Pages

13 Dec 2011

விதவிதமான screen saverகளை பெறுவதற்கு....

பொதுவாக பலர் தங்களின் கணினி பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று விதவிதமான wallpaperகளை download செய்து தங்கள் கணினியில் வைத்திருப்பார்கள். அவற்றை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். 
விதவிதமான அழகிய  screen saverகளை ஒரு சிறிய மென்பொருளின் மூலம் பெறலாம். 21 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும்.  தள முகவரி  http://www.4shared.com/file/Pq73UdnT/3-in-1_wall_papers.html

கணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு....

கணினி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. இந்தக் கணினி உபயோகம் கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கணினியோடு படுத்து உறங்குகிறார்கள்.
Computer Vision Syndrome(சி.வி.எஸ்) என்று சொல்லக் கூடிய ஒரு பாதிப்பு கணினியில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
கண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த Computer Vision Syndrome-ன் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமும் முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால் கணினியில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்து விடுவது தான் என்று தெரியவருகிறது.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை(14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.
கணினியில் உட்கார்ந்து வேலை செய்யும் போது கண் சிமிட்டுவது குறைந்து விடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது.
மேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.
இதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்?
1. Monitor மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி screen விற்கிறது. இதை வாங்கி உங்கள் Monitor-க்கு முன்னால் மாட்டிக் கொள்ளுங்கள்.
2. கணினியும் நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி, கழுத்துவலி வந்து விடும்.  கவனமாக இருங்கள்.
உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ முதல் சுமார் 50 செ.மீ தூரம் தள்ளி Monitor இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், Monitorக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து Monitor பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.
4. தொடர்ந்து கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடை இடையில் உங்கள் பார்வையை வேறு பக்கம் மற்றுங்கள்.
5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் Monitor-லிருந்து சுமார் 70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.
6. கணினியில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது.

ஆங்கிலம் கற்க உதவும் பயனுள்ள இணையம்!!

ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் பயம் தான். இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் classbites தளமும் ஒன்று.இதில் என்ன சிறப்பு என்னவென்றால் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்றுக் கொள்ள classbites வழி செய்வது தான்.

பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள். ஆசிரியர் எளிதாக சொல்லிக் கொடுத்தாலும் கூட சிக்கல் ஏற்படலாம். இந்த பிரச்சனைக்கு தான் classbites வீடியோ வடிவிலான குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது. கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.

குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல். அதிக நேரம் தேவைப்படாமல் குறுகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்தப் பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. Classbites தளத்தில் காணக் கூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓடக் கூடியவை.

குறுங்கல்வி(Micro learning) என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வார்த்தை உச்சரிப்பு, இலக்கண பயன்பாடு, கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எப்போது விருப்பமோ அப்போது படித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும். இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடங்கள் தேவை என்று பரிந்துறைப்பதற்காகத் தான்.

ஒரு விதத்தில் classbites தளம் இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.


பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும். சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.


பாடங்களை படிக்கத் துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளவும் சுவையான வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள். இந்த தளத்தின் முகவரி http://classbites.com/

சுவற்றில் எந்தப் பிடியும் இல்லாமல் நிற்க்கும் வினோத மனிதர்

ஜெர்மனைச்  சேர்ந்த Ohan Lorbeer என்பவர் தெருக்களில் நடத்தும் வித்தையை தான் இப்போது நாம் பார்க்கிறோம். தெருக்களில் இவர் நடத்தும் வித்தையால் ஜெர்மனில் மிகவும் பிரபலமாகி வருகிறார். Ohan Lorbeer வித்தையின் ரகசியம் என்ன என்றால் சுவரில் இருப்பது இவருடைய உண்மையான கை அல்ல. உண்மையான கை ஆடைக்கு உள்ளே உள்ளது.

134 நாட்கள் உணவின்றி உயிர் வாழ்ந்த தங்கமீன்கள்

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 2 தங்க நிற மீன்கள் உணவின்றி 134 நாட்கள் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச்சில் உள்ளது குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் அலுவலகம். அதன் வரவேற்பு அறையில் 100 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் ஒரு மீன் தொட்டியில் ஷாகி, டாப்னி என்று பெயரிடப்பட்ட 2 தங்க நிற மீன்கள் உள்ளன.

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 181 பேர் பலியாகினர். அந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்த மாதம் தான் குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர். காரணம் கடந்த 134 நாட்களாக யாருமே அலுவலகம் வராத நிலையில் உணவின்றி அந்த 2 தங்க நிற மீன்கள் உயிருடன் உள்ளன.

இது குறித்து கலிபோர்னியாவின் மாண்டரே பே அக்வாரியத்தின் மேற்பார்வையாளர் பால் கிளார்க்சன் கூறுகையில், "அந்த மீன் தொட்டியில் இருந்த பாக்டீரியா தண்ணீரை சுத்தமாக வைத்திருந்திருக்கக்கூடும். மீன்கள் அந்த தொட்டியில் வளர்ந்த நீர்ப்பாசியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கும். ஆனால் அதே தொட்டியில் இருந்த மேலும் 3 தங்க நிற மீன்கள் இருந்த அறிகுறியே இல்லை," என்றார்.

கொலைவெறி டி பாடல் செய்யப் போகும் அடுத்த சாதனை


சமீபத்தில் வெளியான கொலைவெறி டி என்ற பாடல் Youtubeல் சக்கை போடு போட்டுக்  கொண்டு இருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை இது வரை 2 கோடியை தாண்டி விட்டது.  Youtube தளமும் தங்க மெடல் கொடுத்து கவுரவித்தது. ஒரு தமிழ்ப் பாடல் Youtubeல் இந்த அளவு வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது ஆச்சரியமே. சோனி நிறுவனம் வெளியிட்டதால் தான் இந்த வரவேற்ப்பு என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக இந்தப் பாடல் மாறி இருக்கிறது. இவ்வளவு மகுடங்களை பெற்ற இந்தப் பாடல் அடுத்ததாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் ஒரு வருடத்திற்கான(Airtel mobitude 2011) உபயோகத்தினை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் பாடல்கள் download செய்யப்பட்டுள்ளதாம். அதில் வெளியிட்ட 18 நாட்களில் கொலைவெறி டி பாடலை 2,10,000 பேர் ஏர்டெல் மொபைல்களில் இருந்து download செய்துள்ளனர். சமீபத்தில் ரா-ஒன் படத்தில் வெளியான Chammak challo என்ற பாடல் தான் 2011ல் அதிகம் download செய்யப்பட வீடியோ பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.

ஆனால் வெளியான 18 நாட்களில் இவ்வளவு பேர் download செய்திருப்பதாலும், இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டால் இதன் எண்ணிக்கை பல மடங்கு கூடும் என்ற நம்பிக்கையிலும் கொலைவெறி டி பாடல் அதிகம் download செய்யப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் சுலபமாக முதல் இடத்தை பிடித்துவிடும்.

அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட பாடல் வீடியோக்கள் பட்டியல்:
  1. சமாக் சல்லோ
  2. திங்கா சிக்கா
  3. செனோரீட்டா மகர் பிர் பி
  4. சோர்க்கா சக்தே ஹயே
  5. டேரி  மெரி மெரி டேரி 

 

வீடியோக்களை bookmark செய்து வைப்பதற்கு...

Youtube வீடியோக்களை பார்வையிடும் போது Watch Later என்ற வசதியின் மூலம் அவற்றை பின்னர் பார்த்து ரசிக்கலாம். எனினும் Youtube போன்று பிரபலமான Vimeo, TED மற்றும் Facebook வீடியோக்களை பின்னர் பார்வையிடுவதற்கு ஏற்றவாறு bookmark செய்து வைத்தும் பார்க்கலாம். இந்த வசதியை http://radbox.me/ எனும் தளம் தருகின்றது.இத்தளத்தில் பதிவு செய்த பின்னர் வீடியோக்களை புக்மார்க் bookmarklet மூலமாகவும் அல்லது கைபேசி மூலம் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் வீடியோ URLஐ மின்னஞ்சல் செய்வதன் மூலமும் bookmark செய்து வைக்கலாம்.

QD தொலைக்காட்சிகள் விரைவில் அறிமுகம்

தற்போது பிரபலமாகி வரும் 3D தொலைக்காட்சிகளுக்குப்  பதிலாக QD தொலைக்காட்சி எனப்படும் புதிய தலைமுறைக்கான தொலைக்காட்சியை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்தப்  புதிய தொலைக்காட்சியை மடித்து எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த QD தொலைக்காட்சி மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாகவும், வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது Flat Screen தொலைக்காட்சியை விட தொழில்நுட்பத்திறன் அதிகம் கொண்டதாகும். இந்த QD தொலைக்காட்சி. அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.