Pages

21 Jan 2012





எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதியானது பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது.இதன் பெயரானது WD 0806 – 661B ஆகும். இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 முதல் 9 தடவை பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது.


பென் நாட்டை சேர்ந்த வானியல் வல்லுநரான கெவின் லுக்மன் குறிப்பிடுகையில், இது சிறிய நட்சத்திரம், இதன் வெப்பநிலை பூமியைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார். வானியல் வல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த குளிர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு கதிர்களால் செயல்படும் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரத்தை பொருட்களின் மீது மின்னச் செய்யலாம்.இந்த நட்சத்திரமானது பூமியையும், அதன் வட்டப்பாதையையும் கடக்க 63 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிறது. ப்ரவுன் டுவார்ப் நட்சத்திரமானது மற்ற நட்சத்திரங்களைப் போன்றது.

அதனுள் மேகத்தூசுகளும், வாயுவும் உள்ளன. இந்த நட்சத்திரம் தன்னுள்ளே போதுமான அளவு மேகத் தூசுகளை வைத்து கொள்ள தவறினால், தெர்மோ நியூக்ளியார் வினை புரிந்து தீப்பற்றி எரிந்து விடும்.இந்த நட்சத்திரத்தின் மேற்பகுதி வெப்பநிலை 27 முதல் 80 டிகிரி சென்டிகிரேடு ஆகும். இந்த வெப்பநிலை மனிதர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. 1995ல் வானியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்நட்சத்திரத்தின் வெப்பநிலை பூமியைப் போன்று இருக்கும்.இந்த நட்சத்திரம் மிகப்பெரிய வட்டப்பாதையை கொண்டது. அந்த வட்டப்பாறையானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தைப் போன்று 2,500 ஆண்டுகள் கொண்டது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமி உடல் உறுப்புகள் மூலம் ஆறு பேரிடம் வாழ்கிறார்





ராசிபுரம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சியை சேர்ந்தவர் கார்வண்ணன். விவசாயி. இவரது மனைவி கமலம். இவர்களது மகள் கோகுலபிரியா(12), மகன் சுதீஷ்(5). சிறுமி கோகுலபிரியா, சம்பாபாளிபுததூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

மாலையில் பள்ளி முடிந்ததும், வாயிலில் காத்திருந்த தந்தையின் பைக்கில் கோகுலபிரியா ஏறினார். அப்போது, அவ்வழியே வந்த மற்றொரு பைக், கோகுலபிரியா இருந்த பைக்கின் மீது மோதியது. இதில் கோகுலபிரியாவுக்கு தலையில் அடிபட்டது. கதறி துடித்த தந்தை கார்வண்ணன், மகளை சேலம் 3 ரோட்டில் உள்ள நீரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் சேர்த்தார். 10 நாட்கள் சிகிச்சை அளித்தும், கோகுலபிரியாவுக்கு நினைவு திரும்பவில்லை.
பின்னர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், கோகுலபிரியாவின் மூளை செயல் இழந்து விட்டது‘ என்றனர்.

அவரது உடல் உறுப்புக்களை தானமாக கொடுக்க பெற்றோர் முன்வந்தனர். கடந்த 13ம் தேதியன்று, டாக்டர் குழுவினர், கோகுலபிரியாவின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து 6 பேருக்கு பொருத்தினர். 14ம் தேதி கோகுலபிரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

‘ஐஏஎஸ் படித்து மக்களுக்கு சேவை செய்வேன் என அடிக்கடி கூறி வந்தாள். ஆனால் விபத்தால் எங்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டாள். அவளது உடல் உறுப்புகள் மூலமாக 6 பேரிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்‘ என கோகுலபிரியாவின் பெற்றோர் கண்ணீருடன் கூறினர்.

Open Office Software

Microsoft Office தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து applicationகளும் அடங்கியதாக இயங்குவது Open office ஆகும். Office documents, spread sheet, presentation மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த application தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால் பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த office தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன.  இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவசமே. பதிவிறக்கம்  செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரிhttp://download.openoffice.org/other.html