Pages

28 Dec 2011

Digital Camera வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் இணையம்

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கமெரா எதுவென்று தெரியாமல் இருக்கும். ஒரு நாட்டில் கிடைக்கும் Cameraக்கள் மற்றொரு நாட்டில் கிடைப்பதில்லை என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஆம் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நிறுவனத்தின் cameraவையும் நாம் வாங்க முடியும். நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த camera எது என்பதை நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது.
புகைப்படம் எடுப்பதற்காக camera வாங்கினாலும் அதில் குறிப்பிட்டு நம் தேவையைச் சொல்லி அதற்கான cameraவை வாங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதம் தான். என்ன தேவைக்காக பயன்படுத்தப் போகிறோம், விலை எவ்வளவுக்குள் இருக்க வேண்டும் என்று கொடுத்து தேடினால் பல வகையான நிறுவனங்களின் cameraவை காட்டும். ஒவ்வொரு cameraவிலும் இருக்கும் சிறப்பம்சம் என்ன என்பதையும் அதை மற்ற நிறுவத்தின் cameraவுடன் ஒப்பிட்டும் காட்டும்.
தற்போது சந்தையில் இருக்கும் அனைத்து வகையான cameraக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம்.  சில cameraக்களின் செயல்படும் விதம் கூட வீடியோ காட்சிகளாக இத்தளத்தில் காட்டப்படுகிறது. தளத்தின் முகவரி http://snapsort.com/

Facebook-ல் குறிப்பிட்ட நண்பர்களின் புகைப்படத்தை மட்டும் முதலில் காட்ட

சமூக தளமான Facebook நம் நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்ளவும், நம்முடைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்து உள்ளது. நாம் Facebook-ல் ஒவ்வொருமுறை செல்லும் போதும் நண்பர்கள் பகுதியில் வேறுவேறு படங்களை காட்டும்.  Facebook-ல் எப்போதும் குறிப்பிட்ட நபர்களின் படங்கள் தான் தெரிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்கும் Facebook-ல் ஒரு வசதி உள்ளது.
  • முதலில் உங்கள் Facebook account-ல் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அங்கு உங்கள் நண்பர்களின் படங்கள் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு ஒரு சிறிய பென்சில் போன்ற link இருக்கும். அதை clik செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
  • அங்கு காலியாக உள்ள கட்டத்தில் உங்களுக்கு தெரியவேண்டிய நண்பர்களின் பெயரை type செய்யவும்.
  • நீங்கள் முதல் எழுத்தை type செய்தவுடன் அந்த எழுத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காட்டும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளவும்.
  • இது போல நீங்கள் தேர்வு செய்யும் பெயரும் இதில் சேர்ந்து கொண்டே வரும்.
  • இது போல உங்களுக்கு தேவையானவர்களை நீங்கள் தேர்வு செய்ததும் அவர்களின் படங்கள் வரிசையாக காண்பிக்கப்படும்.
  • இனி எப்பொழுது உங்கள் பக்கத்தை திறந்தாலும் நீங்கள் தேர்வு செய்தவர்களின் புகைப்படங்கள் தான் முதலில் வரும்.
  • இன்னொரு வசதி: படங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் 
    சாதரணமாக நம் Facebook-ன் நண்பர்கள் பகுதியில் ஆறு படங்கள் மட்டுமேதெரியும். அதை மாற்றி 12 படங்கள் தெரியவைக்கலாம்.
  • அதில் இருக்கும் 6 என்பதை click செய்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் அதிக பட்சம் 12 படங்கள் வரை பொருத்திக் கொள்ளலாம்.

HTML Comparison Table உருவாக்க

இரண்டு பொருளுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை காட்டுவதற்கும், அல்லது இரண்டு இடத்திற்கு உள்ள வித்தியாசங்கள் காட்டவும் நமக்கு பயன்படுவது இந்த Comparison Table ஆகும். அழகான Comparison Table உருவாக்க இதுவரை போட்டோஷாப் மென்பொருளையே பெரும்பாலும் உபயோகிக்க படுகிறது. ஆனால் இன்று நாம் ஒரு சுலபமான முறையில் comparison table உருவாக்குவது எப்படி பார்ப்போம். இதற்க்கு கோடிங் எழுத வேண்டிய அவசியமில்லை ஒரே நிமிடத்தில் அதை உருவாக்கி விடலாம். எந்த தொழிநுட்ப அறிவும் பெற்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழே உள்ள Comparison Table பாருங்கள்.

தமிழ் பதிவர்கள் vs ஆங்கில பதிவர்கள்


தமிழ் பதிவர்கள்
ஆங்கில பதிவர்கள்
பதிவின் தரம்
நட்பு
வருமானம்
வாசகர்களை மதித்தல்
தொடர்ந்து பதிவிடல்
பதிவர்கள் சண்டை
பதிவர்கள் ஒற்றுமை
Comparison Table உருவாக்குவது எப்படி?
  • முதலில் இந்த http://www.compareninja.com/ தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். பிறகு Home பகுதிக்கு சென்று START NOW என்ற button அழுத்தவும்.
  • முதலில் உங்கள் டேபிளின் தலைப்பை கொடுத்து மற்ற விவரங்களை கொடுக்கவும்

  • Next button அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும் .அதில் உங்கள் Table தோற்றத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
  • தேர்வு செய்த பின்னர் Next button அழுத்தவும்.

அடுத்து உங்களுக்கு Table பக்கம் open ஆகிவிடும். அதில் உங்களுக்கு விருப்பமான டேபிளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

Comparison Table உருவாக்கியவுடன் கீழே உள்ள Show Me The Code என்ற button அழுத்தினால் உங்களின் டேபிளுக்கான HTML மற்றும் CSS கோடிங்க வந்திருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை copy செய்து உங்கள் website-ல் இணைத்துக் கொள்ளுங்கள்.

இதே போன்று நீங்கள் எத்தனை Comparison Table வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.