Windows கணினிகளில் System Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது கணினிகளில் ஏதேனும் software install செய்வதற்கு முன்னர் Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்ப்பட்டு கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் crash ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்லப் போனால் System Restore Point உங்கள் கணினி settings backup எடுத்து வைப்பது எனக் கூறலாம்.Windows7 கணினிகளில் System Restore Point உருவாக்க:
- முதலில் உங்கள் My computer icon மீது right click செய்து Properties தேர்வு செய்யவும்.

அடுத்து System Production என்பதை click செய்யவும்.

அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும். அதில் Create என்பதை அழுத்தவும்.

அடுத்து வரும் window-வில் Description கொடுக்கவும். Install செய்யப் போகும் மென்பொருளை பற்றி ஞாபகம் வைத்துக் கொள்ள சுலபமாக இருக்கும்.

அடுத்து கணினியின் Restore Point உருவாக்கப்படும்.

அவ்வளவு தான் உங்களுடைய System Restore Point உருவாக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் தைரியமாக மென்பொருளை install செய்து கொள்ளலாம்.
XP கணினிகளில் System Restore Point உருவாக்க:Start - All Programs - Accessories - System Tools சென்று System Restore என்பதை click செய்யவும்.

அடுத்து Create a System Restore Point என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்து Description கொடுக்கவும்.
அடுத்து Create button click செய்யவும்.

அவ்வளவு தான் Restore Point உருவாகி விடும்.
இனி கணினியில் ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்கள் உருவாக்கியுள்ள Restore my computer to an earlier time என்பதை click செய்து கணினியை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.
No comments:
Post a Comment