Pages

22 Jan 2012

உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு செய்யலாம்

தனியார் Mobile நிறுவனங்கள் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.  இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது. BSNL நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் Online-ல் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வசதியை முதன் முதலில் நவம்பர் 1, 2011- ல் ஆந்திராவில் அறிமுகப்படுத்தியது BSNL நிறுவனம். மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த வசதியின் மூலம் 1.2 லட்சம் பேர் புதிதாக சேர்ந்தனர். இந்த மாபெரும் வரவேற்ப்பை அடுத்து இந்த வசதியை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி உள்ளது BSNL நிறுவனம். இந்த வசதியின் மூலம் 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என BSNL கணித்துள்ளது.
BSNL நிறுவனத்தின் சேர்மன் R.K. Upadhyay அறிவிப்பு கீழே
“Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 20 lakh new subscribers”
ஆன்லைனில் விருப்பமான BSNL நம்பரை தேர்வு செய்ய:


சென்னை வாடிக்கையாளர்கள்- http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/ch/gsm_choice.asp
தமிழ்நாட்டின் இதர பகுதியினர் - http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/tn/gsm_choice.asp
இதர மாநிலத்தில் வசித்தால் – http://sancharsoft.bsnl.co.in/auction/vacant_nos/choose_ur_no.html


நீங்கள் இருக்கும் பகுதிக்கு ஏற்ப உள்ள link-ல் click செய்து BSNL தளத்திற்கு செல்லவும். அங்கு இடது புறத்தில் நம்பர்களின் பட்டியல் இருக்கும். இதில் ஒவ்வொரு link-ல் சுமார் 98,000 நம்பர்களுக்கு மேல் உள்ளது. அதில் உங்கள் பிடித்த விருப்பமான நம்பரை தேர்வு செய்த பின்னர் மேலே உள்ள RESERVE NUMBER என்பதை click செய்யவும்.



அதில் உள்ள Reserve Number அழுத்தியவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொடர்பு மொபைல் எண்ணை கொடுத்து கீழே உள்ள Submit என்ற button அழுத்தவும்.



உங்கள் மொபைல் எண்ணுக்கு 7 இலக்க பின் நம்பர் SMS வரும், ஒருவேளை SMS வரவில்லை என்றால் அங்கு கொடுத்துள்ள 7 இலக்க PIN நம்பரை அதில் type செய்து கொள்ளவும். அந்த PIN நம்பரும் முக்கியமானது குறித்து வைத்து கொள்ளுங்கள்.



அந்த PIN நம்பரை கொடுத்து Submit பட்டனை அழுத்தினால் உங்கள் நம்பர் பதிவு செய்யப்படும்.


 
இனி நீங்கள் அருகில் இருக்கும் BSNL அலுவலகத்தை 72 மணி நேரத்திற்குள் சென்று பதிவு செய்யப்பட மொபைல் எண்ணையும், அந்த PIN நம்பரையும் கொடுத்து மற்றும் எப்பொழுதும் போல ID PROOF, ADDRESS PROOF கொடுத்து உங்கள் எண்ணை வாங்கிக் கொள்ளுங்கள்.
 
SMS மூலமாகவும் BSNL நம்பரை பதிவு செய்யலாம்:

NLIST <Space> Circle Code <space>1-5 digits 

Example: NLIST<space>CHN<space>00117
என்ற பார்மட்டில் BSNL வாடிக்கையாளர்கள் – 53734, மற்ற வாடிக்கையாளர்கள் – 9494453734 என்ற எண்ணுக்கும் SMS அனுப்பி உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை பதிவு செய்து கொள்ளலாம்.

வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது: நாசா விஞ்ஞானிகள் தகவல்


வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன்.
வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது.

அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர்.
இந்த நிலையில் வியாழன் கிரகத்தில் உள்ள யூரோப்பா என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. யூரோப்பாவில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன.

அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது.இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி தெரிவித்துள்ளார்.

பெண்களை விஞ்சும் அளவுக்கு மிகச் சிறப்பாக ஆடை உடுத்தும் நாய்











சராசரிப் பெண்களிடம் இருக்கும் ஆடைகளை விட இந்த நாயிடம் அதிகளவில் ஆடைகள் இருக்கின்றன.... நீங்கள் நம்பித் தான் ஆக வேண்டும். Britain-ன் சிறப்பாக ஆடை உடுத்திக் கொள்ளும் நாய் என்ற சிறப்பு இதற்கு கிடைத்துள்ளது. இந்த நாய் ஒருநாளைக்கு குறைந்தது மூன்று தடவைகள் ஆடைகள மாற்றிக் கொள்கின்றது.

இரண்டே வயதான diva dog Rocky என்ற இந்த நாய் தான் Britain-ல் அழகாக ஆடைகளை உடுத்திக் கொள்ளும் நாய் என மகுடம் சூட்டிக் கொள்கின்றது.
இந்த நாயிடம் 2500 Sterling Pound மதிப்பிலான சுமார் 1500 விதமான ஆடைகள் இருக்கின்றனவாம்.

இந்த நாயை அர்ப்பணிப்புடன் வளர்த்து வரும் 26 வயதான Lynsey Noble என்ற அதன் உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

சராசரியாக பிரித்தானியாவில் வாழும் பெண்ணொருவர் ஆடை வாங்குவதற்கு செலவழிக்கும் தொகையை விட இந்த நாய்க்கு அதிகமாக செலவளித்துள்ளதாகக் கூறுகிறார் அதன் உரிமையாளர்.
நான் நாய்க்கு செலவழிப்பது பற்றி எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னைக் கேலி செய்கின்றனர்.. ஆனாலும் நான் அதைப் பொருட்படுத்துவதில்லை.



வேலை தேடுபவர்களுக்கு உதவும் தளம்

வேலை தேடுபவர்களின் முதல் வேலை bio-data. அதன் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். Bio-data பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அதனை தயாரிப்பது எப்படி என்பது தான். Bio-data விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாகப் புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக bio-dataவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை. அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்துக் கொண்டால் bio-data போல இருக்காது.
பக்காவான, செயல்திறன் மிக்க bio-dataவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது.இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல bio-data எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ, குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்துக் கொள்கிறது. வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதைக்

கொண்டு அழகான bio-data readyயாகி விடுகிற‌து.  நாலைந்து வகையான பொதுவான templateகள் bio-dataவுக்கு இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.  துறைவாரியாக சம்பிக்கப்பட்ட bio-dataக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன. அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன. PDF கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Bio-dataக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை. தள முகவரி http://www.resumebaking.com/