வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அதாவது நம் வீடியோவை எடிட் செய்து Hollywood தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது. வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் இந்த மென்பொருள் சிறந்த ஒன்று என்றே கூர வேண்டும். கீழே உள்ள தளத்திற்கு சென்று சென்று Download now என்பதை click செய்தவுடன் இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இந்த மென்பொருள் open source தான். தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். Hollywood தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் ஆகும். பலவிதமான நுணுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது. ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்யத் தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். மென்பொருள் தறவிரக்க முகவரி http://www.lightworksbeta.com
31 Dec 2011
Hollywood தரத்தில் வீடியோ எடிட்டிங் செய்ய மென்பொருள்

CCleaner-க்கு மாற்றாக மென்பொருள்
கணினியில் உள்ள குப்பைகளை நீக்க பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுவது சிகிளினர் ஆகும். கணினியில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்க இன்னும் இதுபோன்ற பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஆப்கிளினர் இந்த மென்பொருள் சிகிளினரை விட சிறந்த மென்பொருள் என்று கூறமுடியாவிட்டாலும் அதனுடன் போட்டி போடும் அளவிற்கு சிறப்பான மென்பொருள் ஆப்கிளினர். மென்பொருளை தரவிறக்க http://client.updatestar.com/en/appcleaner/overview/ மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
இந்த மென்பொருள் அளவில் சிறியதாகும். இதுஒரு இலவச மென்பொருள் ஆகும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் Cleaner என்னும் டேப்பினை தேர்வு செய்து Analyze என்னும் பொத்தானை அழுத்தி கணினியில் உள்ள குப்பைகளை முன்னோட்டம் பார்த்து பின் Clean என்னும் பொத்தானை அழுத்தி குப்பைகளை நீக்கிக் கொள்ளவும். மேலும் இந்த மென்பொருள் மூலம் கணினியில் நிறுவிய மென்பொருளையும் நீக்கிக் கொள்ள முடியும். Windows registryயில் தேங்கியுள்ள குப்பைகளை நீக்கவும் தனியே இந்த மென்பொருளில் வசதி உள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

கடல் மட்டம் 2 அடி உயரும் அபாயம் ஆராய்ச்சியாளர்கள் தகவல்
பூமி வெப்பமயமாகி வருவதால் அடுத்த 90 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என கோபன்ஹெகன் University ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் carbon-di-oxide மற்றும் இதர சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதனால் Atlantic கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 2 அடியும், அதற்கடுத்த 4 ஆண்டுகளில் 6 அடியும் உயரும். இதனால் கடற்கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடல் மட்டம் சில இடங்களில் உயர்வதாலும், சுனாமி ஏற்படுவதாலும் சிறிய தீவுகள் காணாமல் போவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
WinZip புதிய பதிப்பு 16
பழைய சிறப்பு வசதிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இமேஜ்கள் 25% சுருக்கப் படுகின்றன. பாதுகாப்பு தரும் வகையில் AES encryption மற்றும் password பயன் படுத்தும் வசதி கிடைக்கிறது.
சுருக்கப்பட்ட file பெரியதாக இருந்தால், இமெயிலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It இணைய தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி. சுருக்கப்பட்ட பைல் அனுப்பப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே Zip Send Pro பயனாளர் என்றால், இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. அடுத்த புதிய வசதி Zip Share. இதன் மூலம் ஸிப் செய்யப்பட்ட பைலை cloud computing வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான link ஒன்றை Facebook தளத்தில் நம் நண்பர்கள் download செய்திட வசதியாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் “Zip to Bluray” என்ற ஒரு வசதி கிடைக்கிறது. காத்து வைத்திட சுருக்கப்பட்ட dataவினை 50 GB அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் இதன் மூலம் பதிய முடியும். புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தத்தில், ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள WinZip programmeல் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது.
Notepad 7 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
நீண்ட காலமாக Windows கணினியல் இருக்கும் Notepad-ன் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது.
இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7 என்ற இலவச மென்பொருள் கிடைக்கின்றது. Microsoft 2010 MS Office-க்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே Notepad 7 வெளியிடப்படுகின்றது.
Notepad-ல் இருக்கும் வழமையான வசதிகளுடன் தேவையான button மற்றும் Tool barகளை முகப்பில் தெரியுமாறு customize செய்துவிடலாம். தரவிறக்க முகவரி http://www.skyforu.info/notepad7/
Bio Gas-ல் இயங்கும் Bike நியோ
30 Dec 2011
Slacko 5.3
OpenSource இலவச இயங்குதளங்களின் வரிசையில் வந்த ஓர் இயங்குதளமான பப்பி லினக்ஸ் தனது அடுத்த பதிப்பை வெளியிட்டுள்ளது.Slacko 5.3 என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இதன் புதிய பதிப்பு பல மெருகூட்டப்பட்ட வசதிகளையும் உள்ளடக்கப்பட்டதாக வந்துள்ளது. இதன் கொள்ளளவு வெறும் 126 MBகளே. இதை உங்கள் கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கணினியில் வேறோர் இயங்குதளம் நிறுவப்பட்டிருக்கும் போதே இதனை CD மூலமாக பயன்படுத்தலாம். சிடியில் இருந்து பாவிக்கும்போது செய்யும் மாற்றங்களை pen drive அல்லது வேறு சேமிப்பகங்களிலோ சேமித்து வைத்துவிட்டு அடுத்த தடவை பாவிக்கும்போதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன் தளம் செல்ல http://puppylinux.org/main/Download%20Latest%20Release.htm
AVG Antivirus 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
AVG புதிய Antivirus மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் AVG Antivirus 2012. இது மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் உலகின் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படுகின்ற இலவச மென்பொருளாகும். இது பல புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது முந்தைய பாதிப்புகளை விட 20% குறைவான நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. இதனை பதிவிறக்கம் செய்ய
http://download.cnet.com/AVG-Anti-Virus-Free-Edition-2012/3000-2239_4-10320142.html
http://download.cnet.com/AVG-Anti-Virus-Free-Edition-2012/3000-2239_4-10320142.html
29 Dec 2011
Gmail Shortcut Keys
Google நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் G-Mail பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதை இன்னும் எளிதாக உபயோகிக்க இங்கே Shortcut கீகள் தெரிந்து இருந்தால் நல்லது. இதில் முக்கியமானதை மட்டும் தொடுத்துள்ளேன். இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள் உங்கள் Gmail account சென்று

இந்த மாற்றங்கள் செய்த பிறகே உங்களுக்கு கீழே Shortcut keys வேலை செய்யும். மாற்றத்தை செய்து விட்டு உபயோகித்துப்
பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
- Settings
- General
- Key board Shortscuts on
- Save Changes -உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளுங்கள்.
இந்த மாற்றங்கள் செய்த பிறகே உங்களுக்கு கீழே Shortcut keys வேலை செய்யும். மாற்றத்தை செய்து விட்டு உபயோகித்துப்
பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
Keyboard Shortcuts | Function |
| C | Compose new Mail |
| N | Next Mail |
| P | Previous Mail |
| ! | Report as a Spam |
| R | Reply to the Message |
| A | Reply to All |
| F | Forward that message |
| # | Delete the Message |
| / | Puts your cursor in Search box |
| O | Opens Recent Message |
| U | Automatically comes to inbox |
| S | Star a message |
| V | Move to |
| Shift+I | Mark as Read |
| Shift+U | Mark as Unread |
| Q | Move to your Cursor in Chat Search |
Facebook-ல் வேண்டாத நபரை தடை செய்ய
Facebook வாசகர்கள் அவர்களின் நண்பர்களிடம் தான் விஷயங்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. தெரியாத முகங்களைக் கூட சுலபமாக நண்பர்களாக்கிக் கொள்ளலாம். இந்த facebook-ல் எப்படி வேண்டாத ஒரு நபரை தடை செய்வது என்று பார்ப்போம்.
- இது போல் தடை செய்து விட்டால் அவரால் நம்மை தொடர்பு கொள்ளவே முடியாது.
- நாம் பகிரும் எந்த செய்தியும் அவருக்கு update ஆகாது.
- அவரின் பகிர்தலும் நமக்கு வராது.
- முதலில் உங்கள் facebook account-ல் நுழைந்து கொள்ளுங்கள்.
- அங்கு கணக்கு (Settings) பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள்(Privacy Settings) என்பதை click செய்யுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும். அதில் உள்ள தடை செய்ய பட்டுள்ளவர்கள் என்பதில் உள்ள blocked people and applications என்பதை click செய்யவும்.
- இப்பொழுது உங்களுக்கு இன்னொரு window வரும். அதில் பெயர், மின்னஞ்சல் என்ற இரு கட்டங்கள் இருக்கும் அதில் நீங்கள் தடை செய்ய விரும்போவோரின் பெயரை கொடுத்து Block this User என்ற button அழுத்தினால் அந்த பெயரில் உள்ள வர்களின் பட்டியலை உங்களுக்கு காட்டும்.
- இதில் உங்களுக்கு வேண்டாதவரை தேர்வு செய்து அதற்கு நேராக உள்ள Block என்பதை click செய்தால் அவர் தடை செய்யபட்டியலில் வந்து விடுவார்.
- அல்லது மின்னஞ்சலோ கொடுத்து Block this User என்ற பட்டனை அழுத்தினால் போதும் அவர்கள் நேரடியாக தடை செய்யப்பட்டு விடுவார்கள்.
- இனி உங்களின் எந்த விவரங்களையும் அவரால் பார்க்க முடியாது.
- ஒருவேளை பிறகு நீங்கள் அவரை இந்த பட்டியலில் இருந்து நீக்க விரும்பினால் அவரின் பெயருக்கு நேராக உள்ள Unblock link அழுத்தினால் அவர் இந்த பட்டியலில் இருந்து நீக்க படுவார்.
28 Dec 2011
Digital Camera வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் இணையம்
புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கமெரா எதுவென்று தெரியாமல் இருக்கும். ஒரு நாட்டில் கிடைக்கும் Cameraக்கள் மற்றொரு நாட்டில் கிடைப்பதில்லை என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஆம் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நிறுவனத்தின் cameraவையும் நாம் வாங்க முடியும். நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த camera எது என்பதை நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது.புகைப்படம் எடுப்பதற்காக camera வாங்கினாலும் அதில் குறிப்பிட்டு நம் தேவையைச் சொல்லி அதற்கான cameraவை வாங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதம் தான். என்ன தேவைக்காக பயன்படுத்தப் போகிறோம், விலை எவ்வளவுக்குள் இருக்க வேண்டும் என்று கொடுத்து தேடினால் பல வகையான நிறுவனங்களின் cameraவை காட்டும். ஒவ்வொரு cameraவிலும் இருக்கும் சிறப்பம்சம் என்ன என்பதையும் அதை மற்ற நிறுவத்தின் cameraவுடன் ஒப்பிட்டும் காட்டும்.
தற்போது சந்தையில் இருக்கும் அனைத்து வகையான cameraக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம். சில cameraக்களின் செயல்படும் விதம் கூட வீடியோ காட்சிகளாக இத்தளத்தில் காட்டப்படுகிறது. தளத்தின் முகவரி http://snapsort.com/
Facebook-ல் குறிப்பிட்ட நண்பர்களின் புகைப்படத்தை மட்டும் முதலில் காட்ட
சமூக தளமான Facebook நம் நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்ளவும், நம்முடைய செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் ஒரு பாலமாக அமைந்து உள்ளது. நாம் Facebook-ல் ஒவ்வொருமுறை செல்லும் போதும் நண்பர்கள் பகுதியில் வேறுவேறு படங்களை காட்டும். Facebook-ல் எப்போதும் குறிப்பிட்ட நபர்களின் படங்கள் தான் தெரிய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதற்கும் Facebook-ல் ஒரு வசதி உள்ளது.
- முதலில் உங்கள் Facebook account-ல் நுழைந்து கொள்ளுங்கள்.
- அங்கு உங்கள் நண்பர்களின் படங்கள் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு ஒரு சிறிய பென்சில் போன்ற link இருக்கும். அதை clik செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
அங்கு காலியாக உள்ள கட்டத்தில் உங்களுக்கு தெரியவேண்டிய நண்பர்களின் பெயரை type செய்யவும்.
- நீங்கள் முதல் எழுத்தை type செய்தவுடன் அந்த எழுத்தில் உள்ள உங்கள் நண்பர்களின் பெயர்கள் காட்டும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளவும்.
இது போல நீங்கள் தேர்வு செய்யும் பெயரும் இதில் சேர்ந்து கொண்டே வரும்.
- இது போல உங்களுக்கு தேவையானவர்களை நீங்கள் தேர்வு செய்ததும் அவர்களின் படங்கள் வரிசையாக காண்பிக்கப்படும்.
- இனி எப்பொழுது உங்கள் பக்கத்தை திறந்தாலும் நீங்கள் தேர்வு செய்தவர்களின் புகைப்படங்கள் தான் முதலில் வரும்.
- இன்னொரு வசதி: படங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
சாதரணமாக நம் Facebook-ன் நண்பர்கள் பகுதியில் ஆறு படங்கள் மட்டுமேதெரியும். அதை மாற்றி 12 படங்கள் தெரியவைக்கலாம். அதில் இருக்கும் 6 என்பதை click செய்து உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் அதிக பட்சம் 12 படங்கள் வரை பொருத்திக் கொள்ளலாம்.
HTML Comparison Table உருவாக்க
இரண்டு பொருளுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை காட்டுவதற்கும், அல்லது இரண்டு இடத்திற்கு உள்ள வித்தியாசங்கள் காட்டவும் நமக்கு பயன்படுவது இந்த Comparison Table ஆகும். அழகான Comparison Table உருவாக்க இதுவரை போட்டோஷாப் மென்பொருளையே பெரும்பாலும் உபயோகிக்க படுகிறது. ஆனால் இன்று நாம் ஒரு சுலபமான முறையில் comparison table உருவாக்குவது எப்படி பார்ப்போம். இதற்க்கு கோடிங் எழுத வேண்டிய அவசியமில்லை ஒரே நிமிடத்தில் அதை உருவாக்கி விடலாம். எந்த தொழிநுட்ப அறிவும் பெற்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழே உள்ள Comparison Table பாருங்கள்.
Comparison Table உருவாக்குவது எப்படி?

அடுத்து உங்களுக்கு Table பக்கம் open ஆகிவிடும். அதில் உங்களுக்கு விருப்பமான டேபிளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

Comparison Table உருவாக்கியவுடன் கீழே உள்ள Show Me The Code என்ற button அழுத்தினால் உங்களின் டேபிளுக்கான HTML மற்றும் CSS கோடிங்க வந்திருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை copy செய்து உங்கள் website-ல் இணைத்துக் கொள்ளுங்கள்.

இதே போன்று நீங்கள் எத்தனை Comparison Table வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
தமிழ் பதிவர்கள் vs ஆங்கில பதிவர்கள்
தமிழ் பதிவர்கள் | ஆங்கில பதிவர்கள் | |
பதிவின் தரம் | ||
நட்பு | ||
வருமானம் | ||
வாசகர்களை மதித்தல் | ||
தொடர்ந்து பதிவிடல் | ||
பதிவர்கள் சண்டை | ||
பதிவர்கள் ஒற்றுமை |
- முதலில் இந்த http://www.compareninja.com/ தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். பிறகு Home பகுதிக்கு சென்று START NOW என்ற button அழுத்தவும்.
- முதலில் உங்கள் டேபிளின் தலைப்பை கொடுத்து மற்ற விவரங்களை கொடுக்கவும்

- Next button அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும் .அதில் உங்கள் Table தோற்றத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
- தேர்வு செய்த பின்னர் Next button அழுத்தவும்.

அடுத்து உங்களுக்கு Table பக்கம் open ஆகிவிடும். அதில் உங்களுக்கு விருப்பமான டேபிளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

Comparison Table உருவாக்கியவுடன் கீழே உள்ள Show Me The Code என்ற button அழுத்தினால் உங்களின் டேபிளுக்கான HTML மற்றும் CSS கோடிங்க வந்திருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை copy செய்து உங்கள் website-ல் இணைத்துக் கொள்ளுங்கள்.

இதே போன்று நீங்கள் எத்தனை Comparison Table வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
27 Dec 2011
கணினியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு....
கணினியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள். எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணினியிலிருந்து recover செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள்.FileWing என்ற மென்பொருள் இதையே செய்கின்றது. இந்த மென்பொருள் மூலம் நீங்கள் ஏற்கனவே அழித்துவிட்ட கோப்புக்களை recover செய்வதுடன் அவற்றை முழுவதுமாக அழித்தும் விடலாம்.
FileWingஐ முதல் முறை பயன்படுத்தத் தொடங்கும் போது unlock codeஐ பெற்றுக் கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரி தரவேண்டும்.
பின்னர் disk scan செய்ய அல்லது கோப்புக்களை, driveகளை அழிப்பதற்கென இரு optionகள் காட்டும்.
கணினியில் கோப்புக்களை முழுவதுமாக நீக்கிவிட Quick Deletion-லிருந்து shredding methodஐ தெரிவு செய்ய வேண்டும்.
GOST, DoD (E), DOD(ECE), Bruce Schneider, VSITR மற்றும் Peter Gutmann போன்ற முறைகளில் கோப்புக்களை நீக்கலாம். தெரிவு செய்த பின்னர் Delete Filesஐ அழுத்துங்கள்.
கணினியிலிருந்து அழிக்கப்படும் கோப்புக்களை recover செய்யவதற்கு scan disk option தந்து பின்னர் recover செய்யப்பட வேண்டிய இடத்தையும் தெரிவு செய்யுங்கள். தரவிறக்கம் செய்ய http://www.abelssoft.net/filewing.php
Win Zip 16 புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு......
கோப்புகளை சுருக்கி பதிந்து காப்பதில் வெகு காலமாகப் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் Win Zip. இதன் பதிப்பு 16 அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த பதிப்பில் 64 பிட் இஞ்சின் பயன்படுத்தப்படுவதால் சுருக்கி விரிக்கும் பணி தற்போது அதிக வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ளப்படுகிறது.சுருக்கப்பட்ட கோப்பு பெரியதாக இருந்தால் மின்னஞ்சலில் அனுப்புவது இயலாது. இதற்கு புதியதாக Zip Send என்ற வசதி தரப்பட்டுள்ளது. You Send It என்ற இணையத்தளத்தின் கூட்டுடன் 50 எம்.பி சுருக்கப்பட்ட கோப்பு அனுப்பப்படுகிறது.
நீங்கள் ஏற்கனவே Zip Send Pro தளத்தின் பயனாளர் என்றால் இந்த அளவு 2 ஜிபி வரை அனுமதிக்கப்படுகிறது. அடுத்த புதிய வசதி Zip Share.
இதன் மூலம் Zip செய்யப்பட்ட கோப்பை cloud computing வசதிக்கு அனுப்பி விட்டு, அதற்கான link ஒன்றை Facebook தளத்தில் நம் நண்பர்கள் தரவிறக்கம் செய்திட வசதியாக அனுப்பலாம்.
எதிர்காலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் Zip to Bluray என்ற ஒரு வசதி கிடைக்கிறது. இதன் மூலம் சுருக்கப்பட்ட தகவலினை 50 ஜிபி அளவில் ஒரு புளுரே டிஸ்க்கில் பதிய முடியும்.
புளுரே டிஸ்க் பயன்பாடு பரவலாகக் கிடைக்கையில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தத்தில் ஏற்கனவே பல வசதிகளைக் கொண்டுள்ள Win Zip programeல் கூடுதல் பயன்பாடு பல சேர்க்கப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்திட http://www.winzip.com/downwz.htm
26 Dec 2011
அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய Auto Saver மென்பொருள்
பயன்கள் :
- இந்த மென்பொருளை உபயோகிப்பதால் நாம் ஒவ்வொரு முறையும் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.
- நாம் எந்த programme-ல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அது தானாகவே சேமிக்கப்படும்.
- இந்த மென்பொருளை Install செய்யத் தேவையில்லை. நேரடியாக இயக்கிக் கொள்ளலாம்.
- சிறிய அளவே உடையது(768 kb) . தரவிறக்க
உங்களுக்கு வரும் Zip File Extract செய்து பின்னர் வரும் AutoSaver என்ற file-ஐ நேரடியாக உபயோகிக்கலாம் (Install செய்ய வேண்டியதில்லை). அந்த file-ஐ இயக்கினால் உங்களுக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
- Save Interval: இந்த windowவில் நீங்கள் உங்கள் உங்கள் பக்கங்களை Save செய்வதற்கான நேர இடைவெளியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் குறைந்தது 15 வினாடிகள் வரை தேர்வு செய்யலாம்.
- Run Windows Starts : இது உங்களுக்கு தேவையென்றால் தேர்வு செய்து கொள்ளலாம். இல்லையேல் விட்டு விடலாம். இதை தேர்வு செய்தால் உங்கள் கணினி துவக்கியதும் இது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
- முடிவில் Hide என்பதை click செய்தவுடன் அந்த மென்பொருள் மறைந்து விடும். இயங்க ஆரம்பிக்கும்.
கணினியை வேகமாக Defragment செய்ய இலவசமாக மென்பொருள்
கணினியின் செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம். Defragment என்பது நாம் கணினியில் சேமிக்கப்படும் அனைத்து பைல்களும் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்கப்படும். இவை அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதைச் செய்ய நம் கணினியிலேயே வசதி இருந்தாலும் அதில் செய்தால் வெகு நேரம் காத்துக் கிடக்க வேண்டும். வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.பயன்கள்:
1) நம் கணினியை Defragment செய்ய மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.
2) இந்த மென்பொருளை activate செய்ய serial key கொடுக்க வேண்டியதில்லை.
இதில் Auto Defrag வசதியும் உள்ளது. நாம் set செய்யும் கால இடைவெளியில் நம் கணினியை Defrag செய்து கொள்ளும்.
3) நம் கணினியில் குறைந்த அளவு இடத்தையே இயங்குவதற்கு எடுத்துக்கொள்கிறது.
4) 1.12mb அளவே உடைய மிகச் சிறிய மென்பொருள்.

டவுன்லோட் செய்ய:
முதலில் இந்த http://db.iobit.com/license-free/sd-server-free-license.php தளத்தில் செல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அந்த மென்பொருளை பற்றி உங்கள் கருத்தை கூறி பின்னர் கீழே உள்ள Verification எண்ணை சரியாக கொடுத்து FreeCopy என்ற பட்டனை அழுத்தவும்.

பின்னர் உங்களுக்கு வரும் windowவில் Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

பயன் படுத்தும் முறை:
தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் install செய்து கொண்டு அந்த மென்பொருளை open செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் install செய்து கொண்டு அந்த மென்பொருளை open செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
இதில் நீங்கள் Defragment செய்ய விரும்பும் டிரைவ் தேர்வு செய்து கொண்டு Analyze பட்டனை அழுத்தவும். உங்கள் கணினியின் fileகள் அனைத்தும் scan ஆகி என்னென்ன fileகளை Defragment செய்ய வேண்டும் என்ற செய்தி உங்களுக்கு வரும்.
அதில் உள்ள GO என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆக தொடங்கும். ஆகி கடைசியில் நமக்கு முடிவும் வரும்.
அடுத்து Auto Defrag சென்றால் நம் கணினியில் CPU usage பற்றி தெரிந்து கொள்வோம்.
Schedule க்ளிக் செய்து Auto Defrag கால இடைவெளியை தேர்வு செய்து கொள்ளவும்.
Google Chrome 16 தரவிறக்கம் செய்வதற்கு.....
காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட இலவசமாக கிடைக்கப் பெறும் மென்பொருட்களில் உள்ளது.
Google Chrome 16: இணைய உலாவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும்.
இந்த உலாவியின் எளிமையான தோற்றமும் வேகமான செயல் திறனாலும் அனைவரும் இந்த உலாவியை விரும்பி பயன்படுத்துகின்றனர். இந்த மென்பொருள் கூகுளில் தயாரிப்பு என்பது இதன் கூடுதல் பலமாகும். தற்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை chrome 16 வெளியிட்டு உள்ளனர். தரவிறக்கம் செய்ய https://www.google.com/chrome/?brand=ECBA&installdataindex=yes-apps-yes-promo

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanilla Extensions
Google குரோம் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். Cookies என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்கப்படும் ஒரு சிறிய application ஆகும். ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை தானே புகுத்திக் கொள்ள இவைகள் பயன்படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.
இணைய தளங்களில் உலாவும் போது இந்த Cookies கள் நமக்கு தெரியாமலேயே நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. புகுந்து கொண்டு நம் உலவியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்மை பற்றிய தகவல்களை அனைவருக்கும் அனுப்பி விடுகின்றன. இதில் நம்முடைய ரகசிய வங்கி கணக்கு எண்களும், passwordகளும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் மிகப் பெரிய அபாயம் உள்ளது. ஆகவே இதில் இருந்து நாம் கவனமாக இருக்க ஒரு வழி உள்ளது.
இந்த Cookiesகளை அடிக்கடி நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு மறந்துவிடும் என் வேலைகளுக்கு இடையில் எனக்கு செய்ய நேரமிருக்காது என்று கூறுகிறீர்களா. கவலையை விடுங்கள் உங்களுக்காக ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது இந்த link-ல் https://chrome.google.com/webstore/detail/gieohaicffldbmiilohhggbidhephnjj?hl=en#detail/gieohaicffldbmiilohhggbidhephnjj சென்று இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

Show Options click செய்தவுடன் கீழே இருப்பதை போல window வரும்.

- இதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்கள் உலவி ஞாபகம் வைத்து கொள்ளவேண்டிய தளங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
- கீழே உள்ள Auto delete என்ற கட்டத்தில் tick குறியிட்டு பக்கத்தை மூடிவிட்டால் போதும் இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் உங்கள் கணினியில் Cookies அழிக்கப்படும்.
- இனி நீங்கள் உங்களுக்கு தேவையான இணையப்
பக்கங்களை மட்டும் White list-ல் சேர்த்து விடுங்கள். - Auto delete ஆகும் போது இந்த Whitelist-ல் உள்ள cookies அழிக்கப்படாது மற்றவைகள் அழிக்கப்பட்டுவிடும்.
- Clear Unwanted Cookies என்று கொடுத்தால் நம்முடைய கணினியில் இதற்கு முன்னர் உள்ள அனைத்து cookiesகளும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டுவிடும்.
- Whitelist-ல் இரண்டு தளங்களை சேர்த்து இருப்பதால் அந்த இரண்டு cookies-களும் அழிக்கப்படவில்லை.
- இனி நீங்கள் பாதுகாப்பாக கூகுள் குரோமில் இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்
ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம்!
ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது பொன்மொழிகள் தான். பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திறமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள்.நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோ ஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும்.
Google சிறந்த தேடியந்திரமாக இருந்தாலும் அந்த மொன்மொழிகளை மட்டும் தனியே பிரித்து தேடுவது சிரமம். அந்த சிரமத்தை போக்க வந்துள்ளது ஒரு புதிய தேடியந்திரம்.
இந்த தேடியந்திரத்தில் சென்று அறிஞர் பெயரையோ, சரியான keyword கொடுத்தால் போதும் Enter கூட அழுத்த வேண்டியதில்லை அறிஞர்களின் பொன்மொழிகள் மட்டும் உங்களுக்கு தனியே பிரித்து காட்டும்.
இந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வார்த்தை கொடுத்து தேடினால் போதும் உங்களுக்கு அடுத்த நொடியில் பொன்மொழிகள் வந்துவிடும்.
ஒவ்வொரு பொன்மொழிக்கு அருகிலும் அந்த பொன்மொழியை சொன்ன அறிஞரின் பெயரும் இருக்கும். இது போன்று ஆயிரக்கணக்கான அறிஞரின் பொன்மொழிகளை இந்த தேடியந்திரம் நமக்கு தருகிறது. இணையதள முகவரி
http://quotecoil.com/
வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் வரை ஒளிப்படம் எடுக்ககூடிய கமெராவை கண்டுபிடித்து விஞ்ஞானி சாதனை!
Ultra Slow motion camera தான் cricket போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.இந்த வகை cameraக்கள் ஒரு வினாடிக்கு 1000 shot வரை எடுக்கக் கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் shot எடுக்கக் கூடிய cameraக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த camera மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதைக் கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன் Frames எடுக்கக் கூடிய புதிய camera இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.
இந்த புதிய cameraவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தைக் கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும். இந்த camera MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டுபிடித்துள்ளார்.
சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் smart போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
Recuva புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்
எதிர்பாராத விதமாக நம்மை அறியாமல் நாம் அழித்த கோப்புகளை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் programmeகளில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42.544 அண்மையில் வெளியாகி உள்ளது.இது ஓர் இலவச programme என்பது அனைவருக்கும் தெரியும். Directoryகளில் மற்றும் கோப்பறைகளில் இருந்து நீக்கும் கோப்புகள் மட்டுமின்றி recycle binலிருந்து நீக்கும் கோப்புகளையும் இந்த programme மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
அத்துடன் virus programme-ன் பிழையான இயக்கம் மற்றும் கணினி crash ஆகியவற்றால் நீக்கப்படும் கோப்புகளையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.
C Cleaner வழங்கும் நிறுவனமான Piriform நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதனுடைய சிறப்பம்சங்கள்:
1. மிக எளிதான interface வழியாக 'Scan' என்பதை click செய்து பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. கோப்பின் பெயர் மற்றும் வகை அடிப்படையில் மீட்கப் பட வேண்டிய கோப்புகளை வரையறை செய்திடலாம்.
3. List மற்றும் Tree வகையில் கோப்புகளைக் காணும் வசதி.
4. USB பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.
5. Office documents, Images, Video, Music, மின்னஞ்சல் என எந்த வகை கோப்புகளையும் மீட்டுத் தரும்.
6. FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை கோப்புகளையும் மீட்டுத் தருகிறது.
7. கணினியில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்கிறது.
8. ஸிப் drive, external hard drive மற்றும் USB hard driveகளில் இருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத் தருகிறது.
9. வேகமான இயக்கம் சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.
புதிய பதிப்பில்:
1. JPEG மற்றும் PNG புதிய தொழில்நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
2. Windows 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
3. Keyboard navigation-ல் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
4. பெரிய அளவிலான driveகளுக்கு கூடுதல் memory பயன்பாடு தரப்பட்டுள்ளது.
5. குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.
தரவிரக்கம் செய்திட http://www.piriform.com/recuva/download
Google + Page வசதியை மற்றவர்கள் உபயோகப்படுத்துவதற்கு!
Google + தளத்தில் Page வசதியை Google நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனியாக Page உருவாக்கலாம்.தற்பொழுது இந்த Google + பக்கத்தில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். உங்கள் Google + பக்கத்தில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்தின் மேலாளர்களுக்கோ அட்மின் வசதியை அளிக்கலாம்.
இதன்மூலம் குழு உறுப்பினர்களுக்கு அட்மின் வசதியை கொடுக்கலாம். எப்படி அட்மின் வசதி அளிப்பது என கீழே பார்ப்போம்.
அட்மின் வசதியை வழங்குபவருக்கு:
முதலில் Google +ல் நுழைந்து உங்களின் Page திறந்து கொள்ளுங்கள். அடுத்து Setting பகுதிக்கு சென்று Google Settings என்பதை click செய்யுங்கள்.
உங்களுக்கு ஒரு window open ஆகும். அதில் உள்ள Managers என்பதை click செய்யுங்கள்.
அதில் அட்மின் வசதி அளிக்க நினைக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
நீங்கள் அவரின் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Invite button அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு Pop-up window வரும். அதில் Continue என்ற button அழுத்தவும்.
உங்களின் அழைப்பு அந்த மின்னஞ்சலுக்கு செல்லும். அவ்வளவு தான் உங்களின் வேலைமுடிந்தது. இனி நீங்கள் Invite செய்த நபர் என்ன செய்யவேண்டும் என பார்க்கலாம்.
அட்மின் வசதியை பெறுபவர்களுக்கு:
அதில் உள்ள Accept என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பகுதி open ஆகும். அதில் இதே முகவரியில் தொடரவேண்டுமா இல்லை வேறு ஏதேனும் மின்னஞ்சல் முகவரியில் அட்மின் வசதி வேண்டுமா என கேட்கும். உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Continue என்ற button அழுத்தவும்.
Continue கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும், அதில் உங்கள் User Id, Password கொடுத்து login செய்தால் போதும் அட்மின் வசதியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
Note1: Google + பக்கத்தின் உரிமையாளர்(Owner) நினைத்தால் எந்த நேரத்திலும் இந்த அட்மின் வசதியை நீக்க முடியும்.
Note2: இந்த முறையில் அதிகபட்சமாக 50 நபர்கள் வரை அட்மின் வசதியை வழங்கலாம்.
சின்ன அம்மை நோயை தடுக்கும் சூரிய ஒளி!! ஆய்வில் தகவல்!
சின்ன அம்மை நோய் பரவாமல் தடுக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. சின்ன அம்மை நோய் ஒருவித வைரசால் பரவுகிறது. அதை தடுக்க ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நோய்க்கு சூரிய ஒளி சிறந்த மருந்து என தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த நிபுணர்கள் குழு சின்ன அம்மை நோய் தாக்கியவர்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வைத்தனர். அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறைந்தது. அது மேலும் பரவவில்லை. ஏனெனில் அது வைரஸ் கிருமிகளை அழித்து அவற்றின் நோய் பரப்பும் தன்மையை கட்டுப்படுத்தியது. எனவே சின்ன அம்மை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக சூரிய ஒளி திகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
25 Dec 2011
இங்கிலாந்தில் 15 குட்டிகளை ஈன்ற நாய்
இங்கிலாந்தில் உள்ள கார்மர்ண்டன் ஷயர் நகரை சேர்ந்தவர் சுல்லிவன். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார். இந்த நாய் மொத்தம் 15 குட்டிகள் ஈன்றுள்ளது.
இதில் 5 ஆண் குட்டிகள், 10 பெண் குட்டிகள். ஒரே நாய் 15 குட்டிகள் போட்டது அதிசயமாக கருதப்படுகிறது. இதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து சுல்லிவன் கூறியதாவது, நாய் வயிறு பெரிதாக இருந்ததால் 7 அல்லது 8 குட்டி போடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 15 குட்டி போட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இத்தனை குட்டியையும் எங்களால் வளர்க்க முடியாது. 2 குட்டிகளை மட்டும் எங்களோடு வளர்க்க போகிறோம். மற்றவற்றை விற்று விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!!
பப்பாளி பழத்தின் தாவரவியல் பெயர் காரிசிகா பாபாயா. இதன் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளைப் போக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
பப்பாளியின் காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற இரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது

பூமியை ஒத்திருக்கும் இரட்டைப்பிறவி கோளின் படங்களை வெளியிட்டது நாசா!
அண்மையில் பூமியை ஒத்த கோளொன்று கண்டுபிடிக்கப்பட்டமை பலருக்கும் தெரிந்திருக்கும். இது தோற்றத்தில் அச்சு அசலாக பூமியை ஒத்திருக்கிறது.
விசேடமாக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் சுமார் 600 ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருந்த இந்த கோள் தொடர்பான படங்களை நாசா வெளியிட்டது, இது Kepler-20f என அழைக்கப்படுகிறது. Kepler-20f இனது மேற்பரப்பு மனித வாழ்க்கைக்கு ஏற்றதா என்ற ஆய்வு இன்னமும் நடைபெற்று வருகிறது.
பரப்பளவில் பூமியை விட சற்று சிறியது. ஆனாலும் வெப்பநிலை பூமியை விட அதிகம், இதன் சுற்றல் காலமும் பூமியை ஒத்திருப்பது வானியலாளர்களுக்கு இதன் மேல் கொண்ட ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
24 Dec 2011
ஆபிரிக்காவிலுள்ள Cambridgeshire. விலங்கினக் காட்சி சாலையில் ஆமையொன்று ஒரே தடவையில் 45 குஞ்சுகளை ஈன்றுள்ளது, இந்த ஆமை உலகிலுள்ள பெரியவகை ஆமைகளில் மூன்றாவது. இதன் குஞ்சுகள் வளரும் போது 26 முதல் 36 inch நீளத்திலும் 150 Kg நிறையையும் பெறும்!
சாதரணமாக ஒரு ஆமை 15 - 30 முட்டைகளை இடும். இம்முறை 45 முட்டைகளை இட்டமை தமக்கு ஆச்சரியத்தை தருவதாக இதன் வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை ஆமைகள் 160 வருடங்களுக்கு மேலாகவும் வாழும் வல்லமை கொண்டவை, ஆமை முட்டைகளை மக்கள் அதிகம் விரும்பி உண்பதாலும், ஏனைய மிருகங்கள் மண்ணினுள் இருக்கும் ஆமை முட்டையை உண்பதாலும் இவை அருகி வரும் இனமாக பிரகடகனப்படுத்தப்பட்டுள்ளன.
ஓய்வின் ரகசியம்
இன்றைய காலகட்டத்தில் ஓய்வெடுப்பது மிக மிகக் குறைவு. விடுமுறை நாளில் ஓய்வெடுக்க எண்ணினாலும், வேலைப்பளுவினால் ஓடவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
ஓய்வு என்பது கண்ணை மூடி உறங்குவது மட்டுமல்ல. அதிகாலை 5 மணி அளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் எந்தவித பதற்றமோ படபடப்போ இருக்காது.
அன்றைய பணிகளை அமைதியாக திட்டமிட அந்த நிமிடங்கள் ஏற்றவை. எனவே இதுவும் ஒருவித ஓய்வு தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தியானம், யோகா ஆகியவை மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் மனத்திற்கும், உடலுக்கும் நல்ல ஓய்வு நிலைக்கு கொண்டு வரும்.
மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது, வாய்விட்டு பாடுவது இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் நம் மனதை லேசாக்கும். அதேபோல் விருப்பமான பாடலுக்கு நடனமாடுவது உடலையும், உள்ளத்தையும் வானத்தில் பறக்கவைக்கும். இதன்மூலம் எத்தகைய பிரச்சினைகளையும் நம்மால் சமாளிக்கக் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் அது போல் நாம் சிரித்தால் மிகப்பெரிய ஓய்வு நிலையை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் செய்யும் வேலையில் உள்ள சுமைகளை குறைப்பதில் நகைச்சுவைக்கு பங்குண்டு.
சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனம் தான். எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம்கையில்தான் இருக்கிறது.
ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். ஓய்வின் மூலம் நோயை விரட்டி ஆரோக்கியத்தை அடையலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிசய இரட்டைத் தலை ஆண் குழந்தை!
ஒரு பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவர்களின் முழு உடலும் இணைந்து உள்ளது. தலைகள் மட்டும் தனித் தனியாக உள்ளது.இரட்டைத் தலைகளைக் கொண்டு ஒரு குழந்தை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டு தலைகளும் சரியாகவும், ஒரே மாதிரியாகவும் உள்ளதாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Emanoel and Jesus என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர்.
பிரேசில் நாட்டிலுள்ள Anajas என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலமே இரட்டைத் தலையைக் கொண்ட இரு குழந்தைகளும் பிறந்துள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு இரு மூளைகளும், இரண்டு முள்ளந்தண்டு எலும்புகளும், ஒரே ஒரு இதயமும் உள்ளன. இரண்டு தலைகள் மூலமும் உணவு வழங்கப்படுகின்றது. இரண்டு வயிறு உள்ளதா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
25 வயதான இரட்டைக் குழந்தைகளின் தாயான Maria de Nazareis கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த அதிசயமான குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Neila Dahas கருத்துத் தெரிவிக்கையில்,
குழந்தைகளின் உடல் சாதாரண குழந்தைகளின் உடல் தோற்றத்தைப் போலவே இருக்கின்றது. இரு தலைகளில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கின்றோம். இரண்டு தலைகளில் உள்ள மூளைகளும் வேலை செய்வதாக இருந்தால் எதை நீக்குவது என்பது குழப்பமாக உள்ளது. என்றார்.
இந்த ஆண்டு பிரேசிலில் பிறந்த இரண்டாவது இரட்டைத்தலைக் குழந்தைகளே இவர்களாவர். முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகள் oxygen பற்றாக்குறை காரணமாக இறந்தன.
Subscribe to:
Posts (Atom)