Pages

15 Dec 2011

விண்டோஸ் 7 லைசன்ஸ் கீயை பேக்அப் எடுக்க

விண்டோஸ்7  இயங்குதளத்தை நிறுவும் போது கூடவே லைசன்ஸ் கீயையும் சேர்த்தே நிறுவுவோம். இல்லையெனில் நிறுவிய பின் தனியாக விண்டோஸ்7 யை ஆக்டிவேஷன் செய்வோம். இவ்வாறு நாம் ஒவ்வொரு முறையும் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டதை நிறுவும் போது ஆக்டிவேட் செய்வோம். ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆன்லைன் ஆக்டிவேஷன் அளவு இருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆக்டிவேஷன் செய்ய இயலாது. இதனை சரி செய்யவும் ஒருவழி உள்ளது. ஏற்கனவே நம்முடைய கணினியில் நிறுவியிருக்கும் ஆக்டிவேஷன் கீயை பேக்அப் செய்து மீண்டும் நிறுவிகொள்ள முடியும். இதனால் நாம் ஒவ்வொரு முறையும் தனித்தனியே ஆன்லைன் ஆக்டிவேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் பேக்அப் செய்த லைசன்ஸ் கீயை எத்தனை முறை வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க  http://forums.mydigitallife.info/threads/27341-Advanced-Tokens-Manager-The-Activation-Backup-Solution

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி பின் open செய்யவும். பின் Backup என்னும் பொத்தானை அழுத்தி பேக்அப் செய்யவும். பேக்அப் செய்த கோப்பானது, பேக்அப் கோப்பறையில் சேமிக்கப்பட்டிருக்கும். பின் அதை வேண்டும் போது மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இவ்வாறு பேப்அப் செய்வதால் உங்களுடைய இயங்குதளத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. டோக்கன்ஸ், லைசன்ஸ் அனைத்தையுமே பேக்அப் செய்ய எளியவழி ஆகும்.

Facebook, Twitter மூலம் நீங்களும் வேலை தேடலாம் !

மக்களுக்கு வேலைவாய்ப்புக்களைத் தேடித்தரும் அரிய உதவியைச் செய்வதில் சமூக வலையமைப்புகள் ஈடுபடுகின்றன. Facebook, LinkedIn அல்லது Twitter தொடர்புகளூடாக 22 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில்களைத் தேடிப்பெற்றுள்ளதாக ஓர் ஆய்வு கூறப்படுகின்றது. இந்த ஆய்வின்படி 2010இல் சமூக வலையமைப்பினூடாக 14.4மில். மக்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்ரீதியான சமூக வலையமைப்பாக உள்ள LinkedIn என்ற தளத்தினைவிடவும் பாரிய சமூக வலைத்தளமாக இதுவரை காணப்படும் Facebook இன்னும் பயனுடைய உதவிகளை வேலை தேடுவோருக்குச் செய்கின்றது. 6 பேரில் ஒருவர் சமூக வலையமைப்பினூடாகத் தொழில் தேடியுள்ளனர். இவர்களில் 83 வீதத்தினர் தமது வெற்றிக்கு Facebook தான் காரணமெனக் கூறியுள்ளனர். 46 வீதத்தினர் LinkedIn இனையும் 36 வீதத்தினர் Twitter இனையும் குறிப்பிட்டனர். எனினும் 31 வீதத்தினர் தாங்கள் இம்மூன்றையும் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டனர்.  உடனடியாக வேலை தேடுபவர்களில் 54 வீதத்தினர் இம்மூன்று சமூக வலையமைப்புகளையும் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். இந்த ஆய்வில் மேலும் 150 தொடர்புகளுக்கும் மேலே இருக்கும் ஒருவர் ஒரு வேலையைத் தேடுவதில் மிகவும் வெற்றிகரமாக இருந்தார் என்றும் தெரிந்தது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல்!!

மனிதன் பூமியைத் தவிர வேறு எங்கு வாழ முடியும் என தன் தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளான். இந்தத் தேடலில் ஒன்று தான் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?  என்பது. இது குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளிக் கழகம் E.S.A Express விண்வெளி ஓடத்தை அனுப்பியுள்ளது. அதன் சக்தி வாய்ந்த camera செவ்வாய் கிரகத்தின் ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் வடகிழக்கில் மலைகளில் ஐஸ் கட்டிகள் வளைவுகளாக உறைந்து புதைந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இவை பனிப் பாறைகளாகவும் இருக்கலாம் என்றக் கருத்தும் நிலவுகிறது.

Dell நிறுவனத்தின் புதிய வெளியீடு – Latitude ST Tablet

Dell நிறுவனம் புதிய Tablet ஒன்றை வெளியீடு செய்துள்ளது. இது வர்த்தகர்கள் மற்றும் professionals குறிவைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது.  இதன் விவரக்குறிப்புகள்
- 10.1-inch screen size
- weighs 816 grams
- 2GB of RAM
-  up to 32GB SSD (upgradable to 64/128GB SSD) storage
-  Microsoft Windows 7 operating system with Intel’s Atom Z670 1.5GHz processor
- upto 6 hours of battery life on the four-cell battery
- multi-touch display and pen for writing
- 720p front/5.0MP back camera
- 3G and mobile broadband options
- Skype video conferencing facilities
இதன் சந்தை விலை ரூபாய் 36,000/- மட்டுமே.

ஆகாஷ் Tabletஐ தொடர்ந்து UBISLATE

உலகத்திலேயே குறைந்த விலை Tablet ஆன ஆகாஷ் Tabletஐ Data wind நிறுவனத்தினர் இந்தியாவில் வெளியிட உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வகை Tabletகள் தற்பொழுது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் இதில் வசதிகள் குறைவாக உள்ளது என்றும் வேகமாக செயல் படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளதால் இதன் அடுத்த version UBISLATE 7 Tabletஐ வெளியிட உள்ளனர்.  இந்த Tablet விலையில் பார்க்கும் பொழுதும் வெறும் 500ரூபாய் மட்டும் தான் வித்தியாசம். ஆனால் UBISLATE7 பல வசதிகளைக் கொண்டு உள்ளது. மொபைல் போன் வசதிகளையும் கொண்டுள்ளது சிறப்பம்சம்.  இதற்கான முன்பதிவையும் தொடங்கி விட்டனர். இதை எப்படி முன்பதிவு செய்வது என கீழே பார்ப்போம்.இந்த லிங்கில் http://www.ubislate.com/prebook.html சென்று அங்கு உள்ள படிவத்தில் உங்களுடைய விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit button அழுத்தினால் உங்களுடைய கோரிக்கை அவர்களுக்கு அனுப்பப்படும்.


ஆகாஷ் மற்றும் UBISLATE 7 இரண்டு கணினிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்:


SpecificationsAakashUbiSlate 7 (The upgraded version of Aakash)

Availability

NOW!Late January

Pricing

Rs.2,500Rs.2,999

Microprocessor

Arm11 – 366MhzCortex A8 – 700 Mhz

Battery

2100 mAh3200 mAh

OS


Android 2.2


Android 2.3


Network

WiFiWiFi & GPRS (SIM & Phone functionality)





கோரிக்கை அனுப்பியவுடன் உங்களுடைய E-Mail-க்கு நீங்கள் book செய்த எண்ணை அனுப்பி வைப்பார்கள். இந்த புதிய version அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. மற்றும் விற்பனைக்கு வந்தவுடன் மேலும் பல விவரங்களை உங்கள் E-Mail-க்கு அனுப்பி வைப்பார்கள்.