Pages

5 Feb 2012

உணவுப் பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் சிறைக் கைதிகள்


இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் உணவுப் பண்டங்களை தயாரித்து வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறைச்சாலை மற்றும் திருச்சூரில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலை மற்றும் கோழிக்கோடு மாவட்ட சிறைச் சாலைகளில் உள்ள சிறைக் கைதிகள் சப்பாத்தி, கோழிக்கறி, வெஜிடபிள் குருமா ஆகியவற்றை தயாரித்து வெளியில் விற்பனை செய்கின்றனர்.
சப்பாத்தி தயாரிப்பில் பெரும்பாலும் ஆயுள் தண்டனை கைதிகள் ஈடுபடுத்தப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பூஜப்புரா சிறையில் ரூ.5 கோடி செலவில் சப்பாத்தி செய்ய பயன்படும் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் பி.பிரதீப் கூறியுள்ளார்.
இங்கு தினமும் 40,000 சப்பாத்திகள், 3,500 கோழிக்கறி parcels மற்றும் 500 வெஜிடபிள் குருமா parcels  தயார் செய்யப்படுகிறது.

இந்த உணவுப்பண்டங்களை தயாரித்து வெளியில் 3 இடங்களில் வைத்து விற்பனை நடைபெறுகிறது. 5 சப்பாத்திகள் மற்றும் கோழிக்கறி ரூ.25க்கும், 5 சப்பாத்திகள் மற்றும் வெஜிடபிள் குருமா ரூ.20க்கும்(இந்திய ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவை ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.
இந்த தொழிலில் பெரும்பாலும் சிறை வளாகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளே உபயோகப்படுத்தப்படுகின்றது. அரசு அங்காடிகளில் இருந்து தேவைக்கு காய்கறிகள் மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்படுகின்றது.
இது தவிர, முன்பதிவின் பெயரில் மொத்தமாகவும் உணவுப் பொருட்களை செய்து கொடுக்கின்றனர். இந்த முயற்சி விரைவில் பெண்கள் சிறையிலும் பின்பற்றப்படும் என்றும் பெண்கள் சார்பில் இட்லி, சாம்பார், சட்னி செய்ய ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிறை கண்காணிப்பாளர் பி.பிரதீப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மற்றும் தாமிரபரணி படத்தின் கதாநாயகி பானு மற்றும் மலையாள திரைநடிகர்கள் கலந்து கொண்டனர்.


3G Tablet


கோபியன் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெர்க்குரி Mercury mTab Neo என்ற புதிய டேப்லெட்டை களமிறக்குகிறது. இந்த நியோ டேப்லெட் 3ஜி வசதி கொண்டது.
இந்த நியோ  டேப்லெட் 7 inch multi touch displayவசதியும், 1 GHz Dual Core Processor4ஜிபி Internal Memory, 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு External மெமரியையும் கொண்டிருக்கிறது. அதற்கான micro SD card இதில் உண்டு.
இந்த நியோ டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது 2 MB  ரியர் கேமராவையும் மற்றும் 0.3 Mega Pixel resolution கொண்ட முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 4000 mh ஆகும்.
இந்த நியோ டேப்லெட் மற்ற டேப்லெட்டுகளை விட இது சற்று தடிமனாக இருக்கும். ஆனால் இதை மிக எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியும். இந்த டேப்லெட்டின் கீழ் பகுதியில் 4 touch sensitive buttons உள்ளன. அதுபோல் வீடியோ காலிங் கேமரா திரைக்கு மேல் நடுவில் உள்ளது.
இந்த நியோ டேப்லெட்டின் HD display பளிச்சென்று இருக்கும். Media சார்ந்த அப்ளிகேசன்களை இந்த டேப்லெட்டில் மிக வேகமாக இயக்க முடியும்.
இந்த புதிய நியோ டேப்லெட் 3ஜி நெட்வொர்க் மற்றும் சிம் சப்போர்ட்டையும் வழங்குகிறது. அதனால் இதை ஒரு சாதாரண மொபைல் போன் போன்றும் பயன்படுத்தலாம். இதன் 3ஜி நெட்வொர்க் வசதி தகவல் பரிமாற்றத்திற்கும் மிகவும் ஏதுவாக இருக்கும்.
இந்த நியோ டேப்லெட்டின் விலை ரூ.16,000 ஆகும். மேலும் இது 1 வருடம் உத்திரவாதத்துடன் வருகிறது.