Pages

18 Dec 2017

வெள்ளைப்பூண்டு பற்றி அறிந்து கொள்ளுங்கள்

வெள்ளைப்பூண்டு இல்லாத சமயலறையே இல்லை எனலாம். அப்படி என்ன சிறப்பு இந்த வெள்ளைப்பூண்டுக்கு என்று கேட்கின்றீர்களா? வாருங்கள் பார்ப்போம்:

வெள்ளைப்பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சாட்டிவம் (Allium Sativum). வெள்ளைப்பூண்டில் இயற்கையாகவே வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சத்துப்பொருட்கள் உள்ளன. பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு  பாக்டீரியாக்களை அழிக்கவல்லது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைக்கும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். மலைப்பூண்டின் பல் பெரியதாகவும் நாட்டு பூண்டின் பல் சிறியதாகவும் இறுக்கும்.

பூண்டில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின்கள் A, B6, C, E, K, சோலின் (Choline), நியாசின் (Niacin), போலேட்  (Folate), மற்றும் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகிய தாது உப்புக்களும் உள்ளன.
       
மருத்துவ குணங்கள்:
வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சிறந்த கிருமி நாசினி, வாயு கோளாறை நீக்கும், குடற்புழுக்களை கொல்லும், செரிமானத்தை அதிகமாக்கும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.  வைரஸ் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை ஒடுக்கும் சக்தி பூண்டுக்கு உள்ளது. சிறிது வெள்ளைப்பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட்டால் செரியாமை, சளி, வாயு தொல்லை நீங்கும்.
       

No comments:

Post a Comment