Pages

30 Nov 2011

Facebook கணக்கில் உள்ள மின்னஞ்சல் முகவரியை மற்றொரு முகவரிக்கு மாற்ற

பொதுவாக பலர் facebook கணக்கை ஆரம்பிக்கும்பொழுது நமது personal மின்னஞ்சல் முகவரி கொடுத்து open செய்து விடுவார்கள். ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு facebook தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் personal மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக hack செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது. ஆதலால் facebook கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என இப்போது  பார்ப்போம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.

உங்களுக்கு வரும் windowவில் Email பகுதியில் உள்ள Edit click செய்யவும். அடுத்து Add another Email என்பதை click  செய்யவும். அடுத்து வரும் windowவில் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Facebookகில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற button அழுத்தவும். Save Changes என்ற button அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும். உங்களின் மின்னஞ்சலை open செய்து அதில் உள்ள Activation Link click செய்தால் உங்களின் புதிய முகவரி facebookல் சேர்ந்து விடும். மறுபடியும் Account Settings - Email - Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து facebook கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை click  செய்துவிடவும். இப்பொழுது மறுபடியும் அதே Email - Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு நேராக உள்ள Remove என்பதை அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக facebook கணக்கில் இருந்து நீங்கிவிடும். இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் facebook கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் personal முகவரியையும் பாதுகாக்கலாம்.

Web Cameraவை கண்காணிப்பு Cameraவாக மாற்ற

Web Cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம். என்ன
ஆச்சரியமாக உள்ளதா? இதற்கென்றே உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.  புதிதாக எந்தக் கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும் தேவையில்லை. எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் Web Cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம்.
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து முகப்பு திரையில் இருக்கும் Protect now என்று இருக்கும் button அழுத்தி ஒரே நிமிடத்தில் நம் web cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றலாம். ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் cameraவில் ஏதாவது மாற்றம் (detects motion) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு மின்னஞ்சல் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. ஆள் இல்லாத இடம் அல்லது locker இருக்கும் இடங்களில் இது போன்ற web cameraவை கண்காணிப்பு cameraவாக மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். தள முகவரி http://cammster.com/. திருட்டுக்கள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் இது அவசியம் தேவை.

29 Nov 2011

ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க Online Appointment பெறும் வசதி

இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID (Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி வருகிறது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடிகிறது. முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக lineல் காத்துக்  கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு Online Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. Online Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் lineல் காத்துக்  கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக http://appointments.uidai.gov.in/ என்ற ஒரு இணையப் பகுதியை உருவாக்கி உள்ளது. தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு (Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab)  மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும்.லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும்.
அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு ஆவணங்கள் என்ன கொண்டு செல்ல வேண்டும் என கீழே காணுங்கள்.


ஆன்லைனில் Enrollment Form download செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும். ஆகவே enrollment form download செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். Enrollment form download செய்ய http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx சென்று cancel செய்யுங்கள். 
 
மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம்.

28 Nov 2011

உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்ய

உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும்  உதவியாக இந்த தளங்கள் அமைகிறது. உங்களின் தரத்துக்கு ஏற்ப பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.
IQ TEST: 25 பக்கங்களில் பல்வேறுபட்ட வகை நிலைகளில் வினாக்கள் இந்த தளத்தில் உள்ளன. http://www.iqtest.com/
INTELLIGENCE TEST: இந்த தளத்தில் உங்கள் பிறந்த தேதி விபரங்களுடன் உங்கள் பாலினத்தினையும் குறிப்பிட்டுத் தொடங்க வேண்டும். http://www.intelligencetest.com/
FREE IQ TEST: இது ஓர் புதிர் தளமாகும். ஒவ்வொரு வினாக்களுக்கும் தரப்பட்ட 60 வினாடிகள் நேரத்தில் பதில் வழங்க வேண்டும். http://www.free-iqtest.net/

Zone Alarm 2012

இலவச Firewall applications பரவலாகப் பயன்படுத்தப்படுவது Zone alarm firewall தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு Zone Alarm 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக இதனையும் இலவசமாக download  செய்து பயன்படுத்தலாம். இதனை பதிவரக்கம் செய்ய இணைய தள முகவரி http://download.cnet.com/zonealarmfreefirwall/300010435_410039884.html. இந்தப் புதிய பதிப்பில் பழைய படுக்கை வரிசை பட்டன்களுக்குப் பதிலாக மூன்று பெரிய iconகளும், boxகளும் தரப் பட்டுள்ளன. முதல் icon computer பாதுகாப்பு குறித்த விஷயங்களைக் கையாள்கிறது. நடுவில் இருக்கும் icon internet தொடர்பு குறித்து settings அமைக்க உதவுகிறது. மூன்றாவது icon computer பயன்படுத்துபவரின் அடையாளம், தகவல்கள் குறித்து இயங்குகிறது.
இதனைப் பதிந்து கொள்ள 5 MB அளவிலான சிறிய programme download  செய்து இயக்கினால் போதும். மற்ற Fileகள் Zone Alarmன் cloud computing முறையில் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. இதுவரை zone alarm பயன்படுத்தாமல் windows 7 system பயன்படுத்துபவர்கள் இந்த புதிய பதிப்பினைப் பயன்படுத்தலாம். நிறைய வசதிகள் Windows 7 தொகுப் பிற்கெனவே அதனுடன் இணைந்து இயங்கும்படி தரப்பட்டுள்ளது.

சேற்றில் இருந்து மின்சாரம்

மின்சாரத் தட்டுப்பாட்டில் நாம் உள்ளோம்.  மரபு சார் மின்சாரத்தை விடுத்து மின்சாரத்தை வேறு எவ்வாறு உருவாக்குவது என பல நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் இஸ்ரேல் நாடும் முயன்றது. அவர்கள் முயற்சி சற்று வித்தியாசமானது. சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் GRPL தரப்பில் கூறப்படுவதாவது: ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும். இயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சகதியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு டர்பைன்கள் வழியாக மின் உற்பத்தியாகும். சேறு, சகதி மட்டுமின்றி தண்ணீரில் நனைந்த குப்பைகளில் காணப்படும் சக்தியிலும் மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ASUS Zenbook UX31E

Asus நிறுவனத்தின் புதிய இந்திய வெளியீடு Zenbook UX31E Ultrabook.  இதன் சந்தை விலை ரூபாய் 89,999/- மட்டுமே.  இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- 13.3 inches dispaly
- 1600 x 900 தெளிவுத்திறன்
- Intel Core i5 processor
- 1700 MHz processor speed
- 3 MB cache
- HD Graphics 3000
- DDR3
- 128 GB storage
-  SD/MMC Card/SDHC Card
- 10/100/1000 Mbps ethernet
- 802.11 n/b/g Wi-Fi
- USB port
- Bluetooth
- 12.8 inches width
- Microsoft Windows 7 Home Premium
- Built-In Microphone
- Built-In Webcam
- Carrying Case/Cover

இரண்டாம் திருமணத்தை அம்பலமாக்கிய Facebook!

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebookல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்டார்.
பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது. இப்படங்களை 3 மாதங்களுக்குப் பின்னர் Facebookல் கண்ட முதல் மனைவி Policeல் தொடர்புகொண்டு முறைப்படி புகார் தெரிவித்திருந்தார். தான் திருமணம் செய்யாதவர் என்று கூறியே அந்நபர் இரண்டாம் திருமணத்தைச் செய்திருந்தார். இதனால் இவருக்கு 16 வார சிறைத்தண்டனையும் 250 Pound அபராதமும் விதிக்கப்பட்டது

Paper Battery

Battery பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். Battery பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற batteryகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் paper batteryகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோகத்தை பயன்படுத்தாமல் batteryயை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க paper batteryயை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதனை Swedenன் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து இருக்கின்றார். இந்த battery சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. இது வெறும் சுற்றுச் சூழலுக்கு தானா என்று கவலைப்படவேண்டாம். இந்த batteryயை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். ஏன் என்று சொன்னால் இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்கிற ஒரு கடல் வாழ் அல்கேவினால் தான் இது உருவக்கப்பட்டு இருந்தது. மேலும் இது கடலில் உருவாவதால் விலையும் மிக மலிவானதாக இருக்கும்.
இது polymer battery என்கிற வகையைச் சார்ந்ததாக இருக்கின்றது. ஆனால் இதுவரை இருக்கின்ற batteryகளை விட இது 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது என தெரிவிக்கின்றனர். மிகச் சுலபமாகவே சார்ஜ் செய்து விடலாம். இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற lithium batteryகளை விட  வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை படைத்ததாக இருக்கின்றது. தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இதனுடைய பயன்பாடுகள் கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இதனை உருவாக்கியவர் கூறுகின்றார்.

உலகின் எந்தப் பகுதிக்கும் பறக்கும் விமானம்

உலகின் எப்பகுதிக்கும் சென்றுவரும். சூழலுக்கு மாசில்லாத hydrogen எரிபொருள் இதன் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதன் சிறகு அமைப்பானது காற்றினுள் ஏற்படும் உராய்வை குறைக்கிறது.
இதனால் அதிக சக்தி தேவையில்லை. மேலும் இந்த aerodynamic எனப்படும் வடிவம் ஒரு பறவை எவ்வாறு பறக்கிறதோ அது போல இலகுவாக காற்றில் பறக்க உதவுகிறது. low-power state எனும் அமைப்பு காற்றழுத்தம் குறைந்த பகுதியில் எரிபொருள் சிக்கனத்துடன் செயற்பட உதவுகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கோ திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா? ஆம் என்றால் my open letter உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். யாருக்கு கடிதத்தை எழுதுகிறீர்கள் என குறிப்பிட்டு உங்கள் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை எழுத துவங்கலாம்.
நாளிதழ்களில் அவ்வப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு. சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு. திறந்த மடல்கள் மூலம் முக்கிய விஷயங்கள் குறித்து வலுவான கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் மின்னஞ்சல் யுகத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கமே அரிதாகி வருகிறது. இந்நிலையில் மின்னஞ்சல் வடிவில் திறந்த மடல்களை எழுதும் வசதியை ஏற்படுத்தித்
தரும் தளமாக my open letter தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடிதம் எழுதுவதற்கான பகுதியில் வலைப்பதிவுகளில் காணப்படக்கூடிய அனைத்து வசதியும் இருக்கின்றன. கடித வரிகளை தேவையான இடங்களில் அடிக்குறிப்பு இடுவது, எழுத்துருக்களை மாற்றுவது, வண்ண எழுத்துக்களை சேர்ப்பது, புகைப்படங்களை இணைப்பது என பல்வேறு வசதிகள் இருக்கின்றன. தேவை ஏற்பட்டால் செய்திகளை மேற்கோளாகவும் இணைக்கலாம். இந்த கடிதத்தை இணைய வெளியில் பதிப்பிப்பதன் மூலம் திறந்த மடலை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம். கடிதத்தின் கீழ் மற்றவர்கள் அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கான வசதியும் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளம் மூலமாக திறந்த மடல்களை எழுதலாம். மற்றவர்கள் எழுதியுள்ள கடிதங்களை படித்து பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.
ஒரு வலைப்பதிவிலோ, டிவிட்டர் குறும்பதிவிலோ அல்லது பேஸ்புக் அப்டேட்டிலோ சொல்ல முடியாததை கடிதம் மூலம் சொல்லலாம். உலகின் கவனத்தை ஈர்க்கலாம். ஏற்கனவே குறிப்பிட்ட பிரச்னை தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இணையவாசிகளின் ஆதரவை திரட்ட petitions online போன்ற இணையம் வழி மனு போடும் தளங்கள் இருக்கின்றன. அந்த வகை தளங்களின் நீட்சியாக இந்த தளத்தை கருதலாம். தள முகவரி http://myopenletter.in/

Lenovo Ultrabook U 300

Lenovo நிறுவனம் தற்போது ultra portable U300s laptopஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு.
  • 13.3" ultra-slim 16:9 wide screen
  • HD display
  • 4GB DDR3 memory
  • Upto 128 GB of SSD storage
  • 2nd generation Intel Core i5 processor
  • Intel Turbo Boost Technology 2.0
  • 33 pc faster with Lenovo Enhanced Experience Technology
  • Breathable Keyboard
  • Intel Advanced Cooling Technology
  • 8 hours of productive use or an incredible 30 days on standby
  • Bluetooth 3.0
  • High-speed 802.11n Wi-Fi, USB 3.0 (x1) and USB 2.0 (x1) connectors
  • Integrated 1.3M (720p HD) webcam
இதன் சந்தை விலை ரூபாய் 67, 990/- மட்டுமே

16 Nov 2011

SKODA LAUNCHES SEDAN RAPID CAR

செக் நாட்டின் கார் நிறுவனமான Skoda Sedan Rapid எனும் புதிய petrol மற்றும் diesel கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தை விலை petrol model Rs. 6.75 lakh and Rs. 8.99 lakh (ex-showroom Delhi), the diesel model is priced at Rs. 7.95 lakh to Rs. 9.19 lakh (ex-showroom Delhi).

15 Nov 2011

Petrol விலை குறைப்பு

நள்ளிரவில் இருந்து Petrol விலையை ரூபாய் 1.85 குறைபபதாக தேசிய எண்ணெய்  நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  33 மாத காலத்தில் முதன் முறையாக petrol விலை குறைக்கப்பட்டுள்ளது.

14 Nov 2011

Indian Movies on Youtube

பண்டிகையா அல்லது விசேஷ நாட்களோ வந்தால் எந்த டிவியில் என்னென்ன படம் போடுராங்கன்னு தான் முதலில் பார்ப்போம். அந்த அளவு டிவியும், திரைப்படங்களும் நம்மை அடிமைப் படுத்தி விட்டது என்று கூட கூறலாம். Youtube பற்றி அனைவரும் அறிந்து இருப்போம் இணையத்தில் வீடியோக்களை கண்டு ரசிக்க கூகுள் நிறுவனம் வழங்கும் சேவையாகும். தற்பொழுது youtube தளத்தில் வீடியோக்கள் மட்டுமின்றி முழு நீளத் திரைப்படங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த youtube தளத்தில் 1500 இந்திய திரைப்படங்களை இலவசமாக காணலாம். ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி இப்படி பல மொழிகளில் திரைப்படங்கள் காணப்படுகிறது.
இந்த சேனலில் ஹிந்தி மொழியில் தான் அதிக அளவு திரைப்படங்கள் காணப்படுகிறது. இந்த youtube சேனலில் கீழே உள்ள பல்வேறு வகைகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளது.

  • New Releases
  • Action & Adventure
  • Animations & Cartoons
  • Classics
  • Comedy
  • Crime
  • Documentary
  • Drama
  • Family
  • Foreign Film
  • Horror
  • Indian Cinema
  • Mystery Suspense
  • Romance
  • Science Fiction
இந்த Youtube சேனலில் நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 
மொத்த திரைப்படங்களை காண - http://www.youtube.com/movies
தமிழ் திரைப்படங்களை மட்டும் காண -http://www.youtube.com/movies/indian-cinema?fl=f&l=ta&pt=g&st=f

உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் புகைப்படக்கருவி

உலகின் முதலாவது மிகச் சிறிய விற்பனைக்கான புகைப்படக்கருவியினை அமெரிக்க நிறுவனமொன்று தயாரித்துள்ளது.வெறும் 26 mm அளவான இக்கருவியின் மூலம் 2 mega pixel வரையான புகைப்படத்தினைப் பிடிக்கமுடியும்.மேலும் இதன் மூலம் வீடியோ பதிவு மேற்கொள்ளவும் முடியும்.இதன் எடை 26 gms ஆகும்.இதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஹமாசர் ஸ்கிலிமெர் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.இதன் விலை 99.95 American Dollarகளாகும்.உருவத்தில் சிறிதெனினும் செயற்பாட்டில் இக்கருவி பெரிய புகைப்படக் கருவிகளை ஒத்ததெனவும், சந்தைக்கு வரும்போது பெரும் வரவேற்பைப் பெறுமெனவும் இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.இதேவேளை கடந்த மே மாதம் இஸ்ரேலைச் சேர்ந்த மெடிகஸ் நிறுவனம் 0.99 mm அளவிலான புகைப்படக்கருவியொன்றை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட பூனை

மனிதன் கால்களை இழந்தால் அறுவைச்சிகிச்சை செய்து செயற்கை கால்கள் பொருத்துவது மருத்துவ உலகில் வழமையான ஒன்று. ஆனால் பிரித்தானியாவில் இரு கால்களையும் இழந்த பூனை ஒன்றுக்கு முதல் முறையாக செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு மருத்துவ உலகின் சாதனை படைத்துள்ளார்கள் மருத்துவர்கள். பிரித்தானியாவில் வாகன வித்து ஒன்றில் தனது இரு பின்னங்கால்களையும் இழந்த ஆஸ்கார் எனும் பூனைக்கே இவ்வாறு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் விலங்குகள் மருத்துவமனை ஒன்றின் பணிபுரியும் நரம்பியல்-எலும்பியல் கால்நடை மருத்துவரான Dr. Noel Fitzpatrick என்பவரின் முயற்சியே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளது. சுமார் 3மணி நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகரமாக இவருடன் சேர்ந்த மருத்துவர்கள் குழு பூனைக்கு செயற்கை கால்கள் பொருத்தி சாதித்துள்ளார்கள். பூனையும் எந்த வித தடங்களும் இன்றி அழகாக நடந்து செல்லுகிறது.

கறுப்பு மரணம்

ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான Bacteriaவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர்.Yersinia pestis எனப்படும் bacteriaவின் வகையொன்றே இந்நோய்க்குக் காரணமாக அமைந்ததாகவும், இக்காலத்தில் இது பரிணாமவளர்ச்சியடைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.எனினும் சிறிய அளவிலேயே அவ்வகை  bacteriaவானது மாற்றமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.எனினும் தற்கால antibiotics மூலம் இந்த bacteriaவை அழிக்க முடியுமென என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். லண்டனில் குறித்த காலப்பகுதியில் இந்நோயால் உயிரிழந்த நபர்களின் புதைக்கப்பட்டிருந்த எலும்புக் கூடுகளின் பற்களில் இருந்து எடுக்கப்பட்ட DNAயில் இருந்தே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இக்கண்டுபிடிப்பானது தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.Germany, America மற்றும் Canada நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்தே இக்கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளனர்.ஆதிகால நுண்ணுயிர் ஒன்றின் DNA தொடரினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டுபிடித்துள்ளமை இதுவே முதன் முறையாகும்.

பாம்பை உண்ணும் பாம்பு

பாம்பை உண்ணும் பாம்பு. என்ன நம்பமுடியவில்லையா?  இந்த மெய் சிலிர்க்கும் காட்சிகளை நீங்களும் பாருங்கள்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lnmqAUP0M6g. ஒரு பாம்பு இன்னொரு பாம்பை முழுமையாக உயிருடன் துடிதுடிக்க முழுமையாக விழுங்கும் போது விழுங்கிய பின் எவ்வளவு இலகுவாக ஊர்ந்த செய்கிறது பாருங்கள்….

12 Nov 2011

Mouse

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சில விஷயங்கள் நமக்கு எந்த நேரமும் பயனைத் தரும் வகையில் இருக்கும்.அவற்றில் ஒன்று mouse கொண்டு click செய்து text தேர்ந்தெடுப்பது. பல word processor, e-mail text editor, இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றில் இந்த mouse click பயன்பாடு நமக்குக் கிடைக்கிறது.ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய்கிறோம்? Text தேர்ந்தெடுக்க mouse cursor அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை highlight செய்திடுகிறோம்.இதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது ஒரு சொல் எனில், அதன் மீது எங்கேணும் mouse cursorக் கொண்டு சென்று இரு முறை click செய்திடுங்கள்.அந்தச்  சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை click செய்திடுங்கள். அந்த பத்தி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இனி நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட text எப்படி வேண்மானாலும் மாற்றிக் கொள்ளலாம்

ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு

ATMல் என்ன வரும்? பணம் வரும். இல்லாவிட்டால் பணம் இல்லை என்று வரும் மெசேஜை பார்த்து எரிச்சல் வரும். Spainல் உள்ள ATM Machineல் இருந்து பாம்பு வந்திருக்கிறது. ஸ்பெயினின் டியோ நகரத்தில் ஜா மாட்ரிட் வங்கி ATM க்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்தார். தனது ATM கார்டை நுழைத்து கடவுச்சொல்லை அடித்து பண தொகையை type செய்தார். பணம்  எடுக்க அவர் தயாராக இருந்தார். பணத்துடன் கூடவே வழுவழுவென்று ஏதோ தென்பட்டது. சுதாரித்த அவர் நோட்டுகளை சட்டென்று இழுத்துவிட்டார்.பாம்பு ஒன்று  மெதுவாக வெளியே தலையை நீட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தார் விரைந்து வந்த போலீஸ்காரர் ஒருவர் தனது லத்தியை லாவகமாக அதன் அருகே பிடித்தார். அதை பிடித்துக்கொண்டு ஏற தொடங்கியது பாம்பு. http://www.youtube.com/watch?v=ElJQJZtY8WI&feature=player_embedded .  இதற்குள் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உள் பக்கத்தில் குச்சியை விட்டு குத்தி அதை வெளியே தள்ளினர்.ஒரு பெட்டியில் அடைத்து பாம்பு பண்ணைக்கு அதை பத்திரமாக அனுப்பி வைத்தனர். ATM Machineல் விஷமத்தனமாக யாராவது பாம்பை உள்ளே போட்டார்களா என்றும் விசாரணை நடக்கிறது.

பெண் குழந்தை பெற்றெடுத்த உலகின் மிகக் குள்ளமான பெண்

உலகிலே மிகச் சிறிய பெண்மணி இந்தியாவைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண். தனது 25வது வயதில் ஒரு பெண்பிள்ளைக்குத் தாயாகும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றார். இந்தியாவில் சிறிய அளவிலான பெண்ணுக்கு குழந்தை பிறந்தது இதுவே முதல் தடவையாகும்.
காமாட்சிக்கு பிறந்த குழந்தை 3.5 கிலோ எடையுடன் பிறந்துள்ளது. அந்தக் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் அவ்வாறு குழந்தை கிடைப்பது 40000 க்கு ஒன்றாகக் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தைப் பிரசவமடைவதும் மிகவும் அரிது என வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகிலேயே மிகச் சிறிய குதிரை

உலகிலேயே மிகச் சிறிய குதிரை Thumbelina எனும் பெயரைக் கொண்ட பெண் குதிரையாகும். இந்தக் குதிரை 24 கிலோ எடை மற்றும் 17 inches மட்டுமே உயரம் கொண்ட குதிரையாகும். இதன் வயது 11 ஆகும்.






இரவு நேரத்தில் முதலையின் புகைப்படம்

விலங்குகள் அழிந்து வருகின்றன. அதனை பாதுகாப்பதற்க்காக பல அமைப்புகள் போராடி வருகின்றன. இது போன்ற வித்தியாசமான புகைப்படங்கள் விலங்குகளை மக்கள் ரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. பிரபல புகைப்படக்கலைஞர் டானியல் வயது 37 என்பவரால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தின் இரவு நேரத்தில் முதலையின் கண்களில் ஏற்படும் பிரதிபலிப்பை மிகவும் அழகாக தனது புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்தப் புகைப்படம் வனவிலங்கு விளிப்புணர்வு கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இதனை பலரும் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

11 Nov 2011

எதிர்கால பறக்கும் கார்!


Helicopter போல தான் இருக்கும் ஆனால் Helicopter  அல்ல. Pilot  இல்லாமலே இந்த Electric multi copter பறக்கக் கூடியது. Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது. இது உலகின் முதலாவது பறக்கும் காராக விளங்குகிறது.விளையாட்டுக் கார்கள் இயக்கப் பயன்படும் joystick போன்றவற்றால் கூட இதனை இயக்க முடியும்.


இது battery மூலம் மின்சாரத்தினால் தான் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.
சாதாரண Helicopterல் பறப்பதை விட இதில் பறப்பது மிகவும் எளிமையானது. இயந்திரத்தின் எடை 80 கிலோ கிராம் மட்டுமே. இதில் 16 சுழலும் இயந்திரங்கள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்பட உள்ளது.இதன் வீடியோவை காண இந்த லிங்கை click செய்யுங்கள்.  http://www.youtube.com/watch?v=L75ESD9PBOw&feature=player_embedded

சுவரில் ஏறும் புதிய வகை ரோபோ

எந்த பிடிமானமும் இல்லாமல் பல்லி போல சுவரைக் பிடித்தபடி ஏறும் ரோபோவை கனடா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மருத்துவம், வானியல் உள்பட பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதிது புதிதாக பல்வேறு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கனடாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்திலும் இதுதொடர்பான ஆராய்ச்சி நடந்து வந்தது. பல்லி போல சுவரில் ஏறும் ரோபோவை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் தொழில்நுட்பம் பற்றி அவர்கள் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத ஏராளமான ரோமங்கள் போன்ற அமைப்புகள் பல்லியின் பாதத்தில் உள்ளன. இவை சீட்டா எனப்படுகின்றன. சமதள பரப்புக்கும் இந்த ரோமங்களுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு விசை காரணமாகத் தான் செங்குத்தாகக் கூட பல்லி நடக்கிறது. இந்த ஈர்ப்பு விசை அடிப்படையில்தான் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. முடியை விட ஏறக்குறைய 10ல் ஒரு மடங்கு சிறிதான மிகமிக நுணுக்கமான முடி போன்ற அமைப்புகள் இந்த ரோபோவின் கீழ்ப்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. தொப்பி போல பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான ரோமங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் ரோபோ நடக்கிறது. செங்குத்தாக நடக்கும் ரோபோக்கள் ஏற்கனவே உள்ளன. வெற்றிடம் ஏற்படுத்தி நடத்தல், பசைத் தன்மையை உருவாக்குதல் ஆகிய தொழில்நுட்பங்களே இதுவரை பயன்படுத்தப்பட்டன. அடிப்பகுதியில் ரோமங்களை பொருத்தி பல்லி தொழில்நுட்பத்தில் ரோபோ உருவாக்கியது இதுவே முதல் முறை. இந்த ரோபோவின் எடை 240 கிராம். இதன் மீது 110 கிராம் எடை ஏற்றி வைத்தாலும் நகரும் திறன் உடையது. உயரமான கட்டிடங்களை ஆய்வு செய்வது, கட்டிட சுவர்களை கழுவுவது, குழாய்களில் நீர் கசிவை கண்டுபிடிப்பது போன்ற பணிகளுக்கு இந்த வகை ரோபோக்கள் உதவும்.

தமிழில் Google Chrome உலாவியின் உதவிப் பக்கம்

புதிதாக இணையத்தை பயன்படுத்த வருபவர்கள் ஒரு இணைய உலாவியின்   அடிப்படை  விடயங்கள் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும். இவ்வகையான தகவல்ள் அவர்களின் பாதுகாப்பான மற்றும் இலகுவான இணைய அனுபவத்திற்கு உதவி செய்யும்.இதுவரை இணைய உலாவிகள் பற்றிய உதவிக் குறிப்புக்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது உலகின் வேகமான இணைய உலாவியாக கருதப்படும் Google Chrome உலாவியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்கின்றது. கீழ்க்காணும் முகவரியில் சென்று Google Chrome இணைய உலாவி பற்றிய விடயங்களை தமிழில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது. இணைய முகவரி:  http://www.google.com/chrome/intl/ta/features.html?hl=ta&brand=chmo

Do a Barrel Roll

போட்டி நிறைந்த உலகில் Googleக்கும் சவால் விடுகிறது Facebook தளம்.
இந்த இரண்டு தளங்களும் போட்டி போட்டுக் கொண்டு வசதிகளை உருவாக்கி வாசகர்களை கவர்ந்து வருகின்றன.  வாசகர்களை தங்கள் பக்கம் இழுக்க இவர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகிறார்கள். இப்பொழுது Google ஒரு சுவாரஸ்யமான trick உருவாக்கி உள்ளனர். இப்பொழுது உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தை இது தான் Do a Barrel Roll.
இதனை பற்றி அறிய முதலில் கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
அதன் search பாரில் do a barrel roll என type செய்து enter கொடுங்கள். நிகழும் அதிசயத்தை பாருங்கள். உங்களின் Google window அப்படியே சுற்றுவதை பாருங்கள்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QerNB9K16LQ

ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்

Microsoft Office தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். Office documents, spread sheet, presentation மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html

6 Nov 2011

சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் வங்கிகள் கைகளில்

Savings Deposit வட்டி இது நாள் வரை ஒரே சீராக 4 சதவிகிதம் என்ற நிலையில் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கி இதனை தளர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு என்ன வட்டி கொடுப்பது என்று அந்தந்த வங்கிகளே முடிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. உடனே Yes Bank, Kotak Mahindra Bank முதலிய வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு 6 சதவிகிதம் வட்டி தருவதாக அறிவித்துள்ளது. 

5 Nov 2011

Chevrolet Car

General Motor நிறுவனத்தின் Chevrolet அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1911ம் ஆண்டு அறிமுகமான இந்த கார் தற்போது 140க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பணையாகின்றது.

காசோலை தகுதி காலம் 3 மாதங்களாக குறைப்பு.

இதுவரை காசோலையின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாக இருந்து வருகிறது. ஆனால் ரிசிர்வ் வங்கி இந்த காலத்தை ஏப்ரல் 1, 2012 முதல் 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் Demand Draft , Pay order, Bankers cheque எல்லாவற்றிற்கும் செல்லுபடியாகும் காலம் 3 மாத காலம் மட்டுமே என தெரிவித்துள்ளது

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 203 கோடி டாலர் அதிகரிப்பு.

நாட்டின்  அன்னிய செலாவணி கையிருப்பில், pound, dollar, euro, yen போன்ற இதர நாட்டு செலாவணிகள், gold, SDR  மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் வைக்கப் பட்டுள்ள நிதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.