Pages

9 Feb 2012

Dell Vostro V131 Notebook ஒரு பார்வை


Dell நிறுவனம்சமீபத்தில் Vostro V131 Notebookஐ அறிமுகம் செய்தது. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- Intel Core i3 -2330M Processor
- Processor speed - 2200
- 13.3 inch Screen
- 1366 x 768 screen resolution
- Integrated Graphic Card, 2 GB RAM
- HDMI Port
- Wi Fi
- 2 USB Port
- Built-in Camera
- Finger Print reader
- Li-ion battery
- Windows 7 Opertaing System
- 1.82 Kg weight
- 1 Year Warranty
இதன் சந்தை விலை ரூபாய் 43,990/- மட்டுமே. இதில் DVD Writer வசதி இல்லை. இதே விவரக்குறிப்புகள் கொண்ட Lenovo G570 ஒப்பிடுக்கையில் இது சிறந்தது என்று Dell நிறுவனததினர் தெரிவிக்கின்றனர்.
எனினும் இதே விலை கொண்ட Vostro 3350-ஐ ஒப்பிடுகையில் Vostro 3350 தான் சிறந்தது.  ஏனெனில் வேகமான RAM, DVD Writer, சிறந்த Processor Vostro 3350-ல்  உள்ளது.

Panasonic's new HD 3D Home Theater Projector


Panasonic நிறுவனத்தினர் Full HD 3D LCD Home Theatre [PT-AE7000] அறிமுகம் செய்துள்ளனர்.
- 1080p (1,920 x 1,080 pixel) resolution
- 300,000:1 contrast ratio
- 3D
- 480 Hz LCD Panels
- 2 Years Warranty

இதன் சந்தை விலை ரூபாய் 2,50,000/- மட்டுமே. மேலும் இந்நிறுவனத்தினர் 2D  LCD Home Theatre [AR100]அறிமுகம் செய்துள்ளனர். இதன் சந்தை விலை ரூபாய் 1,60,000/- மட்டுமே.

உலகின் மிகப் பெரிய online shopping amazon.com இந்தியாவில்


உலகின் மிகப் பெரிய online shopping இணையதளமான amazon.com இந்தியாவில் இன்று முதல் junglee.com என்ற பெயரில் அறிமுகம் ஆகிறது. http://www.junglee.com/

junglee.com-ல் சுமார் 1 கோடியே 20 லட்சம் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் 14,000 இந்திய மற்றும் பன்னாட்டு பிராண்டுகள் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலைகளை ஒப்பு நோக்கி பரிசீலிப்பதற்கான வசதிகளையும் ஜங்லீ செய்துள்ளது. ஆனால் கொள்முதல் மூன்றாம் நபர் சில்லறை விற்பனையாளர்கள் network மூலமே செய்ய முடியும்.

இனிமேல் ஷூக்களையும், கணினி தொடர்பான உபகரணங்களையும், துணிமணிகளை ஃபேப் இந்தியாவிடமிருந்தும், handbags மற்றும் பல பொருட்களையும் இனி இந்தியர்கள் நேரடியாக வாங்கலாம்.

கிண்டில் போன்ற சில உருப்படிகளை அமேசான்.காம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதனை அனுப்பும் செலவு பொருளின் விலையை விடவும் அதிகமாகிறது.
இந்தியாவில் இணையதள பயனாளர்கள் குறைவாக இருந்தாலும் online வர்த்தகம் ஒரு வளர்ந்து வரும் வர்த்தகமாகும்.

அமேசான் இந்தியாவுக்கு வருகிறது என்பதால் ஏற்கனவே online  வர்த்த்கத்தில் இருந்து வரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Facebook உபயோகத்தில் இந்தியா இரண்டாவது இடம்


சமூக தளங்களில் facebook-ம் ஒன்று. தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது facebook. இந்தியர்களிடையே facebook தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் facebook உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.


Forbes தளத்தின் தகவல் படி 6வது இடத்தில் இருந்து ஒரே வருடத்தில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா.  பிப்ரவரி 2012 கணக்கெடுப்பின்படி இந்தோனேசிய பயனர்களின் எண்ணிக்கை 43,060,360 இந்தியா பயனர்களின் எண்ணிக்கை 43,497,980 பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தான் UKவிடம் இருந்து இரண்டாவது இடத்தை தட்டி பறித்தது இந்தோனேசியா. ஆனால் மூன்றே மாதத்தில் இழந்தது.

தற்போதைய நிலவரப்படி facebook உபயோகத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும் உள்ளன.  இந்தியாவில் இணையம் பயன்படுத்துவது வேகமாக வளர்ந்து வருகின்றது. இதனால் facebook பயணர்களும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.  விரைவில் இந்தியா முதல் இடத்தை