Pages

5 Mar 2012

Smart Phone-களினால் வடிவமைக்கப்பட்ட இராட்சத பறக்கும் குதிரை (வீடியோ இணைப்பு)


இன்றைய மனித வாழ்வில் கைப்பேசி என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கைப்பேசிகள் பேச மட்டுமல்ல மனிதர்களை மிரட்டவும் செய்யும் என்று Huawei நிறுவனம் நிரூபித்துள்ளது.Huawei நிறுவனம் தனது கைப்பேசி தயாரிப்புகளில் ஒன்றான smartphones-ல் புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுந்தியுள்ளது. அது பலரையும் சென்றடைய கூடிய வகையில் புதிய விளம்பர உத்தியை கையாண்டுள்ளது.
அதாவது smartphones கைப்பேசிகளை கொண்டு பறக்கும் குதிரை இராட்சத சிலை ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் MWC மண்டபத்திற்குள் முன்னால் இந்த விளம்பர சிலையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சுமார் 3500 கைப்பேசிகளை கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 19 அடி நீளமுள்ள இந்த குதிரையை வடிவமைக்க சுமார் 720 மனித மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளன. D Quad என்ற புதிய தொழில்நுட்ப உத்தியை அறிமுகம் செய்கின்றது Huawei நிறுவனம்.


குட்டிப் பாலகர்களின் உலகப் பெரும் சாதனை (வீடியோ இணைப்பு)

நாம் அனைவரும் ஏதாவது சாகசம் செய்ய விரும்புவோம் அல்லது முயன்று கொண்டிருப்போம்.  கீழே உள்ள சிறுவர்களைப் பாருங்கள் உலகிலேயே வலிமையான சிறுவர்கள் இவர்கள் தான்.  வீடியோ இணைப்பு பார்த்து மகிழுங்கள்


500 kmph வேகத்தில் பறக்கும் ரயில் (வீடியோ இணைப்பு)


வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுப் புது கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் 500 kmph பயணிக்க கூடிய ரயில் சேவையினை சீன நிறுவனம் ஒன்று பரீட்சித்துப் பார்த்துள்ளது.
சீனாவின் மிகப் பெரிய railway கட்டுமான நிறுவனமான CSR Corp. Ltd இத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சீனா ரயில்பாதை திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த July மாதம் ஆரம்பிக்கப்பட்ட 300 kmph வேகத்தில் பயணிக்கும் ரயில் சேவையினால் சுமார் 40 பேர் வரை மரணமடைந்துள்ளதால் அதிக வேக ரயில் சேவை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் Liu Zhijun தெரிவித்துள்ளார்.