Pages

2 Feb 2012

ரோபோ குழந்தை


மனிதன் தனது வேலைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு பலவிதமான ரோபோக்களை உருவாக்கியதன் பின் இப்பொழுது குழந்தை ரோபோவையும் உருவாக்கியுள்ளனர்.

Britainச் சேர்ந்த க்ரிஸ் கிளார்க் என்பரால் உருவாக்கப்பட்ட இக்குழந்தை ரோபோவானது உண்மையான குழந்தையைப் ​போன்று அசைவுகளை இயல்பாகவே மேற்கொள்ளுகின்றது. அவ்வாறு மேற்கொள்ளும் அசைவுகளை காணொளியில் காணலாம்.


சிலிர்க்க வைக்கும் பாம்பு மசாஜ்


இதுவரை பல விதமான மசாஜ்களைப் பார்த்திருக்கின்றோம்.. இங்கே புதியதொரு மசாஜ் வித்தைகளைப் பார்க்கப் போகின்றோம். இஸ்ரேல் நாட்டில் உள்ள மசாஜ் செய்யும் அழகுக் கலை நிலையம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது விதமான சேவை ஒன்றை வழங்கியுள்ளது.

அமேசன் காடுகளில் பிடிக்கப்பட்டு பழக்கப்பட்ட பாம்புகளைக் கொண்டு மசாஜ் செய்யும் முறையே அது.
பாம்புகளை மனிதனின் முதுகுப்பகுதி, தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, கால் போன்றவற்றில் ஊர விட்டு ஒரு விதமான புல்லரிக்கும் மசாஜ் இங்கே செய்யப்படுகின்றது.

இந்த மசாஜ் சேவைகளுக்கு வெறும் 80 டொலர்கள் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
இந்த மசாஜ் செய்வதால் மன அழுத்தங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றதாம்.