Pages

24 Dec 2011


ஆபிரிக்காவிலுள்ள Cambridgeshire. விலங்கினக் காட்சி சாலையில் ஆமையொன்று ஒரே தடவையில் 45 குஞ்சுகளை ஈன்றுள்ளது, இந்த ஆமை உலகிலுள்ள பெரியவகை ஆமைகளில் மூன்றாவது. இதன் குஞ்சுகள் வளரும் போது 26 முதல் 36 inch நீளத்திலும் 150 Kg நிறையையும் பெறும்!
சாதரணமாக ஒரு ஆமை 15 - 30 முட்டைகளை இடும். இம்முறை 45 முட்டைகளை இட்டமை தமக்கு ஆச்சரியத்தை தருவதாக இதன் வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை ஆமைகள் 160 வருடங்களுக்கு மேலாகவும் வாழும் வல்லமை கொண்டவை, ஆமை முட்டைகளை மக்கள் அதிகம் விரும்பி உண்பதாலும், ஏனைய மிருகங்கள் மண்ணினுள் இருக்கும் ஆமை முட்டையை உண்பதாலும் இவை அருகி வரும் இனமாக பிரகடகனப்படுத்தப்பட்டுள்ளன.

ஓய்வின் ரகசியம்

இன்றைய காலகட்டத்தில் ஓய்வெடுப்பது மிக மிகக் குறைவு. விடுமுறை நாளில் ஓய்வெடுக்க எண்ணினாலும், வேலைப்பளுவினால் ஓடவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

ஓய்வு என்பது கண்ணை மூடி உறங்குவது மட்டுமல்ல. அதிகாலை 5 மணி அளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அப்பொழுதுதான் எந்தவித பதற்றமோ படபடப்போ இருக்காது.
அன்றைய பணிகளை அமைதியாக திட்டமிட அந்த நிமிடங்கள் ஏற்றவை. எனவே இதுவும் ஒருவித ஓய்வு தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தியானம், யோகா ஆகியவை மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் மனத்திற்கும், உடலுக்கும் நல்ல ஓய்வு நிலைக்கு கொண்டு வரும்.

மனதிற்கு பிடித்த பாடலை கேட்பது, வாய்விட்டு பாடுவது இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் நம் மனதை லேசாக்கும். அதேபோல் விருப்பமான பாடலுக்கு நடனமாடுவது உடலையும், உள்ளத்தையும் வானத்தில் பறக்கவைக்கும். இதன்மூலம் எத்தகைய பிரச்சினைகளையும் நம்மால் சமாளிக்கக் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் அது போல் நாம் சிரித்தால் மிகப்பெரிய ஓய்வு நிலையை ஏற்படுத்தும். நாம் அன்றாடம் செய்யும் வேலையில் உள்ள சுமைகளை குறைப்பதில் நகைச்சுவைக்கு பங்குண்டு.
சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.

உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனம் தான். எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம்கையில்தான் இருக்கிறது.
ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். ஓய்வின் மூலம் நோயை விரட்டி ஆரோக்கியத்தை அடையலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிசய இரட்டைத் தலை ஆண் குழந்தை!


ஒரு பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அவர்களின் முழு உடலும் இணைந்து உள்ளது. தலைகள் மட்டும் தனித் தனியாக உள்ளது.இரட்டைத் தலைகளைக் கொண்டு ஒரு குழந்தை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டு தலைகளும் சரியாகவும், ஒரே மாதிரியாகவும் உள்ளதாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Emanoel and Jesus என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் இரு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளனர்.

பிரேசில் நாட்டிலுள்ள Anajas என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலமே இரட்டைத் தலையைக் கொண்ட இரு குழந்தைகளும் பிறந்துள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு இரு மூளைகளும், இரண்டு முள்ளந்தண்டு எலும்புகளும், ஒரே ஒரு இதயமும் உள்ளன. இரண்டு தலைகள் மூலமும் உணவு வழங்கப்படுகின்றது. இரண்டு வயிறு உள்ளதா என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

25 வயதான இரட்டைக் குழந்தைகளின் தாயான Maria de Nazareis கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த அதிசயமான குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான Neila Dahas கருத்துத் தெரிவிக்கையில்,
குழந்தைகளின் உடல் சாதாரண குழந்தைகளின் உடல் தோற்றத்தைப் போலவே இருக்கின்றது. இரு தலைகளில் ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குவது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கின்றோம். இரண்டு தலைகளில் உள்ள மூளைகளும் வேலை செய்வதாக இருந்தால் எதை நீக்குவது என்பது குழப்பமாக உள்ளது. என்றார்.
இந்த ஆண்டு பிரேசிலில் பிறந்த இரண்டாவது இரட்டைத்தலைக் குழந்தைகளே இவர்களாவர். முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகள் oxygen பற்றாக்குறை காரணமாக இறந்தன.