Pages

19 Jan 2012

Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.



இதில் உங்களுக்கு தேவையான special character மீது click  செய்தால் அந்த special character copy செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து special character அளவை பெரிது படுத்தி கொள்ளலாம்.


 
மற்றும் special character-களை Html Code ஆகவும் copy செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான special characterகளையும் உங்கள் document பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம்.  இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்.

தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற


நமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம்.இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும்.



எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான recycle bin வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள். உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தெரிவு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள்.



பின் open ஆகும் window-வில் உங்களது கணினியில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ்வை தெரிவு செய்து தேவையான அளவினை slider மூலம் நிர்ணயிக்கலாம்.

இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும். நாம் பொதுவாக recycle bin அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கும் ஏற்ப அளவினை நாமே அமைத்துக் கொள்ளலாம்.

விண்வெளியில் 10 மிதக்கும் புதிய கோள்களை கண்டுபிடித்து ஆய்வாளர்கள் சாதனை





விண்வெளியில் கோடிக்கணக்கான விண்மீன்களும், பல கிரகங்களும் உள்ளன. இருந்தும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தினந்தோறும் புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

விண்வெளியில் உள்ள கோள்கள் பொதுவாக ஏதாவது சூரியனை சுற்றி வரும். ஆனால் அப்படி சூரியனை சுற்றாமல் தனியே மிதக்கும் 10 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியாளர் அயன்பாண்ட் தலைமையில் சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அயன்பாண்ட் கூறியதாவது: நட்சத்திர குடும்பத்தில் 10 புதிய மிதக்கும் கோள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை வியாழன் கிரகத்தின் அளவுக்கு உள்ளன. பால் வெளி மண்டலத்தில் இத்தகைய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை.

மாசே பல்கலைக்கழக கணணி பிரிவு ஆராய்ச்சியாளர்கள் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு மூலம் இவை கண்டறியப்பட்டுள்ளன. இவை பூமியில் இருந்து சுமார் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. வெறும் கண்ணால் புதிய கோள்களை பார்க்க முடியாது. இவை ஏதேனும் ஒரு சூரிய குடும்பத்தில் இருந்து தப்பித்து வந்த கோள்களாக இருக்கலாம்.

Google Music விளம்பரப் பாடல்

Google நிறுவனம் Apple-ளுக்குப் போட்டியாக Music Store திறந்தது குறித்து சென்ற வாரம் தகவல் வெளியானது. அந்த storeக்கான விளம்பரப் பாடல் ஒன்றை Google வெளியிட்டுள்ளது.

பழைய முறையில் பாடல்கள் நமக்கு எப்படி கிடைத்தன என்று காட்டி இப்போது எவ்வளவு எளிதாக Google Music Store-ல் பாடல்களை வாங்கலாம் என்று நம் ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசிக் தளம் Android Market https://market.android.com/ music என்பதுடன் இணைந்து இயங்குகிறது.  Music.google.com/about என்ற முகவரியில் இந்த தளத்தில் என்ன என்ன கிடைக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

இங்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்திடவும், இசைக்கப்பட்டு கேட்கவும் கிடைக்கின்றன. Google Music store-ல் நீங்கள் விரும்பும் பாடல்களைப் பதிந்து வைக்கலாம். இதன் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றைக் கேட்டு ரசிக்கலாம்.நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கும் பாடல்களை Google + மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Windows 7ன் இயங்குதளத்தில் மீடியா பிளேயர்

 

Windows சிஸ்டத்துடன் Windows Media Player நமக்குத் தரப்படும் சாதனமாகும். கணினி உபயோகப்படுத்தும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் இதுவாகும். ஆனால் இதுவரை Windows XP சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த Windows Media Player-க்கும், தற்போது Windows 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் Media Player-க்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

இதனால் Windows XP -யிலிருந்து Windows 7 இயங்குதளத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான சில இயக்கங்களை இங்கு காணலாம். Windows 7 சிஸ்டத்தில் இயங்குபவர்கள் முதலில் Windows Media Playerஐ இயக்கவும். Recommended Settings என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்த பின்னர் Finish என்பதில் click செய்திடவும். இதில் option கிடைக்கும்.

ஆனால் அது இதில் அதிகம் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே. அடுத்து Music Player சில sample music கோப்புடன் திறக்கப்படும். CD வழி பாடல் கேட்க CDஐ அதன் Tray-ல் வைத்திடவும்.
Windows Music Player தானாகவே அதில் உள்ள இசை கோப்பை அடையாளம் கண்டு இசைக்கத் தொடங்கும். பின்னர Ctrl  பட்டன்களுடன் ஒலியின் அளவு இயக்கும் விதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்பம் அல்லது பாடலைக் காண கீழாக வலது பக்கம் உள்ள iconஐ click செய்திட வேண்டும்.

பாடலை இயக்குகையில் CDஐ Music Player Libraryயில் கொண்டு செல்ல, வலது பக்கம் உள்ள CD அடையாளத்தில் click செய்தால் போதும். இதில் சிறப்பு என்னவென்றால் CD இயக்கப்படும் போதே இதனை மேற்கொள்ளலாம். இந்த ரிப்பிங் செயல்பாடு முடிந்தவுடன் ஆல்பம் libraryயில் பட்டியலிடப்படும். CDஐ உருவாக்க அங்கு தரப்பட்டுள்ள Burn Tabஐ தேர்ந்தெடுத்து, நீங்கள் விருப்பப்படும் பாடல்களை இழுத்துவிட்டால் போதும்.