Pages

16 Dec 2011

Wikipediaவில் ஒவ்வொரு நொடிக்கும் என்ன நடக்கிறது என நேரடியாக காண - Wiki Stream

Wikipedia என்பதற்கு பதில் தகவல்களின் களஞ்சியம் என்று இந்த தளத்தை கூறலாம். நமக்கு எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் இணையத்தில் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. இந்த தளத்திற்கு சென்று தேடினால் நிச்சயம் அதற்க்கான பதில் கிடைக்கும். இந்த Wikipedia தளம் பல மொழிகளில் தகவல்களை வழங்குகிறது. ஒவ்வொரு நிமிடதிறக்கும் பல நூற்றுகணக்கான புதிய தகவல்கள் பதிவேற்றப்படுகிறது. இந்த விக்கிபீடியா தளத்தில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது. என்னென்ன புதிய தகவல்கள் பகிரப்படுகிறது..

இதற்க்கு Wikistream என்ற ஒரு புதிய தளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்றால் Wikipedia தளத்தில் என்னென்ன புதியதாக பதிவேற்ற படுகிறது என்பதை அதற்க்கான link காட்டுகிறது இந்த தளம்.

 


இந்த தளத்தில் Wikipedia அனைத்து மொழிகளிலும் புதியதாக என்ன பதிவேற்றி உள்ளது என காட்டி கொண்டே இருக்கும். அந்த linkல் click செய்தால் அதற்க்கான Wikipedia பதிவு திறக்கும். 
மற்றும் இதில் குறிப்பிட்ட ஒரு மொழியில் வெளியாகும் புதிய பதிவுகளை மட்டும் பார்க்க விரும்பினால் இடது ஓரத்தில் உள்ள All Wikipedias என்பதை click செய்து குறிபிட்ட மொழியை தேர்வு செய்தால் அந்த மொழியில் வெளியாகவும் புதிய பதிவுகளை மட்டும் காணலாம் 
 


தொடர்ந்து Wikipedia படிப்போம் புதிய புதிய தகவல்களை அறிந்து கொள்வோம். 
இந்த தளத்திற்கு செல்ல - http://inkdroid.org:3000/ 

மின்னஞ்சலில் தினமும் புத்தகம் படிப்பதற்கு….

உலகில் புத்தகம் விரும்பிகள் அதிகம். புத்தகங்களை அலைந்து வாங்கிய காலம் மாறிவிட்டது. இப்போது புத்தகம் படிப்பதற்கு மிகச்சுலபமான வழியைக் காட்டுகிறது dripread இணையதளம்.
ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்தத் தளத்தை நாடலாம். ஆனால் உடனடியாக இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக. அது இந்தத் தளத்தின் சிறப்பு. அதாவது தினமும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிக் கொண்டே இருக்கும்.
மின்னஞ்சல் வாயிலாக நினைவுப்படுத்தியது போலவும் இருக்கும், மின்னஞ்சல் மூலமே படித்தது போலவும் இருக்கும். இதற்காக அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை. தளத்தில் நுழைந்து எந்தப் புத்தகம் தேவையோ அதனை தெரிவு செய்து  மின்னஞ்சல் முகவரியை சமர்பித்தால் போதும். அதன் பிறகு நாள் தோறும் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாக மின்னஞ்சலில் வந்து சேரும். தினமும் மின்னஞ்சல் பெட்டியை திறக்கும் போது புத்தகத்தின் அன்றைய பகுதியையும் படித்து முடித்து விடலாம்.
வழக்கமான புத்தகத்தளத்தில் உள்ளது போல ரகம் வாரியாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பிடித்தமானதை தெரிவு செய்து கொள்ளலாம். எல்லாமே E-book வடிவிலானவை.
இந்தப் பட்டியலில் உள்ளவை தவிர நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட புத்தகத்தை படிக்க விரும்பினாலும் அதனை இங்கே சமர்பித்தால் தினமும் மின்னஞ்சலில் ஒவ்வொரு பக்கமாக வந்து சேரும். புத்தகப் பிரியர்களுக்கு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த சேவை என்பதில் சந்தேகமில்லை.
அந்தக் காலத்தில் தொடர்கதை படிப்பது போல இந்தக் கால மெகா சீரியல் பார்ப்பது போல படிக்க விரும்பும் புத்தகத்தை நிதானமாக ஆனால் நிச்சயமாக படித்து முடித்து விடலாம்.  இணையதள முகவரி
http://www.dripread.com/

Android மொபைல்களுக்கான VLC Media Player இலவச மென்பொருள்

அனைவருக்கும் VLC Media Player பற்றி தெரிந்திருக்கும்.  பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் இலவச Media Player மென்பொருள். இந்த VLC மென்பொருள் வெறும் பிளேயராக மட்டுமில்லாமல் பல்வேறு மறைமுக வசதிகளையும் கொண்டுள்ளது. கணினிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த VLC Media Player தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தவும் வந்து விட்டது. இந்த VLC Media Player மென்பொருள் Video Lan நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு open source மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருள் open source என்பதால் இதனை மாற்றி அமைத்து Android மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.




இந்த Android மென்பொருளில் NEON மற்றும் NENEON என்ற இரு பதிப்புகள் வெளிவந்துள்ளது. உங்கள் மொபைல்களில் Processor வகைகளைப் பொறுத்து இந்த பதிப்புகள் இயங்குகின்றன.




இந்த மென்பொருளைப் பற்றி மேலும் அறிய மற்றும் NEON AND NENON பதிப்பை download செய்ய – http://cvpcs.org/blog/2011-09-18/videolan_for_android_pre-alpha






Google + பயனாளரை தேடிக் கொடுக்கும் தளம்

சமூக இணையதளங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது Google + Facebook பயனாளர்களைத் தேட பல வழிகள் இருக்கிறது. ஆனால் Google + பயனாளர்களைத் தேடுவது சற்று சிரமமக இருந்து வந்தது. Google +ல் இருக்கும் பயனாளர்களை எளிதாக சில நொடிகளில் தேடிக் கொடுப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் windowவில் Search என்ற கட்டத்திற்குள் Google +ல் இருக்கும் பயனாளர் பெயர் தொடர்புடையதை வார்த்தையை தட்டச்சு செய்ய ஆரம்பித்த உடனே Google +ல் பயனாளரை தேடி நமக்கு எளிதாக காட்டுகிறது.
இதிலிருந்து நாம் தேடும் நபரை எளிதாக கண்டுபிடிக்கலாம். பயனாளரின் அடிப்படை தகவல் மற்றும் அவர்களின் பெயரின் அடிப்படையில் தேடிக்கொடுக்கும். இந்தத் தளம் Google +ல் இருக்கும் மக்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க உதவும். இணையதள முகவரி http://www.findpeopleonplus.com/

Facebook Account Deactivate செய்வது எப்படி?

இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது Facebookகாகத் தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய Facebook கணக்கை செயலிழக்கச்
செய்ய நீங்கள் நினைக்கலாம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். உங்கள் கணக்கை யாராவது hack செய்தாலோ, தளதினால் நேரம் வீணாகச் செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட account வைத்திருப்பதால் ஒன்றைச் செயலிழக்க வைக்க நினைக்கலாம். இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். Facebook கணக்கை எப்படிச் செயலிழக்க வைப்பது எனப் பார்ப்போம்.
  • முதலில் Facebook தளத்திற்குச் சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பிறகு Account Settings பகுதிக்குச் செல்லுங்கள்.
  • Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும் அதில் Securityஐ  click செய்யவும்.
  • Security click செய்தவுடன் வரும் windowவில் கீழே இருக்கும் Deactivate your accountஐ click செய்யவும்.
  • அடுத்து இன்னொரு window வரும். அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில optionகள் காட்டும். அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.
  • Email opt out என்ற இடத்தில் Tick mark கொடுக்கவும் (டிக் பண்ணாமல் விட்டால் Facebookல் இருந்து Invitations, Notifications, Email வந்து கொண்டே இருக்கும்)
  • அடுத்து  Confirm buttonஐ  அழுத்தவும். அடுத்து இந்தக் கணக்கின் password கேட்கும். அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup window வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit buttonஐ அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதைப்  போல window வரும்.
உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது open செய்தால் கீழே கண்ட செய்தி தான் வரும்.




உலகின் ஆபத்தான 25 Passwordகள்

இணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். இந்தச் செயலைத் தான் hacking என அழைக்கிறோம். இந்தச் செயலினால் மிகப் பெரிய தளங்கள் கூட பாதிக்கப்படுகின்றன.  ஆதலால் நம்முடைய password மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்க வேண்டும். உங்கள் password Letters, numbers, special characters ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.
கடினமான password உருவாக்க பல மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data  நிறுவனத்தினர் மிக ஆபத்தான 25 passwordகளை வெளியிட்டு உள்ளனர்.
உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:
     1.  password
     2.  123456
3.  12345678
4.  qwerty
     5.  abc123
      6.  monkey
      7.  1234567
       8.  letmein
       9.  trustno1
      10.  ragon
     11.  baseball
      12.  111111
      13.  iloveyou
      14.  master
      15.  sunshine
    16.  ashley
    17.  bailey
    18.  passwOrd
    19.  shadow
    20.  123123
    21.  654321
    22.  superman
    23.  qazwsx
   24.  michael
  25.  football

மேலே உள்ள இந்த 25 passwordகள் தான் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் passwordகளை நீங்கள் வைத்தால் Hackerகள் சுலபமாக உங்களின் passwordஐ அறிய முடியும். உங்களின் password எப்படி இருக்க கூடாது என இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? நீங்கள் மேலே உள்ள passwordகாளை உபயோகித்தால் உடனே மாற்றி விடுங்கள்.

இணைய உலக வரலாறு

1957ல் USSR “Sputnik” என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA போட்டா போட்டியாக (பனிப்போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET).இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்பட்ட கால பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும். இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது.

இணையம் பல பரிமாணங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது. இருந்த போதிலும் இந்த தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.

1969ல் இரு கணினிகளுக்கிடையில் “Log-in” என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.

1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்கழகங்களை இணைத்தனர்.

1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி காட்டப்பட்டது. UK ஆண்டு ஸிறி ஐ சேர்ந்த விஞ்ஞானி முதலாவது e-mail ஐ @ உடன் வடிவமைத்து வெற்றி கொண்டார்.

1973 ARPANET ஆனது DARPA என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது கருத்துக்கோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம கடைப்பிடிப்புக்கள் உருப்பெற்றன. (TCP/IP) 1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது.

1976இல் முதலாவது மின் அஞ்சல் e-mail பிரித்தா¡னிய மகாராணியினால் அனுப்பப்பட்டது மட்டுமல்லாமல் இவரே முதலில் e-mail அனுப்பிய அரச தலைவருமாவார்.

1982 முதல் முதலாக “internet” சொற்பிரயோகம் பிறந்ததுடன் (.) என்ற குறியீடு இணைக்க தொடங்கப்பட்ட வருடம்.

1984 இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொடங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.

1985 AOL, .com, .edu, .gov உதயம்

1986 .net அறிமுகம்

1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம் தொடர்ந்த ஆண்டு.

1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணினிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது.

1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம் Tim Berners-Lee தனது இணைய ஆராச்சியின் விளைவாக கணினிகள் பேசும் இணைய மொழியை (HTML) வெளியிட்டதுமல்லாமல் www. ஐயும் நிறுவினார்.

1990ல் world.std.com தனது dial-up சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக நோக்கிலான இணைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில் இருப்பது கணக்கிடப்பட்டது.

1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு “www” நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது.

1992 இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1993 இணைய வானொலி, இணையத்தள பேசுமொழி பரிமாற்றி அமுலாக்கி (http) அறிமுகத்தோடு சீosaiணீ உதயம்.

1994 இணையம் பிறந்து 25வருடம் பூர்த்தி கொண்டாட்டம், அத்துடன் இணைய உலகின் பிரபல்யமான yahoo, amazon, w3c, netscape அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1995 புகழ்பெற்ற கணினிஇணைய இயக்கிகள் Internet Explorar mozilla வருகை, இணைய வர்த்தகத்தில் அழியா புகழ்பெற்ற e-bay (இன்று வரை 223 மில்லியன் மேலான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்) வெளியானதோடு java, java script அறிமுகமானது. இவற்றோடு Alta Vista, Mp3 என பல புரட்சி வருகை கண்ட வருடம்.

1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி, இணைய உலகில் தகவல் பெற என்றும் தட்டப்படும் wiki,Alexa என்பவற்றின் வருகை tv.com விற்கப்பட்டது ($15,000) இணைய உகலகில் 1.7 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1997 தொடுப்பில்லா தொடர்பு (WAP) அறிமுகம், Business.com விலைபோனது ($150,000) இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த விலையில் dmoz.org ஐ கொள்முதல் $ ஒரு மில்லியன்) செய்தனர்.

1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப் பெரிய விலைக்கும் ( $4.2 பில்லியன்கள். மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் Alta vista ஐயும் ($3.3 மில்லியன்) கொள்முதல் செய்தன.

1999 இந்த ஆண்டில் my space, paypal இவற்றின் வருகையுடன் “Blog” என்ற சொற்பிரயோகம் நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $ 250 மில்லியன்களை கொடுத்தது.

2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16 பில்லியன்களை கொடுத்து ஹிiசீலீ warnலீr ஐ சொந்தமாக்கியது.

2001மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன் (Virus of the year). biz,info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக்களஞ்சியமான wikipலீனீia பிறந்ததும் இந்த ஆண்டில்தான்.
2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியன்களை தாண்டியது. RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.

2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் iTune அறிமுகமானது இந்த ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol- microsoft தீர்ப்பானது. AOL இற்கு $ 750 மில்லியன் நஷ்டஈடாக கொடுத்ததுடன் Netscape இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி செய்த வருடம் இதுதான்.

2004 கணினி இணைய இயக்கி FireFox பிறந்ததுடன் இணைய தளமூடான வர்த்தக வருவாய் $ 117 பில்லியங்களையும் தாண்டியது.

2005 இணைய உலகின் பெயர்பெற்ற Video தளம் YouTubeஉருவானது.

2006 Google தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை கொடுத்து youtube ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலாக இணையதளங்கள் வலம் வந்தன.

2007 30th September எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி உலக இணையதள users எண்ணிக்கை 1,244,449,601ஐயும் தாண்டி சாதனை தொடர்கிறது