Pages

14 Apr 2012

இயேசு கிறிஸ்துவின் கல்லறை


முதலாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த Jerusalem-ல் உள்ள இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டில் முதலாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் கல்லறை Jerusalem-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இதன் முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் கமெராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அதில் எலும்புகள், கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

செவ்வாயில் யானையா?


செவ்வாயில் யானை போன்ற ஒரு உருவம் உள்ளதாக செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிவப்புக் கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகத்தில் யானை போன்ற ஒரு உருவம் பாறை ஒன்றில் பதிவாகியுள்ளது.

செவ்வாயிலிருந்து செயற்கைக் கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்ட 22,000 படங்களில் இருந்து மேற்படி அதிசய படம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த படம் தொடர்பாக Arizona planetary பல்கலைக்கழகத்தின் புவியியலாளரான Alfred McEwen கருத்துத் தெரிவிக்கையில்,
ஆயிரம் ஆயிரம் தசாப்தங்களுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் எரிமலை போன்றவற்றால் தான் இப்படியான நிலை உருவானது. அங்கு எரிமலைக் குழம்பு இருப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம்.
பூமியப் போன்ற ஒரு நிலை இருந்ததால் அங்கு யானைகள் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

10 Apr 2012

விண்வெளிக்கு பயணமாகும் பல்லி


மனிதன் விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றான்.  இப்போது அந்த வகையில் சோதனை செய்ய உள்ளது ஒரு பல்லியை.  இந்த முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உயிரியல் மருத்துவத்திற்கான ரஷ்ய நிறுவனம் பல்லிகளை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்.


பல்லிகளின் விண்வெளிப் பயணம் தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் விண்வெளிக்கு மனிதர்களை தெரிவு செய்து பயிற்சி அளித்து அனுப்புவது போன்றே பல்லிகளும் அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கு மிக வலிமையற்ற உடல்நிலை சரியில்லாத மற்றும் கோபம், ஆத்திரம், படபடப்பு போன்ற உணர்ச்சி அதிகம் உடைய பல்லிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றார்.

மேலும் வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு சிறப்பு பயிற்சி அதிகம் தேவைப்படாது. எந்த வெப்பத்தையும் அவற்றால் தாங்கிக் கொள்ள முடியும். எடையற்ற சூழ்நிலை உருவாகும் போதும் புவிஈர்ப்பு விசை குறையும் போதும் இவை தரையிலோ, சுவற்றிலோ, கூரையிலோ ஊர்ந்து செல்லும் இயல்புடையது.

இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்வதால் மனிதர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கான உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடந்த 1947ம் ஆண்டில் முதன் முறையாக ஈக்கள் முதன் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

YOUTUBE-ல் இந்திய தொலைக்காட்சி சீரியல்கள்


சினிமா மற்றும் தொலைக்காட்சி பார்ப்தவர்களே இல்லை என்று குறிப்பிடும் அளவிற்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம்மிடையே ஊடுருவியுள்ளது. குறிப்பாக வீட்டினில் இருக்கும் பெண்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று சொல்லும் அளவிற்கு அவர்களிடம் சீரியல்கள் சென்றடைந்துள்ளது.   வீடியோக்களின் தகவல் களஞ்சியமான YOUTUBE தளத்தில் சுமார் 19,000 க்கும் அதிகமான இந்திய தொலைக்காட்சி சீரியல் வீடியோக்கள் கொட்டி கிடப்பதாக YOUTUBE தளம் அறிவித்து உள்ளது. மின்சார பிரச்சினையால் சீரியல்களை தவற விட்டாலோ அல்லது பழைய episode-களை பார்க்க விரும்பினாலோ இனி YOUTUBE தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான பகுதிகளை பார்த்து கொள்ளலாம்.
முடிந்து போன சீரியல்களின் முழு தொகுப்பும் இங்கு உள்ளது. இந்திய மொழிகளில் சுமார் 6 மொழிகளில் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.
 அனைத்து மொழிகளிலும் காண - http://www.youtube.com/shows/other-languages
தமிழ் நிகழ்சிகளை காண - http://www.youtube.com/shows/other-languages?feature=sh_b_lan_ta&pt=g&l=ta

9 Apr 2012

அனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இணையதளம்


கணினியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம்.  ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று. இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை ஒட்டு மொத்தமாக தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் கணினியில் நிறுவி விடலாம்.
நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Get Installer என்ற button click செய்து விட்டால் நீங்கள் செலக்ட் செய்த  மென்பொருள்  தரவிறக்கப்பட்டு உங்களது கணணியில் நிறுவப்பட்டுவிடும்.
இணைய தள முகவரி - http://ninite.com/

8 Apr 2012

பறக்கும் கார்!


இன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்று.  அதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான்.
இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு button அழுத்தியதும் கார் மேலே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 சீட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.
அதிசயமாக உள்ளதா? கீழே உள்ள video பாருங்கள் பறக்கும் கார் எவ்வாறு செயல்படுகிறது என்று.


Youtube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண


இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான YOUTUBE தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில்  Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.இதற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கள் கணினியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுல் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.
இந்த தளத்திற்கு செல்ல - http://www.youtube.com/boxoffice

3 Apr 2012


உலகம் முழுவதும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவச open source மென்பொருள் VLC Media Player. சமீபத்தில் இந்த மென்பொருளின் புதிய பதிப்பான VLC2.0 வெளிவந்து உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக download செய்யப்பட்டது. இப்பொழுது இதன் புதிய பதிப்பான VLC2.0.1 பதிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பில் மேலும் பல மீடியா பைல்களை support செய்யும் படி உருவாக்கி உள்ளனர். முக்கியமாக ஆப்பிள் கணினிகளில் இருந்த சில பிழைகளை நீக்கி புதிய version வெளியிட்டு உள்ளனர்.
VLC மீடியா பிளேயர் மென்பொருள் மூலம் பல ஆடியோ வீடியோ பைல்களை எந்த வித Codec நிறுவாமல் நேரடியாக இயக்கலாம்.

Supported Video Formats to Different Computers:


Supported Audio Formats to Different Computers:


VLC2.0.1 மென்பொருளை டவுன்லோட் செய்ய - http://www.softpedia.com/get/Multimedia/Video/Video-Players/VideoLAN-Client.shtml

2 Apr 2012

Bluetooth பெயர் காரணம்


இன்று பலர் Bluetooth உபயோகிக்கிறோம்  Bluetooth தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும் இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் Denmark, Sweeden, Norway மற்றும் Finland நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற Denmark அரசர் ஹெரால்ட் புளுடூத் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.

இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், Norway நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.

36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் மென்பொருள்


இன்றைய உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்து வருகின்றது.  ஆகவே பலர் பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அதனை தடுக்க முயன்று வருகின்றனர்.   அந்த வகையில் surveillance camera மூலம் 36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் ஒரு சிறந்த மென்பொருளைக் கொண்ட கருவி (system) உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மென்பொருள் பொறியியளாளர்களால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் பாதுகாப்புத்துறையில் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hitachi Kokusai என்ற இந்த முறைமை மூலம் உலகெங்கிலுமுள்ளவர்களின் முகங்களை உடனுக்கு உடன் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள camera இடது, வலது பக்கங்களிலும் 30 டிகிரிக்குள் உள்ளவர்களை மட்டும் துல்லியமாக scan செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இம் முறைமையானது அடுத்த வருடம் முதல் விற்பனைக்கு வருகின்றது. செயல்படும் விதம் குறித்த கீழே உள்ள video பாருங்கள்