Pages

16 Jan 2012

Youtube for Schools பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பயனுள்ள தளம்

இணையத்தில் நல்ல செய்திகளோடு கெட்ட செய்திகளும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

Google தனது Youtube சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு channel ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்துப் பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான Google கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.



தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். Youtube-ல் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன.

இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் Youtube-ல் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும்.

மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் சம்பந்தமான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற channel இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம்.

மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் Youtube-ன் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இணையதள முகவரி http://www.youtube.com/schools?gl=IN

Ozone-ல் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்





விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த நூற்றாண்டின் மத்தியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை முழுமையாக மூடப்பட்டுவிடும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலையில் மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விடயமாக புவி வெப்பமாதல் உள்ளது.

பூமி உருண்டையில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், வருடந்தோறும் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புதிய நோய்கள் விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம் என பல பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.புவியின் வெப்பம் அதிகரிப்பிற்கு மனிதனின் தவறுகளால் பூமியின் மேற்பரப்பில் போர்வை போல் போர்த்தப்பட்டுள்ள ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையே முக்கிய காரணம்.

சூரியனில் இருந்து வரும் புற ஊதா உள்ளிட்ட மனிதர்களை பாதிக்கும் கதிர்களை தடுத்து வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் கேடயமாக இருப்பது ஓசோன் படலம். அதிகரித்து வரும் carbon கழிவுகள் காரணமாக பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் பூமிக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்று 1970 ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள பகுதில் இருக்கும் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை கொஞ்சம் கொஞ்மாக பெருத்து வருவதாக 1980 ம் ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக புறஊதாக்கதிர்களால் மனிதர்களுக்கு தோலில் allergy, கண்ணில் cataract, தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்றும் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 1987 ம் ஆண்டு 196 நாடுகள் கனடாவின் மொன்ட்றியல் நகரில் கூடி ஓசோன் படலத்தின் ஓட்டை மேலும் பெரியதாகாமல் தடுப்பது எப்படி என்று அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தன. பின்னர் ஓசோன் படலத்தை பாதுகாக்க 196 நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதன் பின் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓசோன் குறித்து 300 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் தொகுப்பை அளித்துள்ளனர். அதன்படி carbon கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.ஓசோனை பாதிக்காத பொருட்களை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 10 கிகா tone carbon கழிவுகள் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பெரிதாவது தடைபட்டு சுருங்கி வருகிறது.

1980 ம் ஆண்டில் இருந்த நிலைக்கு வரும் 2045 முதல் 2060 ம் ஆண்டு காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் ஓட்டை சிறுத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் துருவத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் படலம் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் அடைவு ஏற்பட முயற்சிப்பதும் பருவநிலை மாறுபடும் போது ஓட்டை அடைபடுவதில் தடை ஏற்படுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Solar தொழில்நுட்பத்துடன் கூடிய Charger மரம் அறிமுகம்


France நாட்டை சேர்ந்த விவியன் முல்லர் என்ற விஞ்ஞானி Solar  இலைகளுடன் கூடிய Bonsai சார்ஜர் என்ற மரம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
மரங்களை தொட்டியில் வளர்க்கும் கலைக்கு bonsai என்று பெயர். இக்கலையையும் Solar தொழில்நுட்பத்தையும் சேர்த்து Bonsai சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.

இதுகுறித்து முல்லர் கூறுகையில், சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு Electree என்று பெயர் வைத்திருக்கிறேன்.

இதை உருவாக்க 3 ஆண்டுகள் ஆனது. வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளிபடும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.
சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய solar panel-கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

மேலும் இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட battery தக்கவைத்துக் கொள்ளும். முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் Electree 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றார்.

கண்ணாடி இல்லாமல் அறிமுகமான உலகின் புதிய Android Tablet



உலகிலேயே முதல் glass free 3D display கொண்ட சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ game பிரியர்களுக்கு இந்த 3D display இன்னும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

இந்த wikipad-ன் 8 inch திரை ஒரு விளையாட்டு மைதானம் போன்ற அனுபவத்தை கொடுக்கும். இது Android 4.0 இயங்குதளத்தைக் கொண்டிருப்பதால் புதிய தலைமுறை விளையாட்டுகளையும் இதில் தடையில்லாமல் விளையாடலாம்.

Wikipad-ன் நினைவகம் 8GBயைக் கொண்டிருக்கிறது. மேலும் இது Micro SD card கொண்டிருப்பதால் இதன் மூலம் நினைவகத்தை 64 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

வீடியோ game சிறப்பாக விளையாட 4 button-களை இது கொண்டிருக்கிறது. எளிதாக தொலைக்காட்சி மற்றும் கணினி திரையில் இணைத்து பெரிய திரையில் வீடியோ game  விளையாடலாம்.

இந்த Wikipad-ன் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஆனால் வரும் முன்பே மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்

Facebook மூலம் பரவும் Ramnit Virus



Facebook வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி வெகு வேகமாக நாசத்தை விளைவித்தRamnit என்னும் virus இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது.

இது தற்போது Facebook வாடிக்கையாளர்களின் கணினிகளில் பரவி அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன் கணினியையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Seculert என்ற virus ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது. இதுவரை 45 ஆயிரம் Facebook account-களைப் பாதித்து தகவல்களைத் திருடி அனுப்பி உள்ளது. அந்த account-களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராம்நிட் virus தாக்குதல் தொடங்கியது. Anti-Virus தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் McAfee நிறுவனம் இது குறித்து கூறுகையில் இந்த malware  EXE, DLL, மற்றும் HTML ஆகிய file-களைத் தாக்கி முடக்குவதாக 2010 அக்டோபரில் அறிவித்தது.

மிகத் தெளிவாக இந்த virus செயல்படும் விதத்தினையும் விலாவாரியாக விளக்கியது. இப்போது இந்த virus-ன் இன்னொரு பரிமாணம் வெளியாகி பரவுகிறது என Quarri Technologies என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் முறை வந்த போது ராம்நிட் virus flash drive-கள் மூலம் வந்ததாகக் கண்டறியப்பட்டது. தற்போது Facebook மூலம் பரவுகிறது. கம்ப்யூட்டரில் சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள் கம்ப்யூட்டரின் பிற இயக்கங்களிலும், சமுதாய இணைய தளங்களிலும் ஒரே password பயன்படுத்துவதனைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எனவே தான் இந்த virus-ன் புதிய வகை Facebook சமுதாய தள வாடிக்கையாளர்களின் account-ல் விளையாடுகிறது. இரண்டு வகைகளில் இந்த virus-ன் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.

முதலாவதாக, Facebook account வைத்திருப்பவர்கள் அந்த தளத்தில் சந்தேகப்படும் வகையில் link இருந்தால், அவற்றின் மீது click செய்திட வேண்டாம்.

எந்த தளம் நண்பர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து link வந்தாலும், அதில் click செய்திடும் முன் சரியானதுதான எனச் சோதனை செய்த பின்னரே click செய்திட வேண்டும்.

இரண்டாவதாக, Facebook account password-ஐ மற்ற account-கள், குறிப்பாக வங்கி சேவைகளில் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு சேவைக்கும் ஒரு password பயன்படுத்த வேண்டும். நிதி சார்ந்த வேலைகளுக்கு மட்டுமின்றி, ஜிமெயில் மற்றும் பிற இமெயில் சேவைகளிலும் தனித்தனி password அமைத்துக் கொள்வது புதிய ராம்நிட் வைரஸிலிருந்து நம்மைக் காக்கும்.

தற்போதைக்கு இந்த ராம்நிட் virus அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டில் பரவலாகப் பரவிக் கொண்டு வருகிறது. விரைவில் Facebook தளம் மூலம் மற்ற நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பாதிக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன.  பன்னாட்டளவில் 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.

Windows 7, XP கணினிகளில் System Restore Point உருவாக்குவது எப்படி?

Windows கணினிகளில் System Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது கணினிகளில் ஏதேனும் software install செய்வதற்கு முன்னர் Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்ப்பட்டு  கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் crash ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்லப் போனால் System Restore Point உங்கள் கணினி settings backup  எடுத்து வைப்பது எனக் கூறலாம்.
Windows7 கணினிகளில் System Restore Point உருவாக்க:
  • முதலில் உங்கள் My computer icon மீது right click செய்து Properties தேர்வு செய்யவும்.

அடுத்து System Production என்பதை click செய்யவும்.

அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும். அதில் Create என்பதை அழுத்தவும்.

அடுத்து வரும் window-வில் Description கொடுக்கவும். Install  செய்யப் போகும் மென்பொருளை பற்றி  ஞாபகம் வைத்துக் கொள்ள சுலபமாக இருக்கும்.

அடுத்து கணினியின் Restore Point உருவாக்கப்படும்.


அவ்வளவு தான் உங்களுடைய System Restore Point உருவாக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் தைரியமாக மென்பொருளை install செய்து கொள்ளலாம்.
XP கணினிகளில் System Restore Point உருவாக்க:
Start - All Programs - Accessories - System Tools சென்று System Restore என்பதை click செய்யவும்.

அடுத்து Create a System Restore Point என்பதை தேர்வு செய்யவும்.

அடுத்து Description கொடுக்கவும்.

அடுத்து Create button click செய்யவும்.

அவ்வளவு தான் Restore Point உருவாகி விடும்.

இனி கணினியில் ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்கள் உருவாக்கியுள்ள Restore my computer to an earlier time என்பதை click செய்து கணினியை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.