Pages

31 Jan 2012

Windows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய



நீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று.

Windows 7 உடன் வரும் தீம்கள் குறிப்பிட்ட அளவே காணப்படுகின்றன. இதனால் அந்த தீம்களை அடிக்கடி மாற்றி உங்களுக்கு சலித்திருக்கும். உங்கள் சலிப்பை போக்குவதற்காக Microsoft நிறுவனம் புதிய பல தீம்களை இலவசமாக தரவிறக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
கீழுள்ள இணைப்பில் அழுத்துவதன் மூலம் குறித்த தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான ஒன்றை தெரிவு செய்து Download என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் கணினியில் சேமித்து பின் வழக்கமான முறையில் உங்கள் கணினியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கான Lenovo Classmate Laptop


மாணவர்களுக்கான கல்வியையும் மற்றும் பொழுதுபோக்கையும் தரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கென்று தனியாக laptop மற்றும் Tablet-களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்கனவே வந்துவிட்டது. மிகவும் பிரபலமான OLPC ஏற்கனவே குழந்தைகளுக்கு மலிவான விலையில் கணினிகளை அறிமுகப்படுத்தியது.

அந்த வரிசையில் இப்போது Lenovo நிறுவனம் மாணவர்களுக்காக multimode வசதி கொண்ட புதிய மலிவு விலை laptop-களை களமிறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற Los Vegas நுகர்வோர் கண்காட்சியில் Lenovo தனது கல்விக்கான கணினியை அறிமுகப்படுத்தியது. அது பலரையும் கவர்ந்தது. அந்த புதிய டிவைசின் பெயர் Classmate + PC ஆகும். இந்த புதிய Laptop பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும்,  battery  நீண்ட நேர இயங்கும்  என்றும்  இதன் விலை மிகக் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த classmate laptop பற்றி அதிகமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இதனுடைய முக்கிய சிறப்பு அம்சங்கள் கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டன. அதாவது இந்த classmate laptop-ன் CPU Intel N2600 Atom processor ஆகும்.  10.1 inch  ஆன்டி க்ளேர்தொடு வசதி திரை, இதில் HD வசதியும் உண்டு. 2GB DDR3 RAM, 320 GB Hard disk கொண்டுள்ளது. அதோடு 32ஜிபி கொண்ட ஒரு சாலிட் ஸ்டேட் ட்ரைவும் துணையாக உள்ளது. இதன் மெமரி குறைவாக இருந்தாலும் இதன் எஸ்எஸ்டி ட்ரைவ் வேகமாக இருக்கும். இதன் 6  செல் battery முழுமையாக சார்ஜ் செய்தால் அது 10 மணி நேர இயங்கு நேரத்தை கொடுக்கும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த classmate laptop 3 USB ports, HDMI port மற்றும் இதன் கீபோர்டு தண்ணீர் தடுப்பு வசதி கொண்டது. அதனால் இதில் தண்ணீர் பட்டாலும் இது எளிதாக பாதிப்பு அடைவதில்லை. மேலும் இந்த laptop உறுதியான பேன்ல்களுடன் வருவதால் இது நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறது. இந்த லெனோவா classmate + PC  விரைவில் கல்வி நிலையங்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்ப


Facebook வழங்கும் பல அம்சங்களில் online chat என்பது ஒரு முக்கியமானதும், பலராலும் விரும்பப்படுவதுமான அம்சமாகும். இதுவரை கறுப்பு நிற எழுத்துக்களில் மட்டுமே உங்கள் நண்பர்களுடன் chat செய்து மகிழ்ந்திருப்பீர்கள்.
ஆனால் அதைவிட மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால் இப்பொழுது பலவர்ண எழுத்துக்களில் உங்களுடைய செய்தியை நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம்.
அதற்காக சில Coding காணப்படுகின்றன. அதாவது A இலிருந்து Z வரையான எழுத்துக்களுக்கு தனித் தனியாக காணப்படும் Coding மூலம் ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு வர்ணங்களையுடைய படங்களாக மாற்றப்படுகின்றன.
ஆகவே உங்களுக்கு தேவையான ஒரு சொல்லிற்குரிய ஆங்கில எழுத்துக்களை அறிந்து அதற்குரிய Codingகளை நீங்கள் தட்டச்சு செய்து Enter Keyயை அழுத்தினால் போதும் உங்கள் செய்தி கலர்புல்லாக உங்கள் நண்பரை சென்றடைந்து விடும்.
உதாரணத்திற்கு கீழுள்ள Codingகளை Copy, Paste செய்து அனுப்பிப் பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
[[107015582669715]] = A
[[116067591741123]] = B
[[115602405121532]] = C
[[112542438763744]] = D
[[115430438474268]] = E
[[109225112442557]] = F
[[111532845537326]] = G
[[111356865552629]] = H
[[109294689102123]] = I
[[126362660720793]] = J
[[116651741681944]] = K
[[115807951764667]] = L
[[106596672714242]] = M
[[108634132504932]] = N
[[116564658357124]] = O
[[111669128857397]] = P
[[107061805996548]] = Q
[[106699962703083]] = R
[[115927268419031]] = S
[[112669162092780]] = T
[[108983579135532]] = U
[[107023745999320]] = V
[[106678406038354]] = W
[[116740548336581]] = X
[[112416755444217]] = Y
[[165724910215]] = Z

பாதுகாப்பாக கைபேசியை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள்








இன்று நாம் கைபேசி இல்லாமல் இருப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு கைபேசி நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
காது பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு வழிமுறைகள்
1. தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.
2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.
3. நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து speaker mode, hearing phone மற்றும் headset உபயோகித்து உரையாடுவது நல்லது.
4. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
5. பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.
6. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.
7. கைபேசி மிகக்குறைந்த battery-யில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம். முழுமையாக charge செய்து விட்டு பேசுங்கள்.

விவேகானந்தர் பற்றி சில தகவல்

விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். 

சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. 

இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்:

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்

உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.

அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.

தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.

மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.

கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.

ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.

உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.

சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.

ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோ

30 Jan 2012

பிரகாசமான ஒளியுடன் பூமியின் வடமுனையை தாக்கிய சூரியப் புயல்


சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதன் மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது.

இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது.

அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது. இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

முதன் முதலாக

உலகில் முதன் முதலாக அஞ்சல்தலை வெளியிட்ட நாடு இங்கிலாந்து.

உலகை முதன் முதலில் சுற்றி வந்த கப்பல் விக்டோரியா.

உலகில் முதன் முதலாக பத்திரிகைகளில் கார்ட்டூன் படங்களை வெளியிட்ட நாடு இத்தாலி.

உலகில் முத்ல் கண்வங்கியைத் தொடங்கிய நாடு அமெரிக்கா.

உலகில் முதன் முதலாக அஞ்சல்தலையில் கழுதை படத்தை வெளியிட்ட நாடு கென்யா.

உலகில் முதன் முதலாக 1403ல் சிறைச்சாலை ஏற்படுத்திய நாடு இங்கிலாந்து.

உலகின் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை 1848 ல் தந்தை செர்ஹென்றிகோலி என்பவரால் உருவாக்கப்பட்டது.

உலகின் முதல் டெலிபோன் டைரக்டரி 1800 ஆம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டது.

உலகின் முதன் முதலாக சங்கீதம் தொடர்பாக வெளிவந்த நூல் நயசாஸ்திரா.

உலகில் முத்ன் முதலாக பார்வையற்றவர்களுக்காக அல்சேசன் நாய்களை பழக்கிய நாடு ஜெர்மனி.

உலகில் முதன் முதலாக கைரேகையைப் பதிவு செய்யும் முறையைத் வழக்கத்தைத் தொடங்கியவர் ஹேர்ஷெல் எனும் ஆங்கிலேயர்.

உலகின் முதல் புத்தகமாக பைபில் 1455 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்டது.

உலகில் முதன் முதலாக தீக்குச்சிகள் 1844 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட்டன.

உலகின் முதல் கலங்கரை விளக்கம் அலெக்ஸாண்டிரியா வளைகுடாவில் கி.மு. 300 ஆம் ஆண்டில் டால்மி எனும் மன்னரால் எழுப்பப்பட்டது.

உலகின் முதல் வேலை நிறுத்தம் கிரேக்கத்தில் கி.மு.309 ஆம் ஆண்டில் நடத்தப் பெற்றது.

உலகில் முதன் முதலில் தேசியக் கொடியை 1218 ஆம் ஆண்டில் உருவாக்கிய நாடு டென்மார்க்.

உலகில் முதன் முதலில் தோன்றிய சங்கம் இங்கிலாந்திலுள்ள ராக்பேல் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்தான்.

உலகில் முதன் முதலாக வாசனைத் தபால்தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.

உலகில் முதன் முதலாக பிசப் ஆன பெண் அமெரிக்காவைச் சேர்ந்த பார்பரா சிஹரிஸ்.

உலகின் முதல் செய்தி நிறுவனம் 1825ல் பாரீசில் தொடங்கப்பட்டது.

உலகில் முதன் முதலாக மியூசியம் தொடங்கிய நாடு எகிப்து.

உலகின் முதல் கண் மருத்துவமனை 1818ல் லண்டனில் தொடங்கப்பட்டது

பசுமைப் பொங்கல்



பசுமைப் பொங்கல்...பல்வேறு அமைப்புகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், சென்னை கொளத்தூர் பள்ளி ஒன்றில் சற்று வித்தியாசமாக பசுமைப் பொங்கல் கொண்டாடப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மரக்கன்றுகளுடன், பானை மற்றும் கரும்பு வடிவில் அமர்ந்து பொங்கலை வரவேற்றனர்.

மூளை பற்றி ஒரு தகவல்



மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்

29 Jan 2012

செல்போன் அழைப்பை தடுக்க புதிய கருவி



காரை ஓட்டிச் செல்லும் போது வரும் செல்போன் அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் வசதி மூலம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லுகையில் செல்போனை பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.
செல்போனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செல்போனால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைப்பதற்காக, ஸ்கோச் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ‘செல் கன்ட்ரோல்’ என்ற நவீன கருவியை அறிமுகம் செய்துள்ளது.

கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறிய கருவியான இதை காரில் பொருத்தினால் பயணத்தின் போது செல்போனுக்கு அழைப்பு வந்தால் புளுடூத் சிக்னல் மூலம் அழைப்பு தடுக்கப்படும். மேலும் SMS, E-Mail போன்ற சேவைகளை முற்றிலும் இக்கருவி தடுத்து விடும்.
குறிப்பாக வாடகைக் கார்களில் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இந்த கருவி உதவும். கருவியை டிரைவர் ஏதாவது வகையில் செயலிழக்கச் செய்தால் அது பற்றி Travels அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்து விடும்.

இந்த செல்போன் கன்ட்ரோல் கருவியின் விலை சுமார் 6,500 ரூபாய். ஆரம்பத்தில் 1,200 கருவிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதால் இதற்கு கடும் போட்டி நிலவியது.