Pages

8 Jan 2012

உங்களது மூளையின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கு தளங்கள்



உங்கள் மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நுண்ணறிவு, பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்ய பல தளங்கள் உதவி புரிகின்றன. மேலும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மாணவர்களுக்கும் மற்றும் வேலைவாய்ப்பு தேடுவோருக்கான பரீட்சைக்கும்  உதவியாக இந்த தளங்கள் அமைகிறது. உங்களின் தரத்துக்கு ஏற்ப பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.

IQ TEST: 25 பக்கங்களில் பல்வேறுபட்ட வகை நிலைகளில் வினாக்கள் இந்த தளத்தில் உள்ளன. http://www.iqtest.com/

INTELLIGENCE TEST: இந்த தளத்தில் உங்கள் பிறந்த தேதி விபரங்களுடன் உங்கள் பாலினத்தினையும் குறிப்பிட்டுத் தொடங்க வேண்டும். http://www.intelligencetest.com/

FREE IQ TEST: இது ஓர் புதிர் தளமாகும். ஒவ்வொரு வினாக்களுக்கும் தரப்பட்ட 60 வினாடிகள் நேரத்தில் பதில் வழங்க வேண்டும். http://www.free-iqtest.net/

இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அம்பலமாக்கிய Facebook!



முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் பேஸ்புக்கால் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இரண்டாம் திருமணத்தின் போது எடுத்த படங்களை Facebookல் நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக முதல் மனைவியிடம் மாட்டிக்கொண்டார்.

பிரித்தானியாவில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இந்நபருடைய இரண்டாம் திருமணம் நடைபெற்றது. இத் திருமணம் கடந்த வருடம் ஜுன் 25 இல் இடம்பெற்றது. இப்படங்களை 3 மாதங்களுக்குப் பின்னர் Facebookல் கண்ட முதல் மனைவி Policeல் தொடர்புகொண்டு முறைப்படி புகார் தெரிவித்திருந்தார். தான் திருமணம் செய்யாதவர் என்று கூறியே அந்நபர் இரண்டாம் திருமணத்தைச் செய்திருந்தார். இதனால் இவருக்கு 16 வார சிறைத்தண்டனையும் 250 Pound அபராதமும் விதிக்கப்பட்டது

Facebook-ல் Group உருவாக்குவது எப்படி?



Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம்.  எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.
Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.
  • முதலில் http://www.facebook.com/login.php சென்று  facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.


Group Name – குழுமத்தின் பெயர்
 
Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
 
Privacy
 
Open - இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
 
Closed - இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
 
Secret- உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
 
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

Contact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்


கண்ணின் கருவிழியின் மீது அணியும் contact lens வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கணணியை இயக்கி எந்தத் தகவலை வேண்டுமானாலும் திரட்டிவிடலாம். சிலர் எப்பொழுதும் மடிக்கணணியை சுமந்து கொண்டே சென்று கொண்டிருப்பார்கள். அந்த சுமையையும் குறைக்க உங்கள் கண்களில் contact lens பொருத்தி அதன் மூலம் இணைய இணைப்பை வழங்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள contact lensல் இணைக்கப்படும் antenna வெளியிலிருந்து வரும் தகவல்களைத் திரட்டித் தருகிறது. சிப்பில் பதிவாகும் அந்தத் தகவல்கள் மெல்லிய LED திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த வசதியின் மூலம் மின்னஞ்சல் உள்ளிட்ட பல தகவல்களைப் படிக்கலாம். இந்த contact lens ஒருவருக்குப் பொருத்தி வெற்றிகரமாக இயக்கிக் காட்டியுள்ள விஞ்ஞானிகள் இதனால் கண்ணுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். எனினும் கண்களுக்கு மிக அருகில் இருப்பதால் வாசகங்களைத் தெளிவாகப் படிக்க முடியவில்லை. இப்பிரச்னையை சரிசெய்ய தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்