மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஹிமாச்சல பிரதேசத்தில் துவக்கம் முதலே பிஜேபியின் கை ஓங்கியிருந்தது. முடிவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. பிஜேபி 44 தொகுதிகளில் வென்று ஹிமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபிக்கிடையே கடும் போட்டி நிலவியது. இது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலையில் மும்பை பங்குச்சந்தை 720 புள்ளிகளை இழந்தது. பிஜேபி முன்னிலை பெற்ற பின்பு தான் உயர்ந்தது. முடிவில் மும்பை பங்குச்சந்தை 138 புள்ளிகள் உயர்ந்து முடிவுற்றது. குஜராத்தில் பிஜேபி 99 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இரண்டு மாநில வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட மோடி தனது வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி இது என்றும் கடுமையாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச வாக்காளர்களுக்கும் தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.
18 Dec 2017
அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்த இந்திய பங்குச் சந்தை

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment