Pages

11 Nov 2011

எதிர்கால பறக்கும் கார்!


Helicopter போல தான் இருக்கும் ஆனால் Helicopter  அல்ல. Pilot  இல்லாமலே இந்த Electric multi copter பறக்கக் கூடியது. Thomas Senkel என்ற பொறியியலாளரால் உருவாக்கப்பட்ட குறித்த electric multi copter விமானியுடன் 1 நிமிடம் 30 செக்கன்கள் வானில் அழகாக பறந்தது. இது உலகின் முதலாவது பறக்கும் காராக விளங்குகிறது.விளையாட்டுக் கார்கள் இயக்கப் பயன்படும் joystick போன்றவற்றால் கூட இதனை இயக்க முடியும்.


இது battery மூலம் மின்சாரத்தினால் தான் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.
சாதாரண Helicopterல் பறப்பதை விட இதில் பறப்பது மிகவும் எளிமையானது. இயந்திரத்தின் எடை 80 கிலோ கிராம் மட்டுமே. இதில் 16 சுழலும் இயந்திரங்கள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பறக்கும் காராக பயன்படுத்தப்பட உள்ளது.இதன் வீடியோவை காண இந்த லிங்கை click செய்யுங்கள்.  http://www.youtube.com/watch?v=L75ESD9PBOw&feature=player_embedded

சுவரில் ஏறும் புதிய வகை ரோபோ

எந்த பிடிமானமும் இல்லாமல் பல்லி போல சுவரைக் பிடித்தபடி ஏறும் ரோபோவை கனடா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மருத்துவம், வானியல் உள்பட பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதிது புதிதாக பல்வேறு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கனடாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்திலும் இதுதொடர்பான ஆராய்ச்சி நடந்து வந்தது. பல்லி போல சுவரில் ஏறும் ரோபோவை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் தொழில்நுட்பம் பற்றி அவர்கள் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத ஏராளமான ரோமங்கள் போன்ற அமைப்புகள் பல்லியின் பாதத்தில் உள்ளன. இவை சீட்டா எனப்படுகின்றன. சமதள பரப்புக்கும் இந்த ரோமங்களுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு விசை காரணமாகத் தான் செங்குத்தாகக் கூட பல்லி நடக்கிறது. இந்த ஈர்ப்பு விசை அடிப்படையில்தான் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. முடியை விட ஏறக்குறைய 10ல் ஒரு மடங்கு சிறிதான மிகமிக நுணுக்கமான முடி போன்ற அமைப்புகள் இந்த ரோபோவின் கீழ்ப்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. தொப்பி போல பகுதிகள் உருவாக்கப்பட்டு அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான ரோமங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் ரோபோ நடக்கிறது. செங்குத்தாக நடக்கும் ரோபோக்கள் ஏற்கனவே உள்ளன. வெற்றிடம் ஏற்படுத்தி நடத்தல், பசைத் தன்மையை உருவாக்குதல் ஆகிய தொழில்நுட்பங்களே இதுவரை பயன்படுத்தப்பட்டன. அடிப்பகுதியில் ரோமங்களை பொருத்தி பல்லி தொழில்நுட்பத்தில் ரோபோ உருவாக்கியது இதுவே முதல் முறை. இந்த ரோபோவின் எடை 240 கிராம். இதன் மீது 110 கிராம் எடை ஏற்றி வைத்தாலும் நகரும் திறன் உடையது. உயரமான கட்டிடங்களை ஆய்வு செய்வது, கட்டிட சுவர்களை கழுவுவது, குழாய்களில் நீர் கசிவை கண்டுபிடிப்பது போன்ற பணிகளுக்கு இந்த வகை ரோபோக்கள் உதவும்.

தமிழில் Google Chrome உலாவியின் உதவிப் பக்கம்

புதிதாக இணையத்தை பயன்படுத்த வருபவர்கள் ஒரு இணைய உலாவியின்   அடிப்படை  விடயங்கள் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும். இவ்வகையான தகவல்ள் அவர்களின் பாதுகாப்பான மற்றும் இலகுவான இணைய அனுபவத்திற்கு உதவி செய்யும்.இதுவரை இணைய உலாவிகள் பற்றிய உதவிக் குறிப்புக்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது உலகின் வேகமான இணைய உலாவியாக கருதப்படும் Google Chrome உலாவியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்கின்றது. கீழ்க்காணும் முகவரியில் சென்று Google Chrome இணைய உலாவி பற்றிய விடயங்களை தமிழில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இப்பக்கத்தில் உலாவி பற்றிய தேவையான விடயங்களை தேடிப் பெறவும் முடிகிறது. இணைய முகவரி:  http://www.google.com/chrome/intl/ta/features.html?hl=ta&brand=chmo

Do a Barrel Roll

போட்டி நிறைந்த உலகில் Googleக்கும் சவால் விடுகிறது Facebook தளம்.
இந்த இரண்டு தளங்களும் போட்டி போட்டுக் கொண்டு வசதிகளை உருவாக்கி வாசகர்களை கவர்ந்து வருகின்றன.  வாசகர்களை தங்கள் பக்கம் இழுக்க இவர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகிறார்கள். இப்பொழுது Google ஒரு சுவாரஸ்யமான trick உருவாக்கி உள்ளனர். இப்பொழுது உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தை இது தான் Do a Barrel Roll.
இதனை பற்றி அறிய முதலில் கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
அதன் search பாரில் do a barrel roll என type செய்து enter கொடுங்கள். நிகழும் அதிசயத்தை பாருங்கள். உங்களின் Google window அப்படியே சுற்றுவதை பாருங்கள்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QerNB9K16LQ

ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்

Microsoft Office தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். Office documents, spread sheet, presentation மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html