Pages

8 Apr 2012

பறக்கும் கார்!


இன்று நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வடிக்க்கையான ஒன்று.  அதனால் மனிதன் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய படைப்புகளை படைத்து வருகின்றான்.
இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது. கார் வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு button அழுத்தியதும் கார் மேலே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 சீட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.
அதிசயமாக உள்ளதா? கீழே உள்ள video பாருங்கள் பறக்கும் கார் எவ்வாறு செயல்படுகிறது என்று.


Youtube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண


இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான YOUTUBE தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும்  இலவசமாக காணலாம். இதற்க்கு உலவியில்  Flash Player மென்பொருள் இணைத்து இருப்பது அவசியம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.இதற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. உங்கள் கணினியில் இணைய இணைப்பு நல்ல நிலையில் இருந்தாலே போதுமானது. வேறு எதுவும் நீங்கள் செய்ய தேவையில்லை. இந்த சேவையின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை கூகுல் நிறுவனம் பட தயாரிப்பாளருக்கும் பிரித்து கொடுக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
இந்த சேவைக்கு இன்டெல் நிறுவனம் முழு ஸ்பான்சர் செய்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் இன்டெலின் விளம்பரம் 15 நொடிகள் ஒளிபரப்பாகும். இதை உங்களால் தடுக்க முடியாது. ஒரு முழு திரைப்படத்தையும் காணும் போது சுமார் 10-12 விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.
இந்த தளத்திற்கு செல்ல - http://www.youtube.com/boxoffice