Pages

3 Mar 2012

இணையத்தை பயன்படுத்துபவர் கவனிக்க வேண்டியவை



இணையத்தை பயன்படுத்தும் போது அனைவரும் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்திருக்க வேண்டும்.
1. Signing out: எப்போதும் இணையத்தை பயன்படுத்திய பின்னர் மறக்காமல் log out செய்யுங்கள். அத்துடன் கணினியை shut down செய்ய வேண்டும்.
2. Set a safe password: எப்போதும் பாதுகாப்பான கடவுச் சொற்களை தேர்வு செய்யுங்கள். ஞாபகப்படுத்தக்கூடிய சொற்தொடர்களை எடுத்து அதன் முதல் எழுத்துக்களை கடவுச் சொற்களாக மாற்றிக் கொள்ளலாம்.
3. How to recognise: மின்னஞ்சலில் வரும் இணைப்புக்களை அழுத்தும் முன் mouse குறிப்பிட்ட இணைப்புக்கு மேலே கொண்டு செல்வதன் மூலம் அதன் உண்மையான இணைய முகவரியை(URL) பாருங்கள்.
4. Use a safe browser: பாதுகாப்பான உலாவியை பயன்படுத்துங்கள். Firefox அல்லது Chrome உலாவியை (browser) பயன்படுத்தவதே எப்போதும் சிறந்தது.

தேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற



நமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம்.
இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு open ஆகும் window-வில் Global தெரிவு செய்யவும்.
எல்லா டிரைவ்விற்கும் ஒரே அளவிளான recycle bin வைக்க வேண்டும் என்றால் Use one settings for all drives எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள். உங்களுக்கு தேவையான டிரைவிற்கு ஏற்ப அளவினை தெரிவு செய்ய Configuare drives independently எதிரில் உள்ள ரேடியோ button தெரிவு செய்யுங்கள்.
பின் open ஆகும் window-வில் உங்களது கணினியில் உள்ள டிரைவ்கள் இருக்கும். தேவையான டிரைவ்வை தெரிவு செய்து தேவையான அளவினை slider மூலம் நிர்ணயிக்கலாம்.
இறுதியாக Apply செய்து Ok கொடுக்கவும். நாம் பொதுவாக recycle bin அனைத்து டிரைவ்விற்கும் சேர்த்து ஒன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதிலும் ஒவ்வொரு டிரைவ்விற்கும் ஏற்ப அளவினை நாமே அமைத்துக் கொள்ளலாம்.

மனதிற்கு பிடித்தமான இசையினை கேட்டு மகிழ்வதற்கு…..



இசைக்கு மயங்காத உயிரினங்கள் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வல்லமை உண்டு.
சில வகையான இசை நம்மை வீரம் உள்ளவர்களாக மாற்றும், சில வகை இசைகள் மனதை வருடும், சில வகையான இசை ஆட்டம் பாட்டத்தை உண்டு பண்ணும். அந்த வகையில் இன்று மனதிற்கு அமைதியை அளிக்கும் இசையயை ஒரு தளம் கொடுக்கிறது.
அழகான படங்கள் சில நேரங்களில் நம் மனதை விட்டு செல்லாமல் மகிழ்ச்சியை கொடுக்கும். சில இனிமையன இசை நம் மனதிற்கும் உடலுக்கும் அமைதியை தரும். இப்படி அழகான இசையை நமக்கு இலவசமாக கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இந்த தளத்தில் கிடைக்கும் பலவகையான இசை பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இசையும் அதற்கு தொடர்பான அழகான படத்துடன் காண்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கிறது. இசையின் ஒலி அளவை ஏற்றம் செய்வது முதல் நமக்குத் தகுந்தபடி மாற்றி அமைக்கும் படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கையில் கிடைக்கும் அத்தனை வகையான சத்தங்களையும் அழகாக பதிவு செய்து நம் மனதினை வருடும். இணையதள முகவரி http://www.ambient-mixer.com/

செல்போன் அழைப்பை தடுக்க புதிய கருவி



காரை ஓட்டிச் செல்லும் போது வரும் செல்போன் அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் வசதி மூலம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லுகையில் செல்போனை பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.
செல்போனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செல்போனால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைப்பதற்காக, ஸ்கோச் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ‘செல் கன்ட்ரோல்’ என்ற நவீன கருவியை அறிமுகம் செய்துள்ளது.
கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறிய கருவியான இதை காரில் பொருத்தினால் பயணத்தின் போது செல்போனுக்கு அழைப்பு வந்தால் புளுடூத் சிக்னல் மூலம் அழைப்பு தடுக்கப்படும். மேலும் SMS, E-Mail போன்ற சேவைகளை முற்றிலும் இக்கருவி தடுத்து விடும்.
குறிப்பாக வாடகைக் கார்களில் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இந்த கருவி உதவும். கருவியை டிரைவர் ஏதாவது வகையில் செயலிழக்கச் செய்தால் அது பற்றி Travels அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்து விடும்.
இந்த செல்போன் கன்ட்ரோல் கருவியின் விலை சுமார் 6,500 ரூபாய். ஆரம்பத்தில் 1,200 கருவிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதால் இதற்கு கடும் போட்டி நிலவியது.