Pages

26 Dec 2011

அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய Auto Saver மென்பொருள்

நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம். வேலை செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் கணினியை நிறுத்திவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும். அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும். அப்படி வரும் போது நாம் கணினியில் கடைசியாக செய்த வேலை Save செய்ய மறந்திருப்போம். இது போல சமயங்களில் இந்த மென்பொருள் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

பயன்கள் :
  • இந்த மென்பொருளை உபயோகிப்பதால் நாம் ஒவ்வொரு முறையும் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.
  • நாம் எந்த programme-ல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அது தானாகவே சேமிக்கப்படும்.
  • இந்த மென்பொருளை Install செய்யத் தேவையில்லை. நேரடியாக இயக்கிக் கொள்ளலாம்.
  • சிறிய அளவே உடையது(768 kb) . தரவிறக்க
உங்களுக்கு வரும் Zip File Extract செய்து பின்னர் வரும் AutoSaver என்ற file-ஐ நேரடியாக உபயோகிக்கலாம் (Install செய்ய வேண்டியதில்லை). அந்த file-ஐ இயக்கினால் உங்களுக்கு கீழே உள்ளதைப் போல window வரும்.
  • Save Interval:  இந்த windowவில் நீங்கள் உங்கள் உங்கள் பக்கங்களை Save செய்வதற்கான நேர இடைவெளியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் குறைந்தது 15 வினாடிகள் வரை தேர்வு செய்யலாம்.
  • Run Windows Starts : இது உங்களுக்கு தேவையென்றால் தேர்வு செய்து கொள்ளலாம். இல்லையேல் விட்டு விடலாம். இதை தேர்வு செய்தால் உங்கள் கணினி துவக்கியதும் இது தானாகவே இயங்க ஆரம்பிக்கும்.
  • முடிவில் Hide என்பதை click செய்தவுடன் அந்த மென்பொருள் மறைந்து விடும். இயங்க ஆரம்பிக்கும்.
அவ்வளவு தான் இனி நீங்கள் தேர்வு செய்த நேர இடைவெளிக்கு ஒருமுறை நீங்கள் எந்த programme-ல் வேலை செய்து கொண்டிருந்தாலும் அது தானகவே Save செய்து விடும். இனி நீங்கள் Save செய்ய வேண்டிய அவசியமில்லை.

கணினியை வேகமாக Defragment செய்ய இலவசமாக மென்பொருள்

கணினியின் செயல் திறனை வேகபடுத்த அனைவரும் நம் கணினியை Defragment செய்வோம். Defragment என்பது நாம் கணினியில் சேமிக்கப்படும் அனைத்து பைல்களும் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நம் கணினியில் சேமிக்கப்படும். இவை அனைத்தையும் வரிசையாக அடுக்கி வைப்பதே Defragment ஆகும். இதைச் செய்ய நம் கணினியிலேயே வசதி இருந்தாலும் அதில் செய்தால் வெகு நேரம் காத்துக் கிடக்க வேண்டும். வேகமாகவும் மிகவும் எளிதாகவும் செய்ய ஒரு மென்பொருள்  இலவசமாக கிடைக்கிறது.

பயன்கள்:
1) நம் கணினியை Defragment செய்ய மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம்   இல்லை.
2) இந்த மென்பொருளை activate செய்ய serial key கொடுக்க வேண்டியதில்லை.
இதில்  Auto Defrag வசதியும் உள்ளது. நாம் set செய்யும் கால இடைவெளியில் நம் கணினியை Defrag செய்து கொள்ளும்.
3) நம் கணினியில் குறைந்த அளவு இடத்தையே இயங்குவதற்கு எடுத்துக்கொள்கிறது.
4) 1.12mb அளவே உடைய மிகச் சிறிய மென்பொருள்.
டவுன்லோட் செய்ய:
முதலில் இந்த http://db.iobit.com/license-free/sd-server-free-license.php தளத்தில் செல்லுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் அந்த மென்பொருளை பற்றி உங்கள் கருத்தை கூறி பின்னர் கீழே உள்ள Verification எண்ணை சரியாக கொடுத்து FreeCopy என்ற பட்டனை அழுத்தவும்.
பின்னர் உங்களுக்கு வரும் windowவில் Download பட்டனை அழுத்தி இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
பயன் படுத்தும் முறை: 
தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் install செய்து கொண்டு அந்த மென்பொருளை open  செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும்.
இதில் நீங்கள் Defragment செய்ய விரும்பும் டிரைவ் தேர்வு செய்து கொண்டு Analyze பட்டனை அழுத்தவும். உங்கள் கணினியின் fileகள் அனைத்தும் scan ஆகி என்னென்ன  fileகளை Defragment செய்ய வேண்டும் என்ற செய்தி உங்களுக்கு வரும்.
அதில் உள்ள GO என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த டிரைவ் Defragment ஆக தொடங்கும். ஆகி கடைசியில் நமக்கு முடிவும் வரும்.
அடுத்து Auto Defrag சென்றால் நம் கணினியில் CPU usage பற்றி தெரிந்து கொள்வோம்.
Schedule க்ளிக் செய்து Auto Defrag கால இடைவெளியை தேர்வு செய்து கொள்ளவும்.
அவ்வளவு தான் இனி உங்கள் கணினியை சுலபமாக  Defrag செய்து நம் கணினியின் வேகத் திறனை அதிகபடுத்தலாம்.

Google Chrome 16 தரவிறக்கம் செய்வதற்கு.....

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.
காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட இலவசமாக கிடைக்கப் பெறும் மென்பொருட்களில் உள்ளது.
Google Chrome 16: இணைய உலாவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும்.
இந்த உலாவியின் எளிமையான தோற்றமும் வேகமான செயல் திறனாலும் அனைவரும் இந்த உலாவியை விரும்பி பயன்படுத்துகின்றனர்.  இந்த மென்பொருள் கூகுளில் தயாரிப்பு என்பது இதன் கூடுதல் பலமாகும். தற்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை chrome 16 வெளியிட்டு உள்ளனர். தரவிறக்கம் செய்ய https://www.google.com/chrome/?brand=ECBA&installdataindex=yes-apps-yes-promo

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanilla Extensions

Google குரோம் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். Cookies என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்கப்படும் ஒரு சிறிய application ஆகும். ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை தானே புகுத்திக் கொள்ள இவைகள் பயன்படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.
இணைய தளங்களில் உலாவும் போது இந்த Cookies கள் நமக்கு தெரியாமலேயே நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. புகுந்து கொண்டு நம் உலவியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்மை பற்றிய தகவல்களை அனைவருக்கும் அனுப்பி விடுகின்றன. இதில் நம்முடைய ரகசிய வங்கி கணக்கு எண்களும், passwordகளும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் மிகப் பெரிய அபாயம் உள்ளது. ஆகவே இதில் இருந்து நாம் கவனமாக இருக்க ஒரு வழி உள்ளது.
இந்த Cookiesகளை அடிக்கடி நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு மறந்துவிடும் என் வேலைகளுக்கு இடையில் எனக்கு செய்ய நேரமிருக்காது என்று கூறுகிறீர்களா. கவலையை விடுங்கள் உங்களுக்காக ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது இந்த link-ல் https://chrome.google.com/webstore/detail/gieohaicffldbmiilohhggbidhephnjj?hl=en#detail/gieohaicffldbmiilohhggbidhephnjj சென்று இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

Show Options click செய்தவுடன் கீழே இருப்பதை போல window வரும்.

  • இதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்கள் உலவி ஞாபகம் வைத்து கொள்ளவேண்டிய தளங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
  • கீழே உள்ள Auto delete என்ற கட்டத்தில் tick குறியிட்டு பக்கத்தை மூடிவிட்டால் போதும் இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் உங்கள் கணினியில் Cookies அழிக்கப்படும்.
  • இனி நீங்கள் உங்களுக்கு தேவையான இணையப்
    பக்கங்களை மட்டும் White list-ல் சேர்த்து விடுங்கள்.
  • Auto delete ஆகும் போது இந்த Whitelist-ல் உள்ள cookies அழிக்கப்படாது மற்றவைகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • Clear Unwanted Cookies என்று கொடுத்தால் நம்முடைய கணினியில் இதற்கு முன்னர் உள்ள அனைத்து  cookiesகளும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டுவிடும்.
  • Whitelist-ல் இரண்டு தளங்களை சேர்த்து இருப்பதால் அந்த இரண்டு cookies-களும் அழிக்கப்படவில்லை.
  • இனி நீங்கள் பாதுகாப்பாக கூகுள் குரோமில் இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்

ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம்!

ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது பொன்மொழிகள் தான். பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திறமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள்.
நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோ ஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும்.
Google சிறந்த தேடியந்திரமாக இருந்தாலும் அந்த மொன்மொழிகளை மட்டும் தனியே பிரித்து தேடுவது சிரமம். அந்த சிரமத்தை போக்க வந்துள்ளது ஒரு புதிய தேடியந்திரம்.
இந்த தேடியந்திரத்தில் சென்று அறிஞர் பெயரையோ, சரியான keyword கொடுத்தால் போதும் Enter கூட அழுத்த வேண்டியதில்லை அறிஞர்களின் பொன்மொழிகள் மட்டும் உங்களுக்கு தனியே பிரித்து காட்டும்.
இந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வார்த்தை கொடுத்து தேடினால் போதும் உங்களுக்கு அடுத்த நொடியில் பொன்மொழிகள் வந்துவிடும்.
ஒவ்வொரு பொன்மொழிக்கு அருகிலும் அந்த பொன்மொழியை சொன்ன அறிஞரின் பெயரும் இருக்கும். இது போன்று ஆயிரக்கணக்கான அறிஞரின் பொன்மொழிகளை இந்த தேடியந்திரம் நமக்கு தருகிறது. இணையதள முகவரி
http://quotecoil.com/

வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் வரை ஒளிப்படம் எடுக்ககூடிய கமெராவை கண்டுபிடித்து விஞ்ஞானி சாதனை!

Ultra Slow motion camera தான் cricket போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த வகை cameraக்கள் ஒரு வினாடிக்கு 1000 shot வரை எடுக்கக் கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் shot எடுக்கக் கூடிய cameraக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த camera மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதைக் கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன் Frames எடுக்கக் கூடிய புதிய camera இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.
இந்த புதிய cameraவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தைக் கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும். இந்த camera MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டுபிடித்துள்ளார்.
சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் smart போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

Recuva புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்

எதிர்பாராத விதமாக நம்மை அறியாமல் நாம் அழித்த கோப்புகளை மீட்பதில் நமக்குப் பெரிய அளவில் சிறப்பாக உதவிடும் programmeகளில் ஒன்று ரெகுவா (Recuva). இதன் புதிய பதிப்பு 1.42.544 அண்மையில் வெளியாகி உள்ளது.
இது ஓர் இலவச programme என்பது அனைவருக்கும் தெரியும். Directoryகளில் மற்றும் கோப்பறைகளில் இருந்து நீக்கும் கோப்புகள் மட்டுமின்றி recycle binலிருந்து நீக்கும் கோப்புகளையும் இந்த programme மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
அத்துடன் virus programme-ன் பிழையான இயக்கம் மற்றும் கணினி crash ஆகியவற்றால் நீக்கப்படும் கோப்புகளையும் ரெகுவா நமக்கு மீட்டுத் தரும்.
C Cleaner வழங்கும் நிறுவனமான Piriform நிறுவனமே இதனையும் வழங்குகிறது. இரண்டுமே இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதனுடைய சிறப்பம்சங்கள்:
1. மிக எளிதான interface வழியாக 'Scan' என்பதை click செய்து பின்னர் நாம் மீண்டும் பெற விரும்பும் நீக்கப்பட்ட  கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. கோப்பின் பெயர் மற்றும் வகை அடிப்படையில் மீட்கப் பட வேண்டிய கோப்புகளை வரையறை செய்திடலாம்.
3. List மற்றும் Tree வகையில் கோப்புகளைக் காணும் வசதி.
4. USB பிளாஷ் ட்ரைவில் இருந்து இயக்கலாம்.
5. Office documents, Images, Video, Music, மின்னஞ்சல் என எந்த வகை கோப்புகளையும் மீட்டுத் தரும்.
6. FAT12, FAT16, FAT32, exFAT, NTFS, NTFS5 , NTFS மற்றும் EFS ஆகிய அனைத்து வகை கோப்புகளையும் மீட்டுத் தருகிறது.
7. கணினியில் இணைத்துப் பின் தனித்து எடுக்கப்படும் மீடியா வகையான SmartMedia, Secure Digital, MemoryStick, Digital cameras, Floppy disks, Jaz Disks, Sony Memory Sticks, Compact Flash cards, Smart Media Cards, Secure Digital Cards போன்ற அனைத்து வகை மீடியாக்களில் இருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்கிறது.
8. ஸிப் drive,  external hard drive மற்றும் USB hard driveகளில் இருந்தும் அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டுத் தருகிறது.
9. வேகமான இயக்கம் சிறிய அளவிலான கோப்பு மற்றும் நொடியில் இயங்கி முடிக்கும் சிறப்புக்களையும் கொண்டது.
புதிய பதிப்பில்:
1. JPEG மற்றும் PNG புதிய தொழில்நுட்ப முறை வடிவமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
2. Windows 8 சோதனைப் பதிப்பிற்கான தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
3. Keyboard navigation-ல் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
4. பெரிய அளவிலான driveகளுக்கு கூடுதல் memory பயன்பாடு தரப்பட்டுள்ளது.
5.  குறைகள் பல நீக்கப்பட்டுள்ளன.
தரவிரக்கம் செய்திட  http://www.piriform.com/recuva/download

Google + Page வசதியை மற்றவர்கள் உபயோகப்படுத்துவதற்கு!

Google + தளத்தில் Page வசதியை Google நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் பெரும்பாலானவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனியாக Page உருவாக்கலாம்.
தற்பொழுது இந்த Google + பக்கத்தில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். உங்கள் Google + பக்கத்தில் நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்தின் மேலாளர்களுக்கோ அட்மின் வசதியை அளிக்கலாம்.
இதன்மூலம் குழு உறுப்பினர்களுக்கு அட்மின் வசதியை கொடுக்கலாம். எப்படி அட்மின் வசதி அளிப்பது என கீழே பார்ப்போம்.
அட்மின் வசதியை வழங்குபவருக்கு:
முதலில் Google +ல் நுழைந்து உங்களின் Page திறந்து கொள்ளுங்கள். அடுத்து Setting பகுதிக்கு சென்று Google Settings என்பதை click செய்யுங்கள்.
உங்களுக்கு ஒரு window open ஆகும். அதில் உள்ள Managers என்பதை click செய்யுங்கள்.
அதில் அட்மின் வசதி அளிக்க நினைக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
நீங்கள் அவரின் மின்னஞ்சல் முகவரி கொடுத்து Invite button அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு Pop-up window வரும். அதில் Continue என்ற button அழுத்தவும்.
உங்களின் அழைப்பு அந்த மின்னஞ்சலுக்கு செல்லும். அவ்வளவு தான் உங்களின் வேலைமுடிந்தது. இனி நீங்கள் Invite செய்த நபர் என்ன செய்யவேண்டும் என பார்க்கலாம்.
அட்மின் வசதியை பெறுபவர்களுக்கு:
அதில் உள்ள Accept என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு பகுதி open ஆகும். அதில் இதே முகவரியில் தொடரவேண்டுமா இல்லை வேறு ஏதேனும் மின்னஞ்சல் முகவரியில் அட்மின் வசதி வேண்டுமா என கேட்கும். உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Continue என்ற button அழுத்தவும்.
Continue கொடுத்தவுடன் உங்களுக்கு அடுத்த பக்கம் ஓபன் ஆகும், அதில் உங்கள் User Id, Password கொடுத்து login செய்தால் போதும் அட்மின் வசதியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
Note1: Google +  பக்கத்தின் உரிமையாளர்(Owner) நினைத்தால் எந்த நேரத்திலும் இந்த அட்மின் வசதியை நீக்க முடியும்.
Note2: இந்த முறையில் அதிகபட்சமாக 50 நபர்கள் வரை அட்மின் வசதியை வழங்கலாம்.

சின்ன அம்மை நோயை தடுக்கும் சூரிய ஒளி!! ஆய்வில் தகவல்!


சின்ன அம்மை நோய் பரவாமல் தடுக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. சின்ன அம்மை நோய் ஒருவித வைரசால் பரவுகிறது. அதை தடுக்க ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நோய்க்கு சூரிய ஒளி சிறந்த மருந்து என தெரியவந்துள்ளது.

லண்டனை சேர்ந்த நிபுணர்கள் குழு சின்ன அம்மை நோய் தாக்கியவர்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வைத்தனர். அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறைந்தது. அது மேலும் பரவவில்லை. ஏனெனில் அது வைரஸ் கிருமிகளை அழித்து அவற்றின் நோய் பரப்பும் தன்மையை கட்டுப்படுத்தியது. எனவே சின்ன அம்மை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக சூரிய ஒளி திகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.