Pages

29 Dec 2011

Gmail Shortcut Keys

Google நிறுவனம் வாசகர்களுக்கு பல எண்ணற்ற வசதிகளை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஒன்று தான் Gmail ஆகும். நம்மில் பெரும்பாலானோர் G-Mail பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதை இன்னும் எளிதாக உபயோகிக்க இங்கே Shortcut கீகள் தெரிந்து இருந்தால் நல்லது. இதில் முக்கியமானதை மட்டும் தொடுத்துள்ளேன். இந்த வசதியை பயன்படுத்த முதலில் நீங்கள் உங்கள் Gmail account சென்று
  • Settings 
  • General
  • Key board Shortscuts on
  • Save Changes -உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளுங்கள்.

இந்த மாற்றங்கள் செய்த பிறகே உங்களுக்கு கீழே Shortcut keys வேலை செய்யும். மாற்றத்தை செய்து விட்டு உபயோகித்துப்
பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

Keyboard Shortcuts
Function
CCompose new Mail
NNext Mail
PPrevious Mail
!Report as a Spam
RReply to the Message
AReply to All
FForward that message 
#Delete the Message
/Puts your cursor in Search box
OOpens Recent Message
UAutomatically comes to inbox
SStar a message
VMove to
Shift+IMark as Read
Shift+UMark as Unread
QMove to your Cursor in Chat Search

Facebook-ல் வேண்டாத நபரை தடை செய்ய

Facebook வாசகர்கள் அவர்களின் நண்பர்களிடம் தான் விஷயங்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.  தெரியாத முகங்களைக் கூட சுலபமாக நண்பர்களாக்கிக் கொள்ளலாம்.  இந்த facebook-ல் எப்படி வேண்டாத ஒரு நபரை தடை செய்வது என்று பார்ப்போம்.

  • இது போல் தடை செய்து விட்டால் அவரால் நம்மை தொடர்பு கொள்ளவே முடியாது.
  • நாம் பகிரும் எந்த செய்தியும் அவருக்கு update ஆகாது.
  • அவரின் பகிர்தலும் நமக்கு வராது.
எப்படி வேண்டாத ஒரு நபரை தடை செய்வது என்று இங்கு பார்ப்போம்.
  • முதலில் உங்கள் facebook account-ல் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அங்கு கணக்கு (Settings) பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள்(Privacy Settings) என்பதை click செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல window வரும். அதில் உள்ள தடை செய்ய பட்டுள்ளவர்கள் என்பதில் உள்ள blocked people and applications என்பதை click செய்யவும்.
  • இப்பொழுது உங்களுக்கு இன்னொரு window வரும். அதில் பெயர், மின்னஞ்சல் என்ற இரு கட்டங்கள் இருக்கும் அதில் நீங்கள் தடை செய்ய விரும்போவோரின் பெயரை கொடுத்து Block this User என்ற button அழுத்தினால் அந்த பெயரில் உள்ள வர்களின் பட்டியலை உங்களுக்கு காட்டும்.
  • இதில் உங்களுக்கு வேண்டாதவரை தேர்வு செய்து அதற்கு நேராக உள்ள Block என்பதை click செய்தால் அவர் தடை செய்யபட்டியலில் வந்து விடுவார்.
  • அல்லது மின்னஞ்சலோ கொடுத்து Block this User என்ற பட்டனை அழுத்தினால் போதும் அவர்கள் நேரடியாக தடை செய்யப்பட்டு விடுவார்கள்.
  • இனி உங்களின் எந்த விவரங்களையும் அவரால் பார்க்க முடியாது.
  • ஒருவேளை பிறகு நீங்கள் அவரை இந்த பட்டியலில் இருந்து நீக்க விரும்பினால் அவரின் பெயருக்கு நேராக உள்ள Unblock link அழுத்தினால் அவர் இந்த பட்டியலில் இருந்து நீக்க படுவார்.