19 Mar 2012
உலகின் முதல் பறக்கும் கார்!
அதிகரிக்கும் சனத்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக வீதிகளின் அகலிப்புக்களும் இல்லாத படியினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது.
இன்றைய உலகில் குறிப்பாக நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு button அழுத்தியதும் கார் மேலே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 சீட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.
முதன் முறையாக விண்வெளிக்கு பயணமாகும் பல்லி
உலகில் முதன் முறையாக விண்வெளிக்கு வெப்பத்தை தாங்கக்கூடிய பல்லிகளை அனுப்பும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உயிரியல் மருத்துவத்திற்கான ரஷ்ய நிறுவனம் பல்லிகளை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்.
பல்லிகளின் விண்வெளிப் பயணம் தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விண்வெளிக்கு மனிதர்களை தெரிவு செய்து, பயிற்சி அளித்து அனுப்புவது போன்றே, பல்லிகளும் அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கு மிக வலிமையற்ற, உடல்நிலை சரியில்லாத மற்றும் கோபம், ஆத்திரம், படபடப்பு போன்ற உணர்ச்சி அதிகம் உடைய பல்லிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றார்.
மேலும் வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு சிறப்பு பயிற்சி அதிகம் தேவைப்படாது. எந்த வெப்பத்தையும் அவற்றால் தாங்கிக் கொள்ள முடியும். எடையற்ற சூழ்நிலை உருவாகும் போதும், புவிஈர்ப்பு விசை குறையும் போதும் இவை தரையிலோ, சுவற்றிலோ, கூரையிலோ ஊர்ந்து செல்லும் இயல்புடையது.
இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்வதால் மனிதர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கான உடல்நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடந்த 1947ம் ஆண்டில் முதன் முறையாக ஈக்கள் முதன் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)