தண்ணீரில் நடக்க ஆசைப்படுபவர் பலர் உள்ளனர். ஆனால் இங்கு தண்ணீரில் நடக்கும் பெண் வித்தியாசமான முறையில் முயற்சி செய்துள்ளது. இந்த பெண்ணினால் இம்முயற்சியை 8 வினாடிற்கு மேல் செயல்படுத்த முடியவில்லை. சிலர் உதவியால் இந்த முயற்சியிலிருந்து வெளிவந்துள்ளது.
23 Dec 2011
அமில மழை பொழிவதற்கான காரணம் என்ன?
சாதாரண மழையில் நாம் நனைந்திருப்போம், `ஜில்’லென்ற உணர்வை அனுபவித்திருப்போம். சில சமயங்களில் மழை பெய்யும்போது அதில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். அந்த மழையை `அமில மழை’ என்கிறார்கள். சாதாரணமாகப் பெய்யும் மழையில் அமிலத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் வானவெளியில் உள்ள கரியமில வாயு மழைநீருடன் கலந்து வீரியமில்லாத கார்பானிக் அமிலமாக மாறிவிடுகிறது. அமில மழையிலோ கந்தகமும், நைட்ரஜன் ஆக்சைடுகளும் கலந்துவிடுவதால் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்கள் உருவாகிவிடுகின்றன. அதை, `வீரியம் மிக்க அமில மழை’ என்கிறார்கள்.
அமில மழை பொழிவதற்கான காரணம் என்னவென்று அறியலாம்…

வானத்தில் சூழ்ந்திருக்கும் இயற்கை நிலைமைகள் பொதுவாக அமில மழைக்குக் காரணமாகின்றன. அத்துடன், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன. அடிக்கடி குமுறும் எரிமலைகளும், காடுகள் தீப்பிடிப்பதால் ஏற்படும் புகையும், மின்னல் மற்றும் திடப்பொருட்களின் நொதிவு ஆகியவையும் வானத்தில் வீரிய அமிலத் தன்மையை உண்டாக்குகின்றன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதியில் உள்ள மீன்கள் பெருமளவில் உயிரை இழக்கின்றன. அந்தப் பிரதேசங்களில் உள்ள சின்னஞ்சிறு உயிரினங்களும் அமில மழையால் உயிரிழக்க நேரிடுகிறது. சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அமில மழையால் தாவர இனங்களும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட காரணமாகும் மரபணுக்கள்!!
சரியான உணவு முறைகளை பின்பற்றாமல் கண்டபடி அதிக உப்பு, கொழுப்பு பண்டங்களை சாப்பிடும் குழந்தைகள் இன்று அதிகம். குழந்தைப் பருவ உடற்பருமன் தற்போது 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்வில் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து கழிக்கும் நேரம் அதிகரித்து பெற்றோருடன் பழகும் நிலைமை மாறி தனிமை அதிகரித்து உள்ளது. அதனால் Steroids உடலில் உற்பத்தியாகி "சின்ட்ரோம் X '' என்ற உடல் பருமன் நோய் உருவாகுகிறது.
இதனால் 30 வயதிற்குள்ளாகவே உடற்பருமன், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறைந்து கெட்ட கொழுப்பு அதிகரித்து இருதய ரத்தக் குழாய்கள் தடித்து அடைத்துப் போய் மாரடைப்பு ஏற்படுகிறது.
கெட்ட புரதச்சத்து ரத்தத்தில் அதிகரித்தல், நேரம் கெட்ட நேரத்தில் இரவு பகல் பாராமல் உட்கார்ந்து வேலை செய்தல், தூக்கமின்மை, தொலைக்காட்சி, கைபேசி மற்றும் கைபேசி டவரில் இருந்து வெளிப்படும் EMR என்ற மின்காந்த அலைகள் மற்றும் காற்று மற்றும் உணவு மாசுபடுதல் போன்றவைகளாலும் நோய்கள் ஏற்படுகிறது.
இதில் வியப்பான விஷயம் சீனர்களும், ஜப்பானியரும் கொழுப்பு உள்ள உணவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு மிகக்குறைந்த அளவே இருதய நோய் வருகிறது.
இதற்கு காரணம் அவர்கள் உடலில் உள்ள Geneகள் நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரித்து அதிக கொழுப்பினால் வரும் ஆபத்தை தடுக்கிறது.
பூமிக்கு வெளியே இருந்து பிடிக்கப்பட்ட படங்கள்!
அண்டவெளியில் இருந்து பூமியை மிகச் சிறப்பாக நவீன முறையில் படம் பிடித்துள்ளார்கள். பூமியின் சில பிரதேசங்கள் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கின்றன.சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்துமகா சமுத்திரம் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட பூமி தொடர்பான படங்கள் உங்கள் பார்வைக்கு...
Subscribe to:
Posts (Atom)