Pages

24 Jan 2012

பாதுகாப்பாக கைபேசியை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள்








இன்று நாம் கைபேசி இல்லாமல் இருப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு கைபேசி நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. காது பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு வழிமுறைகள்

1. தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.

2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.

3. நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து speaker mode, hearing phone மற்றும் headset உபயோகித்து உரையாடுவது நல்லது.

4. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

5. பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.

6. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.

7. கைபேசி மிகக்குறைந்த battery-யில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம். முழுமையாக charge செய்து விட்டு பேசுங்கள்.

கணைய புற்றுநோயை ஏற்படுத்து​ம் பதப்படுத்த​ப்பட்ட இறைச்சி


சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியானது கணையப் புற்றுநோயை ஏற்படுத்தப்படும் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் சராசரி மனிதன் ஒருவனால் ஒரு நாளில் அன்றாட உணவின் மூலம் உள்ளெடுக்கப்படும் 50 கிராம் இறைச்சியின் மூலம் 19% சதவீதம் கணையப்புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும், 100 கிராம் இறைச்சியை உள்ளெடுக்கும் போது 38% என்ற அளவினால் அதி உச்ச ஆபாத்தான நிலைக்கு இட்டு செல்லும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை Britain-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியானது மலக்குடலுக்குரிய புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.