Pages

10 Jan 2012





சீனா தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் புதுமையும், அறிவையும் புகுத்தி வெற்றி கண்டு வருகின்றது. 30 மாடிகள் கொண்ட ஒரு தங்கும் விடுதியை 15 நாட்களில் கட்டி முடித்திருக்கின்றனர்.

சீனாவில் உள்ள Changsha மாகாணத்திலுள்ள Inland நகரத்தில் அமைந்துள்ள ஆர்க் என்ற தங்கும் விடுதியே இவ்வாறு மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.


183,000 சதுர அடிகள் கொண்ட இந்த தங்கும் விடுதி அசுர வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட போதும் 9 ரிக்டர் அளவில் வரும் பூமியதிர்ச்சியையும் தாங்கும் வல்லமை கொண்டது.இந்த தகவலை கட்டுமான நிறுவனத்தினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்தச் சாதனை முழுவதும் காணொளியில் படமாக்கப்பட்டுள்ளதை நீங்களும் காணலாம்.



நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு



அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களைத் தருகின்றது. http://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subsribe செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும். அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் Googleன் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை தெரிவித்த பின்னர் save செய்துவிடவும். இனிமேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும். மேலும் அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும் எனவும், ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கின்றது இந்தத் தளம்.

இரண்டே வாரத்தில் 14 லட்சம் order-களை குவித்து Aakash Tablet உலக சாதனை



Aakash Tablet-களைப் பற்றி அறிந்து இருப்பீர். உலகிலேயே மிகக் குறைவான விலையுள்ள Tablet முதன் முதலாக இந்தியாவில் Datawind நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு Rs.2500 க்கு வெளியாக அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது. இதன் அடுத்த version Ubislate 7 இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. Online-ல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பெருமாலானவர்கள் இந்த Tablet-களை online-ல் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் Datawind நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் ஆர்டர்கள் குவிகிறது. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே வாரத்தில் 14லட்சம் Tablet-கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சராசரியாக ஒரு நாளைக்கு 1,00,000 Tablet-கள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் மிகப் பெரிய சாதனை ஆகும்.  இதற்கு முன் Apple நிறுவனத்தின் iPad நான்கு வாரத்தில் 1,000,000 விற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. Aakash இந்த இமாலய இலக்கை இரண்டே வாரத்தில் முறியடித்து விட்டது.
 
இவ்வளவு ஆர்டர்களை எதிர்பார்க்காத Datawind நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. இந்த முன்பதிவு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் Cochin, Noida மற்றும் Hyderabad என இந்தியாவில் மூன்று உற்பத்தி நிறுவனங்களை தொடங்க உள்ளது.
 
 
மிக மலிவான விலையில் கிடைப்பதாலும் சிறந்த வசதிகள் இருப்பதாலும் இவ்வளவு Tablet-கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. Ubislate முன்பதிவு செய்ய http://www.ubislate.com/prebook.html

கணினி நன்றாக இயங்க



கணினி நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

1. உங்களுடைய இயங்குதளம் update ஆக இருக்க வேண்டும். புதிய இயங்குதளத்திற்கு மாற வேண்டும் என்பதில்லை. பயன்படுத்தும் இயங்குதளத்திற்கான அண்மைக் காலத்திய update கோப்புகள் இறக்கப்பட்டு பதியப்பட்டிருக்க வேண்டும்.

2. நீங்கள் உருவாக்கிய தகவல்கள் பாதுகாப்பாக இருக்க சிறப்பான antivirus கணினியில் நிறுவியிருக்க வேண்டும். அதுவும் அவ்வப்போது update ஆக இருக்க வேண்டும்.

3. தேவையில்லாமல் கணினி boot ஆகும் போதே தொடங்கி பின்னணியில் இயங்கும் programme -கள் உங்கள் கணினி பணியை தாமதப்படுத்தும். எனவே தேவையற்ற programme -கள்இயங்கிக் கொண்டிருந்தால் நீக்கி விடுங்கள்.

4. Firewall ஒன்று அவசியம் வேண்டும். Windows இயக்கத்துடன் வரும் Firewall  கூட போதும்.

5. Tool bar-களை அவ்வப்போது tune செய்திட வேண்டும். தேவைப்படும் Tool bar-களை மட்டும் இயங்க வைத்திட வேண்டும். தேவையற்ற Tool bar-களை மூடிவிட்டால் RAM memory-யில் இடம் கிடைக்கும். கணினியும் வேகமாக இயங்கும்.

6. அடுத்தது தான் மிக முக்கியம். இந்த செயல்பாடு மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மாதம் ஒரு முறையாவது கணினியில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்



பார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்எஸ்கே கார்ப்பரேஷன். வாகன பேரிங்குகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தானியங்கி சாதனங்களுக்கான உதிரி பாகங்கள், ரோபோக்களில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் ஜப்பானின் எலக்ட்ரோ கம்யூனிகேஷன்ஸ் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நாய் ரோபோ தயாரிக்கும் ஆய்வில் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி என்எஸ்கே நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: பார்வையற்றவர்கள், மற்றவர்கள் துணையின்றி நடந்து செல்ல வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ரோபோ நாயை உருவாக்கியுள்ளோம்.

இதன் கன்ட்ரோல் யூனிட் கைப்பிடி பகுதியை பார்வையற்றவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். ரோபோவின் 4 கால்களிலும் சக்கரங்கள் உள்ளன. சமதளம் மட்டுமின்றி மேடு, பள்ளங்கள், படிக்கட்டுகளில்கூட இந்த ரோபோ ஏறிச் செல்லும். அதற்கேற்ப முன் பக்கம், பின் பக்கம் மடியுமாறு கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிரே யாராவது வந்தாலோ, வேகத்தடை, கல் போன்றவை இருந்தாலோ குரைப்பது போல சத்தம் கொடுக்கும். தடைகளை கண்டுபிடிக்க ரோபோவின் முகப்பு மற்றும் கால் பகுதியில் சென்சார்கள், கமெராக்கள் உள்ளன. கன்ட்ரோல் யூனிட் கைப்பிடியில் உள்ள பட்டன்களை அழுத்தினால் எதிரே என்ன இருக்கிறது, வாகனங்கள் வருகிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம். கனிவான பெண் குரலில் இத்தகவல்களை ரோபோ நாய் தெரிவிக்கும்.

இறுதிகட்ட ஆய்வு முடிந்த பிறகு இது அறிமுகப்படுத்தப்படும். சொல்வதை புரிந்துகொள்ளும் திறன், ஜிபிஎஸ் உதவியுடன் தானாகவே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்து செல்வது ஆகிய வசதிகளை சேர்ப்பது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகிறது.