Pages

3 Jan 2012

Missed Calls Alert செய்ய -Android தொலைபேசிக்கான புதிய மென்பொருள்


Any.do என்பது அன்ட்ரொய்ட்(Android) தொலைபேசிக்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஆகும். தற்போது Android தொலைபேசிகளில் மட்டுமே கிடைக்கும் இந்த மென்பொருள் விரைவில் மற்ற அனைத்து மொபைல் தொலைபேசிகளுக்கும் கிடைக்க உள்ளது. Any.do ஆனது முற்றிலும் இலவசம் என்பது சந்தோசமான விடயம்.
Any.do இல் குறிப்பிடத்தக்க விசயம், புதிய பணிகளை(Tasks) விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்து சேர்ப்பதற்கு பதிலாக பேச்சு(Voice) மூலம் பணிகளை உள்ளீடு(Save) செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் Any.do ஆனது கூகிள் பணி(Google Tasks) மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் பணிகளை தொலைபேசியில் இருந்து ஜிமெயில் உடன் ஒத்திசைக்க முடியும். அதேபோல், கூகிள் ஜிமெயில்(Gmail) இல் இருந்து உங்கள் Any.do மென்பொருளுடன் ஒத்திசைக்க முடியும். Any.do ஆனது பெரிய எழுத்துருக்களை கொண்டு ஒரு அழகான திரையை(UI) கொண்டிருக்கிறது.

புதிய Any.do பதிப்பானது மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டிருக்கின்றது. அதாவது, உங்கள் மொபைல் போனில் தவறிய அழைப்பு(Missed Calls) மற்றும் நீங்கள் அந்த நேரத்தில் அழைப்பு திரும்ப மிகவும் பிஸியாக இருந்தால், நீங்கள் விரைவில் ஒரு எளிய கிளிக் உங்கள் நிலுவையில் பணி பட்டியல் அதை சேர்க்க முடியும்.


எனவே, நீங்கள் மறந்தாலும், Any.do ஆனது தானாக கூகிள் ஜிமெயிலுடன்(Gmail) ஒருங்கிணைக்கப்பட்டு, நீங்கள் ஜிமெயிலை திறக்கும் போது உங்களுக்கு நினைவுபடுத்தப்படும். இந்த அறிவிப்புகள் மூலம் இலகுவாக அந்த நபருக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.
Visit Developer’s WebsiteEmail Developer

App Screenshots


புகைப்படங்களை ஆல்பமாக உருவாக்குவதற்கு

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க photo shopல் எண்ணற்ற PSD design கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பத்திற்கேற்ப திருமணம், பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் உங்களுக்கு ஒரு window open ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.

Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்குத்  தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட windowவில் நமக்கு அதிக அளவு designகள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு design தேர்வு செய்து அதனை download செய்துகொள்ளலாம். Design தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம். புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் designகளை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம். Download செய்ய http://www.4shared.com/file/O6rV9piX/scrapbook-studio_full99.html

Top 5 Indian shopping sites

Shopping என்றாலே பலருக்குப் பிடிக்கும்.  ஆனால் தற்ப்போது இணையம் வழியாக பொருட்களை வாங்குவது அதிகரித்து வருங்கின்றது. இதர்க்கு முக்கிய காரணம் நேரமின்மை,  பல இடங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை வாங்க வேண்டியதில்லை. நம் வீட்டில் இருந்தபடியே கணினியின் முன்பு உட்கார்ந்து கொண்டு பொருட்களை வாங்கலாம். அவ்வாறு இந்தியாவில் online shopping செய்யும் தளங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
1. Flipkart
இந்தத் தளம் முதலில் books விற்பனைக்கு ஆரம்பம் செய்யப்பட்டு, தற் ப்போது electronics (Mobile phones, high-definition TVs) பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. Motherboard, graphics card இங்கு கிடைக்காது. குறித்த நேரத்தில் delivery செய்வதால் இந்த தளம் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தள முகவரி  http://www.flipkart.com/
2. Theitdepot
இந்தியாவில் PC hardwares விற்பனை இடங்கள் குறைவாகவே உள்ளன. அலைந்து தான் வாங்க வேண்டும். Computer Hardware, Laptops, Apple devices, Cameras, Gaming மற்றும் பல இங்கு வாங்கலாம்.  தள முகவரி http://www.theitdepot.com/
3. TechShop
இந்த தளமும் hardware பொருட்களை வாங்க சிறந்த தளம். தள முகவரி http://www.techshop.in/store/main.php
4. Letsbuy
Flipkart போலவே இந்த தளமும் வளர்ந்து வருகின்றது.  இங்கேயும் computers, laptops, watch, mobile phones மற்றும் பல பொருட்கள் விற்கப்படுகிறது.  தள முகவரி http://www.letsbuy.com/
5. ebay
இந்த தளத்திலும் பல வகையான பொருட்கள் (Mobile, Computer, MP3, ipod, Home appliances, etc) விற்பனை செய்யப்படுகிறது. தள முகவரி http://www.ebay.in/

மறந்து போன இணையதளங்களை தேடுவதற்கு

“அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே” என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்புவார்கள். எவ்வளவு முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.

இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே bookmarking சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடித் தடுமாறாமல் இருக்க bookmarking தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் bookmarking செய்யப்பட்ட தளங்கள் சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இதனைத் தவிர்க்கும் வகையில் புதியதொரு bookmarking வசதி அறிமுகமாகியுள்ளது. உண்மையிலேயே புதுமையான bookmarking சேவை தான் இது. காரணம் recall என்னும் அந்த வசதியில் bookmarking செய்யாமலேயே bookmarking வசதியை பயன்படுத்தலாம். அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம். அதெப்படி bookmarking செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் recall இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜய‌ம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.
கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள recall ஒருமுறை பொருத்திக் கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரைப் போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்துக்கொள்ளும். வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்க‌ள் அனைத்தையும் சேமித்துக் கொள்கிற‌து. பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணைய‌தளத்தை தேடிக் கண்டுபிடித்து தருகிறது. தேடியந்திரத்தில் தேடுவது போலவே நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்ப‌டுத்தி தேடிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இணையதள முகவரி http://www.recawl.com/