Pages

22 Dec 2011

கணினியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு மென்பொருள்


கணினியில் ரகசியமாக கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு மென்பொருள் உள்ளன. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து
கணினியில் நிறுவியதும் கடவுச் சொல் கேட்கும். மென்பொருள் தராவிரக்கம் செய்வதற்க்கு http://www.4shared.com/file/13tuT6ME/WinMend-Folder-Hidden.html

அதன் பின் தோன்றும் windowவில் நீங்கள் மறைக்க வேண்டிய (Hide Folder -Hide Files ) கோப்பு மற்றும் கோப்பறை எதுவாக இருந்தாலும் தேர்ந்து எடுக்கவும்.
இப்போழுது நீங்கள் தேர்ந்து எடுத்த driveவில் சென்று கோப்பு மற்றும் கோப்பறையை பார்த்தால் அது அங்கு இருக்காது.
மீண்டும் நீங்கள் இந்த application திறக்க உங்களுக்கு சிறிய window ஒன்று தோன்றும். அதில் இந்த மென்பொருளை உபயோகிக்க நீங்கள் கொடுத்த கடவுச் சொல்லை உள்ளீடு செய்யவேண்டும்.
உங்கள் கடவுச் சொல் தவறானதாக இருந்தால் உங்களுக்கு ஒரு window open ஆகும். சரியாக இருந்தால் நீங்கள் இந்த மென்பொருளுக்குள் செல்லமுடியும். இதன் மூலம் நீங்கள் சுலபமாக கோப்பு மற்றும் கோப்பறைகளை மறைத்து மீட்டுக் கொண்டு வர முடியும்.

இணையத்தின் பயன்பாட்டினை அறிந்து கொள்வதற்கு…


Broadband இணைய இணைப்பு வெகுவேகமாகப் பரவி வருகிறது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படும் தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு GB வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர் ஒவ்வொரு MBக்குத் தனிக் கட்டணம் வாங்குகின்றனர்.
சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால் இணைய இணைப்பினைப் பயன்படுத்தினால் ஒரு மணிக்கு இவ்வளவு என அந்தப் பயன்பாட்டு நேரத்திற்குமான கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர். ஆனால் சில நிறுவனங்கள் மட்டுமே இது போன்ற மணிக்கணக்கினாலான திட்டத்தினை  அளித்து வருகின்றன.
நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை  http://codebox.org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Windows, Linux  மற்றும் Mac இயங்குதளம் ஆகிய systemகளில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது.  இணையத்தில் இது இலவசமாய் கிடைக்கிறது. இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர் இதன் ZiP கோப்பை விரித்து, அதனை ஒரு கோப்பறையில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் application கோப்பை இயக்கி இந்த புரோகிராமினை நிறுவச் செய்திடவும். கணினியில் நிறுவியவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும். இதன் பின்னர் நாம் அறியாமலேயே இந்தப் புரோகிராம், கணினியின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு தகவலைப் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும்.
இங்கு கிடைக்கும் பயனர்முகத்தில்(Interface) காட்டப்படும் monitorல், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம், graphical மற்றும் digital வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம்.
இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு தகவல் பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History Tabல் click செய்தால் நீங்கள் பயன்படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் பார்கிராப் மூலம் காட்டப்படுகிறது.
Summary Tab ஒரு மாதத்தில் நீங்கள் மேற்கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query Tabன் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான தகவல் எவ்வளவு என்று காணலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட தகவலை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி set செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும்.
Calculator என்ற Tab மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் கோப்பு இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கணணியில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம்.

Broadband பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் கணினியில் நிறுவச் செய்திட வேண்டிய புரோகிராம் இது.

உலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்



உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் Arizona பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன்மூலம் சுமார் 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சுற்றுச் சூழலை பாதிக்காத செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் என இதனை உருவாக்கவுள்ளதாக இந்நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு திட்டத்தை நமது நாட்டில் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைத்தால் மின் தடை இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

Gmail Shortcut Keys

Google நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் G-Mail பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதை இன்னும் எளிதாக உபயோகிக்க இங்கே Shortcut கீகள் தெரிந்து இருந்தால் நல்லது. இதில் முக்கியமானதை மட்டும் தொடுத்துள்ளேன். இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள் உங்கள் Gmail account சென்று
  • Settings 
  • General
  • Key board Shortscuts on
  • Save Changes -உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளுங்கள்.

இந்த மாற்றங்கள் செய்த பிறகே உங்களுக்கு கீழே Shortcut keys வேலை செய்யும். மாற்றத்தை செய்து விட்டு உபயோகித்துப்
பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

Keyboard Shortcuts
Function
CCompose new Mail
NNext Mail
PPrevious Mail
!Report as a Spam
RReply to the Message
AReply to All
FForward that message 
#Delete the Message
/Puts your cursor in Search box
OOpens Recent Message
UAutomatically comes to inbox
SStar a message
VMove to
Shift+IMark as Read
Shift+UMark as Unread
QMove to your Cursor in Chat Search

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanilla Extensions

Google குரோம் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். Cookies என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்கப்படும் ஒரு சிறிய application ஆகும். ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை தானே புகுத்திக் கொள்ள இவைகள் பயன்படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.
இணைய தளங்களில் உலாவும் போது இந்த Cookies கள் நமக்கு தெரியாமலேயே நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. புகுந்து கொண்டு நம் உலவியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்மை பற்றிய தகவல்களை அனைவருக்கும் அனுப்பி விடுகின்றன. இதில் நம்முடைய ரகசிய வங்கி கணக்கு எண்களும், passwordகளும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் மிகப் பெரிய அபாயம் உள்ளது. ஆகவே இதில் இருந்து நாம் கவனமாக இருக்க ஒரு வழி உள்ளது.
இந்த Cookiesகளை அடிக்கடி நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு மறந்துவிடும் என் வேலைகளுக்கு இடையில் எனக்கு செய்ய நேரமிருக்காது என்று கூறுகிறீர்களா. கவலையை விடுங்கள் உங்களுக்காக ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது இந்த link-ல் https://chrome.google.com/webstore/detail/gieohaicffldbmiilohhggbidhephnjj?hl=en#detail/gieohaicffldbmiilohhggbidhephnjj சென்று இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

Show Options click செய்தவுடன் கீழே இருப்பதை போல window வரும்.

  • இதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்கள் உலவி ஞாபகம் வைத்து கொள்ளவேண்டிய தளங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
  • கீழே உள்ள Auto delete என்ற கட்டத்தில் tick குறியிட்டு பக்கத்தை மூடிவிட்டால் போதும் இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் உங்கள் கணினியில் Cookies அழிக்கப்படும்.
  • இனி நீங்கள் உங்களுக்கு தேவையான இணையப்
    பக்கங்களை மட்டும் White list-ல் சேர்த்து விடுங்கள்.
  • Auto delete ஆகும் போது இந்த Whitelist-ல் உள்ள cookies அழிக்கப்படாது மற்றவைகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • Clear Unwanted Cookies என்று கொடுத்தால் நம்முடைய கணினியில் இதற்கு முன்னர் உள்ள அனைத்து  cookiesகளும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டுவிடும்.
  • Whitelist-ல் இரண்டு தளங்களை சேர்த்து இருப்பதால் அந்த இரண்டு cookies-களும் அழிக்கப்படவில்லை.
  • இனி நீங்கள் பாதுகாப்பாக கூகுள் குரோமில் இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்

கணினியை வேகமாக Defragment செய்ய இலவசமாக மென்பொருள்

கணினியின் செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம். Defragment என்பது நாம் கணினியில் சேமிக்கப்படும் அனைத்து பைல்களும் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்கப்படும். இவை அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதைச் செய்ய நம் கணினியிலேயே வசதி இருந்தாலும் அதில் செய்தால் வெகு நேரம் காத்துக் கிடக்க வேண்டும். வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ஒரு மென்பொருள்  இலவசமாக கிடைக்கிறது.

பயன்கள்:
1) நம் கணினியை Defragment செய்ய மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம்   இல்லை.
2) இந்த மென்பொருளை activate செய்ய serial key கொடுக்க வேண்டியதில்லை.
இதில்  Auto Defrag வசதியும் உள்ளது. நாம் set செய்யும் கால இடைவெளியில் நம் கணினியை Defrag செய்து கொள்ளும்.
3) நம் கணினியில் குறைந்த அளவு இடத்தையே இயங்குவதற்கு எடுத்துக்கொள்கிறது.
4) 1.12mb அளவே உடைய மிகச் சிறிய மென்பொருள்.
டவுன்லோட் செய்ய:
முதலில் இந்த http://db.iobit.com/license-free/sd-server-free-license.php தளத்தில் செல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அந்த மென்பொருளை பற்றி உங்கள் கருத்தை கூறி பின்னர் கீழே உள்ள Verification எண்ணை சரியாக கொடுத்து FreeCopy என்ற பட்டனை அழுத்தவும்.
பின்னர் உங்களுக்கு வரும் windowவில் Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
பயன் படுத்தும் முறை: 
தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் install செய்து கொண்டு அந்த மென்பொருளை open  செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
இதில் நீங்கள் Defragment செய்ய விரும்பும் டிரைவ் தேர்வு செய்து கொண்டு Analyze பட்டனை அழுத்தவும். உங்கள் கணினியின் fileகள் அனைத்தும் scan ஆகி என்னென்ன  fileகளை Defragment செய்ய வேண்டும் என்ற செய்தி உங்களுக்கு வரும்.
அதில் உள்ள GO என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆக தொடங்கும். ஆகி கடைசியில் நமக்கு முடிவும் வரும்.
அடுத்து Auto Defrag சென்றால் நம் கணினியில் CPU usage பற்றி தெரிந்து கொள்வோம்.
Schedule க்ளிக் செய்து Auto Defrag கால இடைவெளியை தேர்வு செய்து கொள்ளவும்.
அவ்வளவு தான் இனி உங்கள் கணினியை சுலபமாக  Defrag செய்து நம் கணினியின் வேகத் திறனை அதிகபடுத்தலாம்.

Google Chrome 16 தரவிறக்கம் செய்வதற்கு.....

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.
காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட இலவசமாக கிடைக்கப் பெறும் மென்பொருட்களில் உள்ளது.
Google Chrome 16: இணைய உலாவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும்.
இந்த உலாவியின் எளிமையான தோற்றமும் வேகமான செயல் திறனாலும் அனைவரும் இந்த உலாவியை விரும்பி பயன்படுத்துகின்றனர்.  இந்த மென்பொருள் கூகுளில் தயாரிப்பு என்பது இதன் கூடுதல் பலமாகும். தற்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை chrome 16 வெளியிட்டு உள்ளனர். தரவிறக்கம் செய்ய https://www.google.com/chrome/?brand=ECBA&installdataindex=yes-apps-yes-promo

தரம் வாய்ந்த Youtube வீடியோக்களை தேடுவதற்கு...

இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது online-ல் வீடியோக்கள் பகிரும் தளமாகும்.
இதில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும்.
நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும். நடுவில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை தேட வேண்டும்.
இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்கத் தேவையில்லை. முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள்.
உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும்.
இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து search செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும்.
இதில் தரம் மிகுந்த (High Quality) வீடியோக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18'(Stereo, 480 x 270 resolution) இந்த வரியை கொடுக்கவும்.
அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும்.
உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து type செய்யவும்.

நீங்கள் தேடும் வீடியோக்களில் தரமான வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும். இல்லையென்றால் NO VIDEOS FOUND என்ற செய்தி தான் வரும். அதற்கு கீழே தரம் குறைந்த வீடியோக்கள் வரும்.

Text Animation-ஐ உருவாக்கும் பயனுள்ள இணையம்

எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளிதாக Animation உருவாக்கலாம்.
இத்தளத்திற்கு சென்றவுடன் Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.
Font type, Font size, Background color, Direction(new), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும்.

நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும்.

Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணணியில் சேமித்துப் பயன்படுத்தலாம். இணையதள முகவரி  - http://textanim.com/

நீண்ட காதுகளைக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்த நாய்

அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு வயதான Harbor எனற நாய் உலகிலேயே மிகவும் நீண்ட காதுகளைக் கொண்ட நாய்களின் வரிசையில் கின்னஸ் சாதனையை நிலைநாட்டி உள்ளது. இந்த நாயின் வலது காதின் நீளம் 12.25 ஆகவும், இடது காதின் நீளம் 13.5 ஆகவும் காணப்படுகிறது.