 2011

Desktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற்கு

நாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது desktopல் எந்த ஒரு iconம் இருக்காது. இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு window open ஆகும். அதில் எவ்வளவு நேரத்திற்கு பின்னர் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைய வேண்டுமோ அந்த நேரத்தை set செய்திடவும். ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம் நேரம் set செய்திடலாம். அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட slideல் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு desktopல் உள்ள iconகள் மறைந்துவிடும்.  தரவிரக்கம் செய்ய
http://www.4shared.com/file/WXzIBYzy/deskduster_free_20103.html

சுமார் 36 வருடங்கள் பயன்படும் மின்விளக்குகள் அறிமுகம்

கிட்டத்தட்ட 40,000 மணி நேரம் அதாவது 36 வருடங்கள் ஒளிரக் கூடிய தன்மை கொண்டவையாக சாம்சுங்கின் இந்தப் புதிய LED மின்விளக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சுங்கின் புதிய LED விளக்குகள் ஒரு சாதாரண மின்விளக்கினைவிடவும் 40 மடங்கு அதிகமான பலனை அளிக்கக் கூடியவை.
இது ஒரு சாதாரண மின்விளக்கு அல்ல. இதில் LED சிப்கள், drivers, மின்சாதனங்கள் என்பன அடங்கியுள்ளன. சாங்சங்கின் இந்த விளக்குகள் தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன. எனினும் இதிலுள்ள ஒரேயொரு தகவல் இதன் விலை குறைவல்ல என்பதுதான்.

LED தொலைக்காட்சிகளின் வரிசையில் உலகின் முன்னோடியாகவும் சாம்சுங் தான் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வகைத் தொலைக்காட்சிகள் அதிகளவில் பயன்பாட்டிற்கும் வந்துள்ளன. இதனைவிடவும் Eden Park என்ற அமெரிக்க நிறுவனமானது பிளாஸ்மா ஒளி என்ற தொழினுட்பத்தினையும் ஆராய்ந்துவருகின்றது. இதில் ஒளியானது இரு அலுமினியம் தாள்களுக்கிடையில் உள்ள கடதாசி போன்ற மெல்லிய பிளாஸ்மா படிமத்திலிருந்து வெளிவரும். இதன்மூலம் ஒரு சுவர்க்காப்பு உறையிலிருந்தும் வெளிச்சம் வருவதுபோன்ற நிலை ஏற்படலாம். இதற்கும் மிகவும் குறைந்த மின்வலுவே தேவைப்படும். எனினும் இந்த microplasma வகை விளக்குகள் எப்போது சந்தைக்கு வருமென்று அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

மனிதர்களை அழிக்கக் கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட virus

மனிதர்களை அழித்துவிடக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட Flu virus கண்டுபிடித்தமை பற்றிய விபரங்களை நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் வெளியிடவுள்ளனர். இந்த அபாயகரமான virus H5N1 பறவைக்காய்ச்சல் வைரசினை ஒத்ததாகும். ஆனால் இது தொற்றுக் கிருமி. ஒரு தடவையிலேயே மில்லியன் கணக்கானோரில் கடத்தப்பட்டுவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இதனால் இந்த ஆய்வு சர்ச்சைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் விஞ்ஞானிகளையும் இரு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒரு பகுதியினர் இதன் விபரங்களை வெளியிடக்கூடாது என்றும் சிலர இதனைச் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர்.பறவைக் காய்ச்சலின் virus 500 பேரை கொன்றது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட virus எதிரிகளின் கைகளில் கிடைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானதாக உள்ளதால் உயிரியல் போரிற்குப் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்தக் கண்டுபிடிப்பினால் இக்குழு ஊடகத்தின் பாய்ச்சலினை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவரீதியில் நல்லதாரு முன்னேற்றம் என்றும் கருதப்படுகின்றது.
இதனால் இதுபற்றிய விடயங்களை வெளியிடுவது தடுக்கப்படவேண்டுமென்றும் வெளியிடப்பட்டால் உயிரியல் தீவிரவாதத்திற்குத் துணைபோகும் காரியங்களைச் செய்பவர்களுக்கு இது உதவக்கூடுமென்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.