Pages

27 Mar 2012

தனுஷின் ’3′ படம் ஒரு ஏரியா மட்டுமே ரூ.3 கோடிக்கு விற்பனை



தனுஷ் எதிர்ப்பார்க்காத அளவுக்கு 3 படம் அவருக்கு புகழையும் பணத்தையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட வைக்கிறது. மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொலை வெறி’ பாடல் மூலம் அவருக்கு உலக புகழ் கிடைத்தது. நாடு முழுவதும் விருந்துகள், விழாக்கள், பிரதமர் வீட்டில் விருந்து என இந்தப் பாடலால் தனுஷ் பெற்றது ஏராளம். இந்திப் பட வாய்ப்புகளும் வந்துள்ளன அவருக்கு.
கொலை வெறி பாடல், `3′ படத்தின் வியாபார அந்தஸ்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு பிரபல வினியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். இவரிடமிருந்து நிஜாம் ஏரியாவின் வினியோக உரிமையை மட்டும் ரூ.3 கோடிக்கு வாங்கியிருக்கிறார், இன்னொரு வினியோகஸ்தர்.
ஆந்திராவில் மொத்தம் 9 வினியோக ஏரியாக்கள் உள்ளன. ஆக, `3′ படம், ஆந்திராவில் மட்டும் குறைந்த பட்சம் ரூ.10 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு எந்த தமிழ் நடிகரின் படத்துக்கும் இந்த விலை அங்கு கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைபீரியாவில் விண்ணிலிருந்து விழுந்த 200 கிலோ எடையுடைய மர்ம பொருள்


சைபீரியாவில் விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில் விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் சமீபத்தில் விழுந்தது.
அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் யு வடிவத்தில் இருந்த அந்த பொருள் ஏதோ ஒரு சாதனத்தின் உடைந்த பொருள் என்பதை அறிந்தனர். இதுகுறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளித்தனர்.
வெள்ளியை போல் பளபளப்பாக உள்ள அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விண்ணில் இருந்து விழுந்த பொருள் 200 கிலோ எடை உள்ளது. உலோகத்தால் ஆனது. செயற்கைகோள், ஏவுகணை அல்லது விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லை என்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மர்ம பொருள் குறித்த தொடர் ஆய்வு நடைபெறுகிறது என்றனர்.



23 Mar 2012

பாட்டி வைத்தியம்


 

காலில் பித்தவெடிப்பாகவலையை விடுங்கள். சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். 

22 Mar 2012

பாட்டி வைத்தியம்


 

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால்இருமல்இரைப்புசளியுடன் கூடிய காய்ச்சல்சயரோகக் காய்ச்சல் குணமாகும்

கட்டிகள் உடைய 

மஞ்சள்சுண்ணாம்புவிளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்

பேன் தொல்லை நீங்க

வசம்புவேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவரஅவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்குரல் கம்மல் நீங்கி விடும்தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம்திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால்ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும்கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.