Pages

7 Feb 2012

டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை


இந்தப் பதினெட்டு மாதக் குழந்தையின் அசாத்தியச் செயல் அனைவரின் கண்களையும் உயர்த்த வைத்துள்ளது.உலகின் மிகவும் இளமையான செப்பில் டென்னிஸ் நட்சத்திரமாக இந்தக் குழந்தை இருக்கின்றது.
Jamie Myskova-Buddell என்ற இந்தக் குழந்தை தனது அப்பாவுடன் தான் விளையாடும் போது ஒரு கலக்கு கலக்குகின்றது.
எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த சுட்டிக் குழந்தையின் அசாத்திய வீடியோவை…

Facebook-ல் அப்துல் கலாம்


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தற்போது பேஸ்புக்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். இன்றைய இளைஞர்களின் முகமாக மாறிப் போயுள்ள facebook-ல் கலாமின் கருத்துக்கள் அவ்வப்போது இடம் பெற்று அவரது ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் இந்த facebook ஹிட்டாகியுள்ளதாம். கலாம் தொடர்பாக ஏற்கனவே பல facebook பக்கங்கள் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாகவே தானே facebook குளத்தில் குதித்துள்ளார் கலாம்.
http://www.facebook.com/OfficialKalam என்பதுதான் கலாமின் facebook முகவரியாகும். உருவாகி சில தினங்களே ஆனாலும் கூட விருப்பதாரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டி ஓடி விட்டது.
தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அதில் பேசிய பேச்சுக்கள், அது தொடர்பான புகைப்படங்கள், இளைஞர்களுக்கும் இந்தியர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள் என தனது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் கலாம் இந்த facebook-ல்.
தான் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்று ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறியபோது, அதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் வெளியான கார்ட்டூனையும் கூட போட்டு அசத்தியுள்ளார் கலாம்.
ரொம்ப அருமையாக உள்ளது இந்த பக்கம், போய் ஒரு எட்டுப் பார்த்து விட்டு வாருங்கள்…

புதிய தொழில் நுட்பத்தை லேப்டாப்பில் புகுத்தும் ASUS


சிறந்த Graphics processing Unit கொண்ட லேப்டாப்புகள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. அதனால் இப்போது நிறைய நிறவனங்கள் இந்த வகையான Tablet மற்றும் லேப்டாப்புகளைத் தயாரிப்பதில் மிகத் தீவரமாக இருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட டிவைஸ்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த softwares தேவைப்படும்.

மிகவும் சக்தி வாய்ந்த டிவைஸ்களைப் பார்த்தால் ஆசஸை மறக்க முடியாது. ஏனெனில் Asus Transformer Prime ஒரு மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் நடுத்தர மற்றும் உயர் தர கேம்களை support செய்கிறது. தற்போது கேமிங் வசதியை முழுமையாக சப்போர்ட் செய்யும் புதிய நோட்புக்கைத் தயாரிக்க இருக்கிறது Asus. அந்த நோட்புக்கில் மைக்ரோசாப்ட்டின் connect motion sensing controller என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த இருக்கிறது. 

குறிப்பாக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் Asus பல முறை வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக லேப்டாப்பில் என்விடியாவின் 3D vision sensor பயன்படுத்துவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அதை தனது நோட்புக் பேசிலில் மிக எளிதாகப் பயன்படுத்தியது.

ஆகவே இப்போது Asus connect தொழில் நுட்பத்தை தனது நோட்புக்கில் பயன்படுத்த இருக்கிறது. குறிப்பாக தனது பேசில் நோட்புக்கில் உள்ள கண்ட்ரோலரில் உள்ள கேமரா மற்றும் சென்சார்களை அகற்றி விட்டு இந்த புதிய தொழில் நுட்பத்தை இணைக்க இருக்கிறது. எனவே வரும் புதிய டேப்லெட் நிறைய சென்சார்களோடு மிகவும் ஸ்டைலாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் Asus-ன் லேப்டாப்பில் அருமையாக கேம் விளையாடலாம்.

8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம்






புனேயில் உள்ள அபிநவ் வித்யாலயா ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சாதனையாளர் பெயர் விக்னேஷ் சுந்தர்ராஜன். இவர் http://www.zettaconnect.co.in/index.php/en/ என்ற புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது Facebook போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை இணைப்பதே நோக்கம் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.

நான்கு மாதங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு இந்த புதிய சமூக வலைதளத்தை அவர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த Zettaconnect லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். 14 வயது நிரம்பிய விக்னேஷின் முயற்சியும் பெரிய வெற்றியை தேடித் தரட்டும் என்று வாழ்த்துவோம்.

மாறும் Internet முகவரி அமைப்பு


இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.
இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது.  நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.

IPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.

You tube வீடியோக்களில் விளம்பரங்களை தவிர்க்க


இணையத்தில் வீடியோக்களை பார்க்க பெரும்பாலானவர்கள் உபயோகிப்பது Youtube தளம். தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள இந்த தளத்தில் புதிதாக upload செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்த வீடியோக்களை பார்க்கின்றனர். குறிப்பாக இந்திய பயனர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு 55 வீடியோக்களுக்கு மேல் பார்க்கிறார்களாம்.  Youtube-ல் நாம் ஏதாவது வீடியோவை open செய்தால் முதலில் அவர்களின் விளம்பரங்கள் ஓடும். அந்த விளம்பரங்கள் முடிய குறைந்த பட்சம் ஒரு நிமிடம் ஆகும். அது வரை நாம் காத்து இருக்க வேண்டும். அந்த விளம்பரம் முடிந்த பிறகு தான் வீடியோவை காண முடியும்.

வீடியோ ஓடிக் கொண்டிருக்கும் பொழுதும் இடையில் இந்த விளம்பரம்  வீடியோ தோன்றி எரிச்சலை உண்டாக்கும்.  இந்த பிரச்சினையை தீர்த்து Youtube-ல் எந்த விளம்பர தொல்லையுமின்றி வீடியோக்கள் காண்பது எப்படி என இங்கு காணலாம்.

இதற்கு ஒரு குரோம் நீட்சி உள்ளது நீங்கள் குரோம் உலவி உபயோகித்து கொண்டிருந்தால் இந்த நீட்சியை உங்கள் உலவியில் install செய்து கொள்ளுங்கள்.இந்த நீட்சியை install செய்தவுடன் Youtube வீடியோவில் ஏதேனும் விளம்பரம் வந்தால் மேலே உள்ள சிறிய நீல நிற button அழுத்தினால் அந்த விளம்பரம் தவிர்க்கப்பட்டு விடும். நேரடியாக original வீடியோவை காணலாம்.


குரோம் நீட்சியை install செய்ய - https://chrome.google.com/webstore/detail/epbmnbdplhcomkedpjfceakddnbgfjmf


Latin America Tablet online சில்லறை வர்த்தகத்தில்



BLU நிறுவனம் Latin America Tablet சந்தையில் உள்ள ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம் உலக அளவில் online சில்லறை வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம் பல devices அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது அந்நிறுவனம் Touch book 7.0 என்ற Tablet அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த ப்ளூ Touch book 7.0 டேப்லெட்டின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இது ஒரு Android 2.2 FROYO இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 800 MHz கடிகார வேகம் கொண்ட Qualcomm MSM7227-T chipset Processor கொண்டிருக்கிறது.

7.0 inch அளவில் TFT capacitive தொடுதிரை கொண்டுள்ளது. இந்த திரை 133 ppi Pixel அடர்த்தியுடன் கூடிய 480 x 800 pixel resolution கொண்டிருக்கிறது. இதன் RAM memory 512 எம்பி ஆகும். அதுபோல் இதன் ROM memory 512 எம்பி ஆகும். இந்த மெமரியை micro SD card  மூலமாக 32 GB வரை அதிகரிக்க முடியும்.

Class 12 (4+1/3+2/2+3/1+4 slots), 32 - 48 kbps GPRS, EDGE, HSDPA, 7.2 Mbps; HSUPA, 5.76 Mbps 3G, WLAN, A2DP இணைப்புடன் கூடிய bluetooth v2.1, micro USB  மற்றும் GPS போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் அளிக்கிறது.

இதன் முக்கிய கேமரா 2048×1536 (3.15 எம்பி) pixels கொண்டிருக்கிறது. இதில் வீடியோ பதிவை செய்ய முடியும். அதுபோல் துணையாக VGA கேமராவும் இதில் உண்டு. மின் திறனிற்காக இந்த ப்ளூ டேப்லெட் 4250 mAh Li-Ion battery கொண்டுள்ளது. இந்த பேட்டரி இந்த டேப்லெட்டுக்கு 500 மணி நேர standby time, 12 மணி நேர இயங்கு நேரத்தையும் அளிக்கிறது என நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 197மிமீ x 120 மிமீ x 13.2 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடை 382 கிராம் மட்டுமே. இந்த டேப்லெட்டின் விலை ரூ.12,000 ஆகும்.