நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலையை கேரள மாநிலம் வயநாட்டில் (Waynad) உள்ள பனசுரா சாகர் நீர்த்தேக்கத்தில் கேரள மின்சார வாரியம் நிர்மாணித்துள்ளது. 500 கிலோவாட் திறன் கொண்ட இந்த மிதக்கும் சூரிய ஆலை நிர்மாணிக்க 9.25 கோடி ரூபாய் செலவானது. 6000 சதுர மீட்டர் பரப்பளவில் 18 நடைமேடைகளில் 1938 சூரிய தகடுகளை பொறுத்தியுள்ளார்கள். இந்த சூரிய அலை மூலம் காற்று மாசு குறையும். கேரள மின்சார வாரியம் போல நாட்டின் அனைத்து மின்சார வாரியங்களும் தொடர்ந்து சூரிய அலைகளை நிறுவினால் காற்று மாசுவுக்கு முடிவு கட்டி நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
19 Dec 2017
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலை

18 Dec 2017
பண நெருக்கடி சமாளிக்க சில டிப்ஸ்
'வரும் முன் காப்போம்' இதனை நம் மனதினில் கொண்டால் நம் வாழ்க்கையில் பல இன்னல்களை சமாளிக்கலாம். சரி எவ்வாறு பண நெருக்கடியை சமாளிக்கலாம் என்று இனி பார்ப்போம்:
சேமிப்பு:
உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வந்தால் பண நெருக்கடி வரும் சமயம் உங்களுக்கு அந்த சேமிப்புத் தொகை கை கொடுக்கும்.
காப்பீடு:
காப்பீடு என்பது இன்றைய அவசிய தேவையாகும். ஆயுள் காப்பீடு நீங்கள் செய்து வைத்திருந்தால் குடும்பத்தில் இடர் நேரும் சமயம் அந்த காப்பீடு உங்கள் குடும்பத்தை காக்கும்.
மருத்துவ காப்பீடு:
நமது உணவுப் பழக்கவழக்கம் மாறியுள்ளது. இதனால் இன்று பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. மருத்துவ செலவும் கூடிக்கொண்டேயுள்ளது. இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி மருத்துவ காப்பீடு. ஆகவே தான் அரசாங்கம் காப்பீடின் அவசியத்தை விளம்பரம் செய்கின்றது.
தேவையில்லாமல் கடன் வாங்குவது:
இன்று சிலர் தேவையில்லாமல் கடன் வாங்குகின்றனர். இது அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை ஏற்படுத்திவிடுகிறது. தேவையற்ற பொருட்களை வாங்காதீர்கள். கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருங்கள்.
திட்டமிடல்:
உங்கள் வருமானத்தை நன்கு திட்டமிட்டு சேமிப்பு மற்றும் செலவு செய்தால் மட்டுமே நீங்கள் சீரான வாழ்க்கையை வாழமுடியும்.
அவசர கால நிதி:
உங்கள் சேமிப்பில் அவசர கால நிதி என்று ஒன்றை ஏற்படுத்துங்கள். அதனை வங்கியிலோ, அரசாங்க பத்திரங்களிலோ அல்லது பரஸ்பர நிதியங்களிலோ முதலீடு செய்யலாம்.
மேலே கூறியவற்றை உங்கள் வாழ்வினில் கடைப்பிடித்து வந்தால் எதாவது அவசர தேவைகள் ஏற்படும் சமயம் நீங்கள் அதனை எளிதாக சமாளிக்கலாம். உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்.

வெள்ளைப்பூண்டு பற்றி அறிந்து கொள்ளுங்கள்
வெள்ளைப்பூண்டு இல்லாத சமயலறையே இல்லை எனலாம். அப்படி என்ன சிறப்பு இந்த வெள்ளைப்பூண்டுக்கு என்று கேட்கின்றீர்களா? வாருங்கள் பார்ப்போம்:
வெள்ளைப்பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சாட்டிவம் (Allium Sativum). வெள்ளைப்பூண்டில் இயற்கையாகவே வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சத்துப்பொருட்கள் உள்ளன. பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். மலைப்பூண்டின் பல் பெரியதாகவும் நாட்டு பூண்டின் பல் சிறியதாகவும் இறுக்கும்.
பூண்டில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின்கள் A, B6, C, E, K, சோலின் (Choline), நியாசின் (Niacin), போலேட் (Folate), மற்றும் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகிய தாது உப்புக்களும் உள்ளன.
மருத்துவ குணங்கள்:
வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சிறந்த கிருமி நாசினி, வாயு கோளாறை நீக்கும், குடற்புழுக்களை கொல்லும், செரிமானத்தை அதிகமாக்கும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். வைரஸ் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை ஒடுக்கும் சக்தி பூண்டுக்கு உள்ளது. சிறிது வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட்டால் செரியாமை, சளி, வாயு தொல்லை நீங்கும்.

அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்த இந்திய பங்குச் சந்தை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஹிமாச்சல பிரதேசத்தில் துவக்கம் முதலே பிஜேபியின் கை ஓங்கியிருந்தது. முடிவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. பிஜேபி 44 தொகுதிகளில் வென்று ஹிமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபிக்கிடையே கடும் போட்டி நிலவியது. இது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலையில் மும்பை பங்குச்சந்தை 720 புள்ளிகளை இழந்தது. பிஜேபி முன்னிலை பெற்ற பின்பு தான் உயர்ந்தது. முடிவில் மும்பை பங்குச்சந்தை 138 புள்ளிகள் உயர்ந்து முடிவுற்றது. குஜராத்தில் பிஜேபி 99 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இரண்டு மாநில வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட மோடி தனது வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி இது என்றும் கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச வாக்காளர்களுக்கும் தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)