Pages

3 Feb 2012

இரத்தம் இல்லாமல் பிறந்து உயிருடன் மீண்ட அதிசய குழந்தை


இறப்பிலிருந்து மீண்ட அதிசய குழந்தை பற்றிய செய்தியே இது... Oliver Morgan என்ற இந்தக் குழந்தை பிறக்கும் போது அதன் உடலில் இரத்தம் எதுவும் இல்லை என்ற மருத்துவ அதிசய உண்மை தெரிய வந்துள்ளது.
குழந்தை பிறக்கும் போது வெளிறிய நிறத்தில் தான் இருந்தது.

குழந்தை பிறந்த போது முதல் 25 நிமிடங்களுக்குள் இருதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை என்று மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக குழந்தைக்கு மென்மையான இருதய மசாஜ் உடன் ஒட்சிசன் சுவாசமும் வழங்கப்பட்டு உயிரைக்காக்கும் வழிமுறையாக தொப்புள் கொடி மூலம் இரத்தமும் ஏற்றப்பட்டது.

குழந்தையைப் பாதுகாக்க மருத்துவர்கள் கனமான இருதயத்துடனும் கண்ணீருடனும் போராடினர்.
Oliver தற்சமயம் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது குழந்தைக்கு 15 மாதங்கள் ஆகின்றது. அம்மாவான Katy உம் அப்பாவான Jeff உம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

குழந்தை உயிருடன் தப்பித்திருப்பது பற்றி 36 வயதான தாயாரான Katy கருத்துத் தெரிவிக்கையில்,
Oliver பிறந்த கதையைச் சொல்ல இப்பொழுதும் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ரத்தமே இல்லாமல் தான் பிறந்தான். ஆனால் தற்போது என் முன் சிரித்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறான். மருத்துவர்களால் மீளக் கொடுக்கப்பட்ட அற்புத பரிசாகவே நான் அவனைப் பார்க்கிறேன்.அவன் என்னைத் திரும்பிப் பார்க்கையில் நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.

ஹிட்டார் வாசிப்பதில் அசத்திய Britain சிறுமி


எட்டே வயதான Britain  சிறுமியின் அசத்திய ஹிட்டார் வாசிக்கும் திறமையினை இங்கே பாருங்கள்.
குறித்த சிறுமி தனது திறமையினால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

வேகமாகவும் இனிமையாகவும் ஹிட்டார் வாசிக்கும் இந்தச் சிறுமியின் வீடியோவை Youtube இல் பார்த்தவர்களின் தொகை மட்டும் பத்து இலட்சத்தை எட்டுகின்றது.இந்தச் சிறுமிக்கான ஆதரவு உலகம் முழுவதிலும் இருந்து பல்கிப் பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



உலகின் மிகப்பெரிய இறால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

உலகின் மிகப் பெரிய இறால் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 இஞ்சிகள் நீளமான குறித்த இறால் இனம் ஆழமான கடற்பகுதியில் தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Supergiant என்று அழைக்கப்படும் குறித்த இனம் நியூசிலாந்தின் கடற்பிரதேசத்தில் இருந்து நான்கு மைல்கள் தொலைவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 0.8in-1.2in நீளமுள்ளதாக குறித்த இறால் இனம் காணப்படுகின்றது.

இறாலில் இருந்து பத்து மடங்கு பெரியதான இந்த இறால் இனத்தை Aberdeen பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவினரே கண்டுபிடித்துள்ளனர்.
advanced camera-க்களின் உதவியுடன் தான் குறித்த இறால் இனம் படமாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.