Pages

20 Dec 2011

திருநள்ளாரில் இன்று சனிப்பெயர்ச்சி

திருநள்ளாரில் இன்று காலை நடைபெறும் சனிப்பெயர்ச்சியையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதி அமைந்துள்ளது. இன்று காலை 7.51 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.

ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பவுண்டுகளை இழந்த பெண்

அதிர்ஷ்டம் யாருக்கும் தெரியாமல் கதவை தட்டும் என்னும் முதுமொழி உங்களுக்கு தெரித்திருக்கும். அடித்த அதிர்ஷ்டத்தை கோட்டை விட்டால் எப்படியிருக்கும் நம் மனம்.
பிரித்தானியா தொலைக்காட்சி காட்சி ஒன்றில் இடம்பெற்ற மில்லினர் நிகழ்வு ஒன்றில் போட்டியிட்ட தம்பதிகள் ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பவுண்டுகளை கோட்டை விட்டுள்ளனர்.
Justin Timberlake​ என்னும் கலைஞர் இந்த ஆண்டு ஒரு விருதினை பெற்றிருந்தார் அது என்ன என்பது தான் கேள்வி. இதற்கான தெரிவுகளான நான்கு விடைகளும் கொடுக்கப்பட்டன. இதில் தவறான விடையை கூறி துரதிஷ்டசாலியாக வெளியே வந்தனர்.

வினோதமான பக்கெட் சைவத்திருவிழா



ஆண்டுதோறும் சீன நாள்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் நடைபெறும் விழா சைவத் திருவிழா என்றழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழா நடக்கும் போது 10 நாள் கடுமையான சைவ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 1825 ம் ஆண்டு முதல் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.









உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு செய்யலாம்

தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.  இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும் வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.
BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே
“Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers"
ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:

சென்னை வாடிக்கையாளர்கள்- http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp
தமிழ்நாட்டின் இதர பகுதியினர் - http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp
இதர மாநிலத்தில் வசித்தால் - http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/choose_ur_no.html

நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல் இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல் உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.

அதில் உள்ள Reserve Number அழுத்தியவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொடர்பு மொபைல் எண்ணை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு 7 இலக்க பின் நம்பர் SMS வரும், ஒருவேளை SMS வரவில்லை என்றால் அங்கு கொடுத்துள்ள 7 இலக்க PIN நம்பரை அதில் type செய்து கொள்ளவும். அந்த PIN நம்பரும் முக்கியமானது குறித்து வைத்து கொள்ளுங்கள்.

அந்த PIN நம்பரை கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்கள் நம்பர் பதிவு செய்யப்படும்.

இனி நீங்கள் அருகில் இருக்கும் BSNL அலுவலகத்தை 72 மணி நேரத்திற்குள் சென்று பதிவு செய்யப்பட மொபைல் எண்ணையும், அந்த PIN நம்பரையும் கொடுத்து மற்றும் எப்பொழுதும் போல ID PROOF, ADDRESS PROOF கொடுத்து உங்கள் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.
SMS மூலமாகவும் BSNL நம்பரை பதிவு செய்யலாம்:

NLIST <Space> Circle Code <space>1-5 digits 

Example: NLIST<space>CHN<space>00117
என்ற பார்மட்டில் BSNL வாடிக்கையாளர்கள் - 53734, மற்ற வாடிக்கையாளர்கள் - 9494453734 என்ற எண்ணுக்கும் SMS அனுப்பி உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை பதிவு செய்து கொள்ளலாம்.

Notepad 7 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு..

நீண்ட காலமாக Windows கணினியல் இருக்கும் Notepad-ன் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமலேயே வெளியிடப்பட்டு வருகின்றது.
இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7 என்ற இலவச மென்பொருள் கிடைக்கின்றது. Microsoft 2010 MS Office-க்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே Notepad 7 வெளியிடப்படுகின்றது.
Notepad-ல் இருக்கும் வழமையான வசதிகளுடன் தேவையான button மற்றும் Tool barகளை முகப்பில் தெரியுமாறு customize செய்துவிடலாம். தரவிறக்க முகவரி http://www.skyforu.info/notepad7/

மனதிற்கு பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு.....

இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு.
சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும். அந்த வகையில் இன்று மனதிற்கு அமைதியை அளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுக்கும். சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் அமைதியை தரும். இப்படி அழகான இசையை நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்குத் தகுந்தபடி மாற்றி அமைக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதினை வருடும். இணையதள முகவரி http://www.ambient-mixer.com/

பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பயனுள்ள தளம்

இணையத்தில் நல்ல செய்திகளோடு கெட்ட செய்திகளும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
Google தனது Youtube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு channel ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்துப் பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். Youtube-ல் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன.
இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் Youtube-ல் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும்.
மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் சம்பந்தமான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற channel இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம்.
மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் Youtube-ன் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இணையதள முகவரி http://www.youtube.com/schools?gl=IN

வீடியோக்களின் formatகளை மாற்றுவதற்கு....

இணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை நாம் விரும்பிய formatகளில்
மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில வீடியோக்களில் audio மட்டும் தான் நமக்கு தேவைப்படும். அப்படி audio மட்டும் தேவைப்பட்டாலும் நாம் முழு வீடியோவையும் தரவிறக்கம் செய்து தான் கேட்க முடியும்.
இனி இணையத்தில் உள்ள வீடியோ முகவரியை கொடுத்து விரும்பிய formatக்கு எளிதாக மாற்ற ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் windowவில் URL என்று உள்ள கட்டத்திற்குள் எந்த தளத்தின் வீடியோவை மாற்ற வேண்டுமோ அந்த தளத்தின் வீடியோ முகவரியை கொடுக்கவும்.

அடுத்து இருக்கும் Output என்ற கட்டத்திற்குள் எந்த format-ல் நமக்கு சேமிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Download என்று இருக்கும் buttonஐ click செய்தால் போதும், அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த வீடியோ சில நிமிடங்களில் குறிப்பிட்ட formatக்கு மாற்றப்பட்டு இருக்கும்.
இதில் இருக்கும் Download iconஐ click செய்தால்நம் கணினியில் எளிதாக தரவிறக்கலாம். இனி வீடியோக்களில் உள்ள audio மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எளிதாக இத்தளத்தின் மூலம் பெறலாம். இணையதள முகவரி http://www.convertvideotoaudio.com/