Pages

16 Feb 2012

தெரிந்து கொள்வோம்



வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.


கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

3D Monitor ஒரு பார்வை


3D விளையாட்டு மற்றும் சினிமா வளர்ந்து வருகின்றது. இந்த தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் அதற்கேற்ப monitor தேவை என்பதில் ஐயமில்லை. இந்திய சந்தையில் இருக்கும் சில 3D monitor-காள் பற்றி இப்போது பார்ப்போம்.
BenQ XL2420T
- 24-inch full-HD 3D display
- D-Sub, DVI, two HDMI ports and even a DisplayPort
- 3.5mm audio output jack
- USB hub
இதன் சந்தை விலை இன்னும் வெளியாகவில்லை. சுமார் ரூபாய் 25,000/- இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
LG D2342P
-LED-backlit LCD monitors
- 23-inch viewing area
- DVI, D-Sub and HDMI port
- 3.5mm analog output
இதனை வெகு நேரம் உபயோகம் செய்கையில் தலைவலி ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர். இதன் சந்தை விலை ரூபாய் 14,300/- மட்டுமே.
ViewSonic V3D245
- 23.6-inch display
- supports 1920×1080 resolution
- connectivity options – a DVI, HDMI, D-Sub and 3.5mm analog out connector
- a pair of built-in speakers with 4 w
இதன் சந்தை விலை சுமார் 22,000/- ரூபாய்.



Google +ல் Translate வசதியை கொண்டு வர [Chrome]


பிரபல சமூக இணையதளமான கூகுளால் களமிறக்கப்பட்ட Google +  இணையதளம் நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்த வருட முடிவிற்குள் Google + சுமார் 500 மில்லியன் வாசகர்களை பெறும் என இணைய வல்லுனர்கள் கணித்துள்ளனர். மேலும் வாசகர்களை கவர நாளுக்கு நாள் பல்வேறு வசதிகளை Google +  தளத்தில் புகுத்தி கொண்டு உள்ளனர். அந்த வரிசையில் கூகுளின் மிக சிறந்த சேவையான Google Translate வசதியை எப்படி Google + தளத்தில் கொண்டு வருவது என இங்கு பார்ப்போம்.
Google +ல் Translator வசதியை கொண்டு வர: 
  • குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் தற்பொழுது இந்த வசதியை கொண்டு வர முடியும். முதலில் https://chrome.google.com/webstore/detail/jfppgkomfopklagggkjiaddgndkgopgl இந்த link-ல் click செய்து நீட்சியை குரோம் உலவியில் install செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு Google + தளத்தை open செய்து பாருங்கள். ஒவ்வொரு பதிவிற்கும் முடிவில் Translate என்ற link வந்திருக்கும். அதனை click செய்தால் அந்த பதிவு ஆங்கிலத்தில் மாறிவிடும். Default Language ஆங்கிலமாக தேர்வு செய்து இருப்பதால் பதிவுகள் ஆங்கிலத்தில் மாறும்.)
  • Default Language மாற்ற:
    நீட்சியின் மேல் mouse கர்சரை வைத்து right click செய்து Options என்பதை click செய்யவும்.
    அடுத்து வரும் window-வில் உள்ள Language என்ற பகுதியில் உள்ள மொழியை உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளவும்.
    மற்றும் மொழி மாற்றத்தின் பின்புற நிறத்தையும் இதில் தேர்வு செய்து கொள்ளலாம்.

முகச்சுருக்கமா? இனி கவலை வேண்டாம்


இளம் வயதிலேயே ஒரு சிலருக்கு சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். வறட்சியான தேகம், எண்ணெயில் பொரித்த உணவுகள். பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் இளமையிலேயே முகச்சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல் தேவையற்ற விசயங்களுக்கு கவலைப்படுவதும் முகச்சுருக்கம் ஏற்பட காரணமாகிறது. எனவே முகச்சுருக்கத்தைப் போக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்.
காய்ச்சி ஆறவைத்த பால் உடன் இரண்டு டீஸ்பூன் அதனுடன் நான்கு துளி எலுமிச்சை சாறு கலந்து இரவு படுக்கும் முன்பு முகத்தில் சுருக்கம் உள்ள இடங்களில் பூசவும். காலை எழுந்த உடன் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சோப் போடக்கூடாது. இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்து வர சுருக்கம் போகும்.
கேரட் சாறு, தேன்
ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து முகத்திலும் கழுத்திலும் தேய்க்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் கேரட் சாறு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து கழுத்திலும் முகத்திலும் தேய்க்கவும். 20 நிமிடத்திற்குப்பிறகு ஒரு பிஞ்ச் சோடா பை கார்பனேட் கலந்த சுடுநீரில் பஞ்சை முக்கி துடைத்தால் எப்படிப்பட்ட சுருக்கங்களும் மாயமாகி விடும்.
பப்பாளி, பாதம் எண்ணெய்
பப்பாளிப்பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும் பழுத்த பப்பாளியை நன்கு கூழாக்கி அதனை முகத்தில் தேய்ப்பது நல்ல பலன் தரும். பப்பாளி சதையை சாப்பிட்ட பின் அதன் தோலின் உட்பகுதியில் உள்ள பகுதியை தேய்த்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.
இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பாதம் எண்ணெயை நன்றாக முகத்தில் தேய்த்து உறங்கவும். பின்னர் காலையில் எழுந்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ சுருக்கம் போயே போச்சு.
வைட்டமின் ஈ
முகச்சுருக்கத்தை நீக்குவதில் ஈ வைட்டமினுக்கு முக்கிய பங்கு உண்டு. வைட்டமின் மாத்திரையை உடைத்து, அதனுடன் கிளிசரின் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். முகச்சுருக்கம் நீங்கும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
ஆரஞ்ச் ஜூஸ்
முகச் சுருக்கம் வராமல் தடுக்க வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும். துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தண்ணீர் குடிங்க
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன்மூலம் தோலில் ஈரப்பசை அதிகரித்து இளமை தோன்றும். அது முகச்சுருக்கத்தை நீக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் தினமும் குறைந்தது 1 1/2 லிட்டர் தண்ணீர் பருகவேண்டுமாம் இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.