Pages

5 Dec 2011

கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

குற்றப் புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக் கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Australiaவைச் சேர்ந்த ஷீஃபீல்ட் ஹாலம் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்க வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தக் கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரையிலும் தடயப் பொருள்களில் காணப்படும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தே விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் விரலில் ஒட்டிக் கொள்ளும் பொருட்களின் நுண்ணிய துகள்களைக் கொண்டு அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி உடலில் சுரக்கும் திரவங்கள் தொடும் பொருள் மீது ஒட்டிக்கொள்வதாக கூறப்படுகிறது. எனவே ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் புதிய ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் பந்து

ஜப்பானிய பொறியியலாளரின் வடிவமைப்பில் உருவானது தான் Futuristic Circular Flying Object எனப்படும் பறக்கும் பந்து!  இது மின்காந்த அலைகளால் கட்டுப்படுத்தக் கூடியது. பறக்கும் போது எதிலும் மோதாமலிருக்கும் வண்ணம் விசேட sensorகளை இதன் வடிவமைப்பாளர் பயன்படுத்தியுள்ளார்.  தன்னகத்தே ஒரு நுண் துளைக் cameraவையும் கொண்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற பயணத்தை இது மேற்கொள்ளும். இதன் எடை வெறும் 340grams மட்டுமே ...! இந்த லிங்கில் உள்ள வீடியோவைப் பாருங்கள் watch?v=6tZHRvXrYnU

உலகின் 2வது உயரமான சூரிய சக்திக் கோபுரம்

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் Arizona பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும். மேலும் இதன்மூலம் சுமார் 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சுற்றுச் சூழலை பாதிக்காத செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் என இதனை உருவாக்கவுள்ளதாக இந்நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இது போன்ற ஒரு திட்டத்தை நமது நாட்டில் ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைத்தால் மின் தடை இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.


rundll32.exe என்றால் என்ன?

Windows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.  Rundll32.exe கோப்பு நம் கணணியில் Task Managerல் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்தக் கோப்பு தங்கி இருந்து மற்றக் கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழைச் செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.  ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. Exe அல்லது com கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. windows system இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe கோப்பு.  32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணணியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.

Spy Robo Bird

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்துத் துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு வழிகள் கையாளப்பட்டன.  ஒற்றர்கள் மூலம் உளவு பார்த்தல், பறவைகள் மற்றும் மிருகங்கள் மூலம் உளவு பார்க்கும் நடைமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப்பட்டன. தற்காலத்தில் அதைவிட மிக நுணுக்கமான முறைகள் கையாளப்படுகின்றன.
watch?v=-LOBSje-3x8&feature=player_embedded
அமெரிக்க இராணுவமானது இத்தகைய பல உளவு பார்க்கும் கருவிகளை தயாரித்துள்ளது. இவற்றை யாராலும் எளிதாக அடையாளம் காண முடியாத வண்ணம் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவத்தில் பறவைகள் மற்றும் பூச்சிகள் வடிவிலும் காணப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது எதிரிகளுக்கு சற்று கடினம்.