Pages

17 Jan 2012

உங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது



உங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்கும். இதற்கான third party programmeகள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள். கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும். தள முகவரி: http://co2saver.snap.com/snapshots.php#welcome

15 ஆண்டுகளில் Download.com

இலவசமாக software application வேண்டும் என்றால் நாம் அனைவரும் அணுகும் இணைய தளம் Download.com. பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இந்த தளம் கொண்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சார்ந்த software application தொகுப்புகளை மட்டும் வழங்கி வருகின்றன. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தளம் இலவசமாக சாப்ட்வேர் applicationகளைத் தரும் சேவையை தொடங்கி இன்றளவும் வெற்றி கரமாக இயங்கி வருகிறது. இதன் 15 ஆண்டு கால சேவையில் சில அரிய ஆர்வமூட்டும் தகவல்களைத் தன் தளத்தில் தெரிவித்துள்ளது இந்த இணையதளம். அவற்றில் சில தகவல்களைப் பார்க்கலாம்.

2011ஆம் ஆண்டில் download செய்யப்பட்ட programmeகளில் முதல் இடம் பெற்றிருப்பது இலவச ஏ.வி.ஜி. Antivirus programme. இந்த programme 2000 ஆண்டில் அறிமுகமானது. இதுவரை 38 கோடியே 43 லட்சத்து 31 ஆயிரத்து 367 முறை download செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் Avast Antivirus programme உள்ளது. இதனை 15 கோடியே 74 லட்சத்து 83 ஆயிரத்து 377 முறை டவுண்லோட் செய்துள்ளனர். CCleaner 19ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. Download செய்திடப் பயன்படுத்தப்பட்ட browserகளின் பங்கினைப் பார்க்கையில் எப்படிbrowser பயன்பாட்டுச் சூழ்நிலை மாறி வருகிறது என அறிய முடிகிறது. 1996ல் நெட்ஸ்கேப் பிரவுசர் 73% கொண்டு முன்னணியில் உள்ளது. அப்போது Internet Explorer பங்கு 20% மட்டுமே. Firefox எல்லாம் அப்போது இல்லை. 2011 ஆம் ஆண்டில் Internet Explorer 51% இடம் கொண்டுள்ளது. நெட்ஸ்கேப் இல்லவே இல்லை. அடுத்த இடத்தில் Mozilla Firefox 21% பங்கு கொண்டுள்ளது. Google Chrome 15% இடம் பிடித்துள்ள

மனதிற்கு பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு



இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு. சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும். அந்த வகையில் இன்று மனதிற்கு அமைதியை அளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுக்கும். சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் அமைதியை தரும். இப்படி அழகான இசையை நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்குத் தகுந்தபடி மாற்றி அமைக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதினை வருடும். இணையதள முகவரி http://www.ambient-mixer.com/

சந்திரனில் கனிம வளம்: தொடரும் ஆராய்ச்சிகள்





சந்திரனில் அரிய கனிம வளம் உள்ளதா? என்பது பற்றி அறிய அதன் மேற்பரப்பை வெட்டி எடுத்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இருப்பவர் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கத் தொழிலதிபர் ஆவார். இது பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் வெளியிட்டுள்ள செய்தி: சான் ஜோஸில் அமைந்துள்ள மூனெக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் நவீன் ஜெயின். இவர் நாசாவின் அமெஸ் ஆராய்ச்சிப் பிரிவின் விஞ்ஞானிகளுடன் இணைந்து சந்திரனில் உள்ள அரிய கனிம வளங்கள் பற்றி ஆராயத் திட்டமிட்டுள்ளார்.இதற்காக அவர் இயந்திர மனிதர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி ஜெயின் கூறுகையில், 2013ம் ஆண்டில் இந்த இயந்திர மனிதர்களை நிலவில் இறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நிலவுக்கு அனுப்பப்படும் இந்த இயந்திர மனிதர்கள் 2016க்குள் நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து படக்காட்சிகளை பூமிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100 ஆண்டுகளாக நடக்கிறது பூலாம்வலசில் சேவல் சண்டை





பூலாம்வலசு கிராமத்தில் நடந்த சேவல் சண்டையில் 15 ஆயிரம் சேவல்கள் கலந்து கொண்டன. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் நடைபெறும் சேவல் சண்டை மிக பிரசித்தி பெற்றது. 100 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு சேவல் சண்டை நடந்து வருகிறது. பொங்கல் தினத்தில் இருந்து 3 நாட்கள் இந்த போட்டி நடைபெறும்.

முதல்நாள் போட்டி நேற்றுமுன்தினம் காலை தொடங்கியது. திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, சேலம், தர்மபுரி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. முதல் நாளில் மட்டும் 10 ஆயிரம் சேவல்கள் வந்தன.

இரண்டு சேவல்கள் மோதும்போது கீழே சாய்ந்து விழுந்த சேவல், அல்லது தாக்கு பிடிக்க முடியாமல் திரும்பி ஓடும் சேவல் தோல்வி அடைந்ததாக அர்த்தம். தோல்வி அடைந்த சேவலை, வெற்றி பெற்ற சேவலின் சொந்தக்காரருக்கு கொடுத்து விடவேண்டும். தோல்வி அடைந்த சேவலை அந்த பகுதியிலேயே சிலர் சமைத்து சாப்பிட்டு விடுவார்கள். சிலர் வீட்டிற்கு எடுத்து செல்வார்கள்.

தர்மபுரி, கேரளா போன்ற தொலை தூரத்தில் இருந்து வந்துள்ளவர்கள் இங்கேயே சமைத்து சாப்பிட்டு 3 நாட்கள் தங்கி இருப்பார்கள். நேற்று காலை 2ம் நாள் போட்டிகள் தொடங்கியது. காலையிலேயே 5 ஆயிரம் சேவல்கள் போட்டிக்கு வந்திருந்தன. மாலை 6 மணி வரை போட்டி நடந்தது. 2 நாட்கள் நடந்த சேவல் சண்டையை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். இவர்கள் ஆங்காங்கே குழு, குழுவாக நடந்த போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சேவல் சண்டை இன்றும் நடக்கிறது.

SOPAக்கு எதிர்ப்பு தெரிவித்து Wikipedia அதிரடி முடிவு



சமூக தளங்களை பார்த்து இப்பொழுது உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கலங்கி போய் உள்ளன. ஏற்க்கனவே இந்த சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளது. இந்த வரிசையில் அமெரிக்க அரசாங்கமும் குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்யும் SOPA (Stop Online Piracy Act) என்ற புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி பிரபல இணைய நிறுவனங்களான Facebook, Google, Twitter, LinkedIn, wikipedia போன்ற அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இப்பொழுது அடுத்த கட்டமாக SOPA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து Wikipedia நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது 17.01.2012 புதன் கிழமை Wikipedia தளம் செயல்படாது என Wikipedia உரிமையாளர் ஜிம்மி வேல்ஸ் தனது Twitter-ல் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே இந்த போராட்டத்தில் Reddit தளமும் 12 மணி நேரத்திற்கு முடக்கப்படும் என அந்த தளம் அறிவித்து உள்ளது. இப்பொழுது அந்த போராட்டத்தில் Wikipedia தளமும் பங்கு கொண்டுள்ளது. Wikipedia தளம் 300 மொழிகளுக்கு மேல் சேவையை வழங்கினாலும் ஆங்கில பதிப்பு தான் உலகளவில் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஏதேனும் முக்கிய தகவலை Wikipedia-வில் அறிய வேண்டுமென்றால் இன்றே பார்த்துக் கொள்ளுங்கள். 17.01.2012 இந்த தளம் வேலை செய்யாது.