Pages

29 Feb 2012

Google +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி



மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான Google +ல் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர். Google +ல் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் support  செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். Google + தவிர வேறு எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.
Google +ல் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo click செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது click  செய்யுங்கள்.
அடுத்து இன்னொரு window open ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை type செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் type செய்யலாம்.
வலது புறத்தில் உள்ள T என்ற link click செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save button அழுத்தி வரும் window-வில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் watermark சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். Watermark சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

Sony Ericsson Walkman droid இந்தியாவில் அறிமுகம்



Sony Ericsson நிறுவனததினர் தற்போது இந்தியாவில் Walkman smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.     Sony Music-ல் இருந்து 2GB அளவுள்ள பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Aircel வடிக்கையாளர்கள் Walkman Smartphone-ஐ வைத்திருந்தால் 20 முழு நீல பாடல்களை இலவ்சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
  • 3.2-inch TFT Capacitive Touchscreen with a 320 x 480 pixel resolution
  • 1GHz Scorpion processor, 512 MB of RAM
  • Android 2.3 Gingerbread
  • 320MB internal storage
  • 3G, EDGE/GPRS, Wi-Fi ‘n’
  • GPS with A-GPS support
  • Bluetooth 3.0 with A2DP, USB 2.0
  • 5MP auto-focus camera with LED flash, 720p video recording
  • Stereo FM radio with RDS
  • Memory expandable up to 32 GB via microSD
  • 3.5 mm handsfree socket
  • 1200 mAh Li-ion battery
இதன் சந்தை விலை ரூபாய் 14,549/- மட்டுமே.


தவறுகளை சுட்டிக்காட்டும் Excel


தகவல்களை சேகரித்து வைப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்தும் ஒன்று Excel Worksheet.  இது தகவல்களை தரவரிசைப்படுத்துவதற்கும் உதவுகிறது.
இதில் நீங்கள் Formula ஒன்றை enter செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். உடனே Excel உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. அது ஒருவரின் பெயர் அல்ல. இது என்ன? Excel அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் Formula-வில் அமைத்திருக்கிறீர்கள். அது Excel தொகுப்பிற்கு புரியாத காரணத்தினால் இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு function ஆக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு typing பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம்.
இது ஒரு சிறிய formula-வில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த formula-வினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான formula என்றால் முழுவதுமாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிவது சற்று கடினமே.
பிழையைக் கண்டறிய முடியவில்லை என்றால் ஏமாற்றமும் எரிச்சலும் தானே மிஞ்சும். இதற்கு Excel ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் formula முழுவதையும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களில் type செய்திடுங்கள்.
பொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் type செய்து enter தட்டியவுடன் Excel அவை அனைத்தையும் பெரிய எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. Excel தான் அறிந்து கொள்ளும் formula-வின் பகுதியினை மட்டும் அவ்வாறு பெரிய எழுத்துக்களில் மாற்றும்.
பிழை இருந்து தன்னால் அறிய முடியவில்லையோ அந்த சொற்களை மாற்றாமல் விட்டுவிடும். எனவே எதில் பிழை உள்ளது என்று நமக்குத் தெரிந்துவிடும். நாம் உடனே அதனைச் சரியாக அமைத்துவிடலாம்.
இதில் இன்னொரு சிறிய ஆனால் முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். Data-க்கள் குறித்த சொற்கள், அவற்றின் ரேஞ்ச் காட்டும் இடங்களை Excel Capital சொற்களில் மாற்றாது. எனவே அவற்றில் பிழை இருந்தால் நாமாகத் தான் கண்டறிய வேண்டும்.