Pages

26 Dec 2011

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க- Vanilla Extensions

Google குரோம் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். Cookies என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்கப்படும் ஒரு சிறிய application ஆகும். ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை தானே புகுத்திக் கொள்ள இவைகள் பயன்படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.
இணைய தளங்களில் உலாவும் போது இந்த Cookies கள் நமக்கு தெரியாமலேயே நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. புகுந்து கொண்டு நம் உலவியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்மை பற்றிய தகவல்களை அனைவருக்கும் அனுப்பி விடுகின்றன. இதில் நம்முடைய ரகசிய வங்கி கணக்கு எண்களும், passwordகளும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் மிகப் பெரிய அபாயம் உள்ளது. ஆகவே இதில் இருந்து நாம் கவனமாக இருக்க ஒரு வழி உள்ளது.
இந்த Cookiesகளை அடிக்கடி நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு மறந்துவிடும் என் வேலைகளுக்கு இடையில் எனக்கு செய்ய நேரமிருக்காது என்று கூறுகிறீர்களா. கவலையை விடுங்கள் உங்களுக்காக ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது இந்த link-ல் https://chrome.google.com/webstore/detail/gieohaicffldbmiilohhggbidhephnjj?hl=en#detail/gieohaicffldbmiilohhggbidhephnjj சென்று இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

Show Options click செய்தவுடன் கீழே இருப்பதை போல window வரும்.

  • இதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்கள் உலவி ஞாபகம் வைத்து கொள்ளவேண்டிய தளங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
  • கீழே உள்ள Auto delete என்ற கட்டத்தில் tick குறியிட்டு பக்கத்தை மூடிவிட்டால் போதும் இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் உங்கள் கணினியில் Cookies அழிக்கப்படும்.
  • இனி நீங்கள் உங்களுக்கு தேவையான இணையப்
    பக்கங்களை மட்டும் White list-ல் சேர்த்து விடுங்கள்.
  • Auto delete ஆகும் போது இந்த Whitelist-ல் உள்ள cookies அழிக்கப்படாது மற்றவைகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • Clear Unwanted Cookies என்று கொடுத்தால் நம்முடைய கணினியில் இதற்கு முன்னர் உள்ள அனைத்து  cookiesகளும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டுவிடும்.
  • Whitelist-ல் இரண்டு தளங்களை சேர்த்து இருப்பதால் அந்த இரண்டு cookies-களும் அழிக்கப்படவில்லை.
  • இனி நீங்கள் பாதுகாப்பாக கூகுள் குரோமில் இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்

No comments:

Post a Comment