Pages

7 Mar 2012

Dell Latitude E6220 Laptop



Dell Latitude E6220 ஒரு சிறிய மற்றும் உறுதியான Laptop என்று கூறலாம். இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் 1366 x 768 pixel resolution கொண்ட 12.5 inch display கொண்டிருக்கிறது. அதுபோல் 128 GB SSD hard drive உள்ளடக்கியுள்ளது.
இதன் processor எடுத்துக் கொண்டால் அது 2.6 GHz Intel Core i5-2540M கொண்டிருக்கும்.  இதனை upgrade செய்துகொள்ளலாம். இதன் Memory  4GB, 1,333MHz DDR3 ஆகும். அது போல் graphics வேலைகளுக்காக Integrated எச்டி 3000 graphics processing unit கொண்டுள்ளது. மேலும் 1080p video playback-ம் உள்ளது.
இந்த டெல் லேப்டாப்பின் பேட்டரி 7.30 மண நேரி இயங்கு நேரத்தை அளிக்கிறது. இந்த லேப்டாப்பின் மொத்த எடை 1.7 கிலோவாகும். அதுபோல இது விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது.
இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இஎஸ்எடிஎ/யுஎஸ்பி கோம்போ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட்டுகள், எச்டிஎம்ஐ போர்ட், ஜிகாபிட் எர்த்நெட் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளை இது தாங்கி வருகிறது. மேலும் எக்ஸ்பிரஸ் கார்டு ஸ்லாட், வெப்காம் மற்றும் ஹெட்போன் ஜாக் போன்றவை இந்த லேப்டாப்பை மெருகு ஏற்றுகின்றன. இதன் கீபோர்டு மிக அட்டகாசமாக இருக்கிறது.
மேலும் இந்த லேப்டாப்பில் அதிக உயர் திறன் கொண்ட பேட்டரியை தேவைப்பட்டால் பொருத்திக் கொள்ளலாம். இந்த டெல் லேப்டாப்பின் விலை ரூ.75,000 முதல் ஆரம்பமாகிறது.

ஓவியம் வரையும் ரோபோ


விளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தின.
தற்போது Germany நாட்டில் கார்ல்ஸ்ருதி நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் ஓவியம் தீட்டும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரோபோ முன்பு அமர்ந்தால் போதும் 10 நிமிடங்களில் நமது உருவத்தை மிகவும் அழகாக வரைந்து விடும்.
அதன் செயல்பாடு குறித்து இதனை வடிவமைத்த நிறுவனத்தின் விஞ்ஞானி மார்டினா ரிசெர் கூறுகையில் இதில் உள்ள camera மனித உருவத்தை படம் எடுத்து நுட்பமான மென்பொருள் உதவியுடன் ரோபோ கரங்களுக்கு அது கட்டளையிடப்பட்டு உருவம் வரையப்படுகிறது என்றார். ரோபோ அழகாக வரைவதை கண்டு ரசிக்க கீழே உள்ள வீடியோ பாருங்கள்

Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்



எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென programming செய்திட வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர programming ஒரு சவாலாக உள்ளது. பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே programming பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் Code Academy. Programme எழுதுவதனை codingஎனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் account திறக்கும் முன்னர் programming எப்படி இருக்கும் என நமக்கு மிக மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை programming என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கும் அளவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப்படுகின்றன.
Programming செய்திடும் பயிற்சியில் நமக்கு Tips தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில் நாம் பெறும் மதிப்பெண்கள் அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது இவைகள் அனைத்தும் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் programming கற்றுக் கொள்ளலாம் அதுவும் இலவசமாக.
இணையதள முகவ்ரி - http://www.codecademy.com/#!/exercises/0