Pages

27 Jan 2012

சீனாவில் முதல் சூப்பர் கணினி அறிமுகம்


சீனாவில் முதல் சூப்பர் கணினியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீனாவின் கணினி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கணினி ஆயிரம் டிரில்லியன் கணக்குகளுக்கான தீர்வுகளை ஒரே நொடியில் கண்டறியும் வல்லமை கொண்டது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கணினி 3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் பயன்பாடு, உயிர் மருந்தகம், தொழில்துறை வடிவமைப்பு, நிதி ஆகிய துறைகளில் இந்த சூப்பர் கணினியை பயன்படுத்த முடியும்.

வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள்


வீட்டின் வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. http://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.


பின் இந்த மென்பொருளை open செய்ததும் இடது புறம் ஒரு window open ஆகும். அதில் Expense, Income, Refund என மூன்று ரேடியோ buttons இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரத்தை தட்டச்சு செய்யவும்.


இதில் உள்ள Category-யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். இதில் Name என்பதில் பெயரையும், Group-என்பதில் அதன் வகையையும், Color-என்பதனை தெரிவு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியும்.


அதன் பின் Save என்பதனை click செய்து நாம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் உள்ள Overview என்பதனை click செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை graph மூலம் அறிந்துகொள்ளலாம்.


இந்தியா விவசாய நாடு .... அதன் இன்றைய நிலை.....



இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 40-50 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்புறத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கி நாட்டை வளமிக்கதாகச் செய்ய வேண்டும்.

முந்தைய திமுக அரசில் இலவச கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று லட்சம் கறவை மாடுகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி.

உணவுப் பஞ்சம் என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டி வருகிறது. என்றைக்கு வீட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை.

இச் சூழலில் மற்ற துறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட வேளாண் துறைக்கு வழங்க நமது மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

அரசு ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு, பஞ்சப்படி, ஊக்க போனஸ் உண்டு. ஆனால், உழவன் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்குக் கட்டுப்படியாகும் கொள்முதல் விலைகூட இல்லை. காலங்கள் பல கடந்தாலும், நிலைமை இன்னும் மாறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1930-35-ம் ஆண்டுகளில் ரூ.15 ஆக இருந்தது.

இன்று தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ கடந்துள்ளது. இந்த விகிதத்தில் பார்த்தால் 1935-ல் குவிண்டாலுக்கு ரூ.5 ஆக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்.

நெல்லும் தங்கமும் மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.7,000 ஆக விற்க வேண்டுமே.... நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது...!

விவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், முதுகெலும்பு முறிந்த நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. இதை எந்த அரசியல்வாதியோ அல்லது அரசோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளின் விவசாய ஆதரவுப் பேச்சு எல்லாம் ஏமாற்று வேலைதான் என்று விவசாயி கூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

விவசாயியின் வாழ்வாதாரத்தைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரு லிட்டர் தண்ணீரை (சுத்தமான) ரூ.15-க்கு மேல் விலை கொடுத்து வாங்கும் மக்கள், அரை லிட்டர் பாலை ரூ.15-க்கு வாங்க மறுப்பது ஏனோ?

"ஜெய் ஜவான்... ஜெய் கிஸôன்...' என்று அரசு கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விவசாயிகள் 2 லட்சத்தும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதும் இந்த நாட்டில்தான்.

இவர்களில் யாரும் பெற்றோரை இழந்த துக்கத்தினாலோ, காதல் தோல்வியாலோ, குடும்ப நெருக்கடியாலோ, வயிற்று வலியாலோ உயிரைத் துறக்கவில்லை.

கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தால் தற்கொலை செய்துகொண்டவர்கள்தான் இவர்கள். போர்களின்போது இறப்பவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது தாய்நாட்டுக்குப் பெருமை இல்லை என்பதை அரசு உணரவில்லையே!


விலங்குகள் பற்றி சில தகவல்கள்



சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயியில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாயிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.






ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.






முதலைக்கு மூக்கிலும் பல் உண்டு. முட்டைக்குள் உள்ள முதலைக்குட்டி மூக்கில் உள்ள பல்லால் உடைத்துக் கொண்டுதான் வெளியே வரும்




பிறக்கும்போது 1 பவுண்டு எடையுள்ள கரடிக்குட்டி ஒரு வயதை அடையும் போது அதன் எடை 100 பவுண்டாகி விடுகிறது.




உணவு, நீர் எதுவும் இன்றி 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தி குதிரைக்கு உண்டு.ஒரு வருடத்தில் தன் எடையைப் போல் பத்து மடங்கு உணவை குதிரை உட்கொள்கிறது.




காற்று வீசும் திசைக்கு எதிராகத் தனது மூக்கு இருக்கும்படியாகவே நாய் எப்போதும் படுக்கும். எதிரி வருவதை மோப்பத்தால் சுலபமாக உணரவே இவ்வாறு செய்கிறது.

சாக்லேட் ஒரு சுவாரசியமான தகவல்



விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. 


அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.

குழந்தை அழுதால் தெரிவிக்கும் மென்பொருள்


குழந்தைகளை கவனிக்க யாருமே இல்லாத பட்சத்தில் குழந்தை அழுதால் அறியத்தருவதற்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் CRY GUARD.
இந்த மென்பொருளை ஒரு கைபேசியில் நிறுவிக் கொண்டு மற்றொரு கைபேசியின் நம்பரை கொடுக்க வேண்டும். மென்பொருள் நிறுவிய கைபேசியை குழந்தையின் அருகில் வைத்து விடுங்கள். மற்றொரு கைபேசி உங்களிடம் இருக்க வேண்டும்.
உங்களது குழந்தை அழுதாலோ அல்லது சிறு அசைவுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய கைபேசிக்கு அழைப்பு வரும். மென்பொருள் பதிவிறக்கம் செய்ய http://cryguard.com/download.html