Pages

26 Jan 2012

Facebook-​ல் அமெரிக்க பத்திரிகை USA TODAY











அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் "USA TODAY" எனும் பத்திரிகை நிறுவனம் Facebook-ன் மூலம் தாம் வெளியிடும் செய்திகள் உடனுக்குடன் பயனர்களை சென்றடையும் வகையில் புதிய "USA TODAY + Me" என்ற Timeline மென்பொருளை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிர்வதுடன், உங்கள் நண்பர்கள் விரும்பிப் படிக்கும் செய்திகளையும் பகிர முடியும்.

இதில் நீங்கள் விரும்பியவாறு தோற்றத்தில் மாற்றங்களை செய்ய முடிவதுடன், பல வழிகளில் செய்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் (filter) வசதியும் காணப்படுகின்றது.
மென்பொருளை நிறுவிக்கொள்வதற்கு http://apps.facebook.com/usatodayplusme இங்கு அழுத்தவும்.


ZTE D 98 Tablet



இந்த வருடம் Los Vegas-ல் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் ஏராளமான Tablet-கள் மற்றும் Gadgets அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் போட்டி அதிகமாக இருந்தது. மேலும் புதிய நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர். அவ்வாறு புதிதாக அதே நேரத்தில் நவீன தொழில் நுட்பங்களுடன் வந்த Tablet-ன் பெயர் ZTE D98 ஆகும்.

இந்த ZTE D98 Tablet-ன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கும் போது இந்த Tablet  7 inch display கொண்டுள்ளது. அதுபோல் 3 Tegra Processor, Tegra Chip, 1 GB RAM, 1280 x 800 Pixel resolution கொண்டிருக்கிறது. அதுபோல் இதில் camera, GPS வசதிகளும் உண்டு. இந்த Tablet தரம் வாய்ந்த processor கொண்டிருப்பதால் இதன் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ZTE D 98 Tablet-ன் விலை மற்றும் அதன் விற்பனைத் தேதி இன்னும்  அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் தெரியும் என்று நம்பலாம்.

75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free File Opener மென்பொருள்



நீங்கள் பயன்படுத்தும் கணினியின் வேகம் வழமையைவிட குறைவாக காணப்படுவதற்கு, அதிகளவான மென்பொருட்களை நிறுவியிருப்பதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும். அதாவது கணினியில் பல்வேறு வகையான கோப்புக்களை திறப்பதற்காக தனித்தனியாக மென்பொருட்களை நிறுவியிருப்போம்.

இதனால் வன்தட்டில்(Hard Disk) இடம் வெகுவாக குறைவடைவதோடு ஒன்றிற்கு மேற்பட்ட மென்பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதானல் பிரதான நினைவகத்தின்(RAM) அளவும் குறைவடைகின்றது. இதனால் உங்கள்  கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்புள்ளது.

இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மிகவும் உதவியாக உள்ள மென்பொருளே Free File Opener ஆகும். இதில் 75ற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறக்க முடியும். 25MB அளவுடைய இம்மென்பொருள் மூலம் பின்வரும் கோப்பு வகைகளை திறக்க முடியும்.

Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
ML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)
பதிவிறக்கம் செய்ய http://www.freefileopener.com/