Pages

29 Feb 2012

Google +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி



மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான Google +ல் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர். Google +ல் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் support  செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். Google + தவிர வேறு எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.
Google +ல் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo click செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது click  செய்யுங்கள்.
அடுத்து இன்னொரு window open ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை type செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் type செய்யலாம்.
வலது புறத்தில் உள்ள T என்ற link click செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save button அழுத்தி வரும் window-வில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் watermark சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். Watermark சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

Sony Ericsson Walkman droid இந்தியாவில் அறிமுகம்



Sony Ericsson நிறுவனததினர் தற்போது இந்தியாவில் Walkman smartphone-ஐ அறிமுகம் செய்துள்ளனர்.     Sony Music-ல் இருந்து 2GB அளவுள்ள பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Aircel வடிக்கையாளர்கள் Walkman Smartphone-ஐ வைத்திருந்தால் 20 முழு நீல பாடல்களை இலவ்சமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
  • 3.2-inch TFT Capacitive Touchscreen with a 320 x 480 pixel resolution
  • 1GHz Scorpion processor, 512 MB of RAM
  • Android 2.3 Gingerbread
  • 320MB internal storage
  • 3G, EDGE/GPRS, Wi-Fi ‘n’
  • GPS with A-GPS support
  • Bluetooth 3.0 with A2DP, USB 2.0
  • 5MP auto-focus camera with LED flash, 720p video recording
  • Stereo FM radio with RDS
  • Memory expandable up to 32 GB via microSD
  • 3.5 mm handsfree socket
  • 1200 mAh Li-ion battery
இதன் சந்தை விலை ரூபாய் 14,549/- மட்டுமே.


தவறுகளை சுட்டிக்காட்டும் Excel


தகவல்களை சேகரித்து வைப்பதற்கு அனைவரும் உபயோகப்படுத்தும் ஒன்று Excel Worksheet.  இது தகவல்களை தரவரிசைப்படுத்துவதற்கும் உதவுகிறது.
இதில் நீங்கள் Formula ஒன்றை enter செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். உடனே Excel உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. அது ஒருவரின் பெயர் அல்ல. இது என்ன? Excel அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் Formula-வில் அமைத்திருக்கிறீர்கள். அது Excel தொகுப்பிற்கு புரியாத காரணத்தினால் இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு function ஆக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு typing பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம்.
இது ஒரு சிறிய formula-வில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த formula-வினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான formula என்றால் முழுவதுமாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிவது சற்று கடினமே.
பிழையைக் கண்டறிய முடியவில்லை என்றால் ஏமாற்றமும் எரிச்சலும் தானே மிஞ்சும். இதற்கு Excel ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் formula முழுவதையும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களில் type செய்திடுங்கள்.
பொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் type செய்து enter தட்டியவுடன் Excel அவை அனைத்தையும் பெரிய எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. Excel தான் அறிந்து கொள்ளும் formula-வின் பகுதியினை மட்டும் அவ்வாறு பெரிய எழுத்துக்களில் மாற்றும்.
பிழை இருந்து தன்னால் அறிய முடியவில்லையோ அந்த சொற்களை மாற்றாமல் விட்டுவிடும். எனவே எதில் பிழை உள்ளது என்று நமக்குத் தெரிந்துவிடும். நாம் உடனே அதனைச் சரியாக அமைத்துவிடலாம்.
இதில் இன்னொரு சிறிய ஆனால் முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். Data-க்கள் குறித்த சொற்கள், அவற்றின் ரேஞ்ச் காட்டும் இடங்களை Excel Capital சொற்களில் மாற்றாது. எனவே அவற்றில் பிழை இருந்தால் நாமாகத் தான் கண்டறிய வேண்டும்.

25 Feb 2012

Firefox-ன் அமைப்புகளை பார்க்க


இன்றைய உலகில் உலாவிகளில் அதிகம் பயன்படுத்தம்  உலாவி Firefox. குரோமிற்கு போட்டியாக Firefox பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
சில சமயங்களில் இணைய இணைப்பு நன்றாக இருந்தாலும் இணையத்தள பக்கங்கள் தோன்றுவதற்கு சிரமமாக இருக்கும். இதற்காக காரணத்தை கண்டறிவதும் கடினமாக இருக்கலாம். இதற்கு இணைய இணைப்பிற்கு ஏற்றவாறு உலாவிகளின் அமைப்புகளை மாற்றமால் இருப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஒவ்வொரு உலாவிக்கும் தனித் தனியாக அமைப்புகள் (CONFIGURATION) இருக்கும். உதாரணத்திற்கு Firefox-ன் அமைப்புகளை பார்க்க about:config என type செய்தால் அமைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இதற்கு FIREFOX BOOSTER என்ற மென்பொருளும் உதவி புரிகிறது. இதனை பதிவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். பதிவிறக்கம் செய்ய http://www.softpedia.com/get/Internet/Other-Internet-Related/Firefox-Booster.shtml

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை




உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஆன smart phone-ஐ உருவாக்கி 23 வயதான British பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட Kieron-Scott Woodhouse என்ற மாணவர் Middlesex பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
அவரது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில் கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன்.
அந்த வகையில் உருவானது தான் இந்த smartphone. மற்ற கைபேசிகளைப் போலவே, இதிலும் camera உட்பட பல்வேறு வசதிகள் உள்ளது. ADzero என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.

24 Feb 2012

Google தேடு இயந்திரத்தி​ன் பின்னணியை மாற்ற


நமக்கு தேவையான தகவல்களை இணையத்தில் தேடுவதற்கு  Google தேடு இயந்திரமானது இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றது. தேடுதல் மட்டுமன்றி வேறு பல சேவைகளையும் வழங்கும் Google  நிறுவனம் அதிகளவில் பயனர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் முன்னணி வகிக்கின்றது.
அதற்கிணங்க தற்போது Google தேடியந்திரத்தின் பக்கப் பின்னணியை பயனர்கள் தாம் விரும்பிய வண்ணத்தில் மாற்றுவதற்கான வசதியையும் வழங்கியுள்ளது. கீழ்தரப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பின்னணியை மாற்றியமைக்க முடியும்.
1. முதலாவது படத்தில் காட்டியவாறு Change background image என்பதை click செய்யவும்.
2. உங்களது GMail  பயனர் பெயர், கடவுச்சொல்லை பயன்படுத்தி உள் நுழையவும்.
3. நீங்கள் விரும்பிய பின்னணி படத்தை தெரிவு செய்து Select என்பதை click செய்யவும்.
அவ்வளவு தான் நீங்கள் select செய்த படம் background ஆக மாறியிருப்பதை காணலாம்.

ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும் - 2


1) கணனியை (. .) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
. . , ., 1623.

2) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?
. ., ., 16 - . - 1975.

3) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றார்கள்?
. . & . ., ., 1935.

4) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் வட துருவத்தை சென்றடைந்தார்?
. . ., ., 06 - . - 1909.

5) துணைக்கோள்களற்ற (.) இரண்டு கோள்கள் எவை?
., ..

6) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
. ., ., 1945.

7) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின் விளக்கை கண்டுபிடித்தார்?
. . ., ., 1879.

8) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
. ., ., 1900.

9) நுணுக்குக்காட்டியை (.) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்தார்?
., ., 1590.

10) Bacteria கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
., ., 1683.

11) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
. . ., ., 1855.

12) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
. ., ., 1856.

13) . இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு . இனை கண்டுபிடித்தார்?
. ., ., 1825.

14) . - . இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு . - . இனை கண்டுபிடித்தார்?
. . ., ., 1895.

15) . - . இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1901 ஆம் ஆண்டு (. . . . . . .)

23 Feb 2012

Monitor பிரச்சனைகள் குறித்து சில வழிமுறைகள்


நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது நன்றாக இயங்கிய monitor-ல் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.
1. முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய, பல ஆண்டுகளுக்கு முந்தைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் CPU-வில் இருந்தே மானிட்டருக்கு power cable செல்லும்.
இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதே நல்லது. தற்போதைய monitor எனில் அதற்கு தனியே power line plug card  இருக்கும். அது சரியானபடி power plug socket-ல் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும்.
அந்த பிளக்கிற்குத் தனியான switch இருந்தால் அது on செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மானிட்டருக்கு மின்சாரம்  செல்கிறதா என்பதனை அறிந்து கொள்ள ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.
2. அடுத்ததாக உங்கள் மானிட்டரில் brightness மற்றும் contrast adjust செய்வதற்கான switch control கொடுத்திருப்பார்கள். இதனை adjust செய்து பார்க்கவும். இவற்றை adjust செய்தால் மானிட்டர் சரியாகலாம்.
3. அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.
4. இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால் அதனை இந்த CPU-வில் மாட்டிப் பார்க்கவும். வீடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்க வில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.
5. முடியுமென்றால் சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் சரியாக இயங்கவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது.
இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.
6. இன்னும் சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கம்ப்யூட்டர் boot ஆகும் போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் தெரியும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய display card சரியில்லை என்று பொருள். இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய display card பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான்.
புதிய display கார்டுக்கும் மானிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மானிட்டரை மாற்றுங்கள். செகண்ட் ஹேண்ட் மானிட்டரை வாங்க வேண்டாம்.
அதே போல் புதிய மானிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மானிட்டரை வாங்குங்கள்.
எடுத்துக் காட்டாக இப்போதெல்லாம், CRT எனப்படும் மானிட்டர்களை யாரும் வாங்கிப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. அவற்றின் இடத்தில் தட்டையான LCD அல்லது LED மானிட்டர்கள் மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தவும்.

ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்



1) தொலைநோக்கியை (.) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
. ., ., 1593.

2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
. ., ., 1903.

3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
., ., . ?.

4) மின்பிறப்பாக்கியை (.) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?
. ., ., 1831.

5) டைனமைற்றை (.) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
. ., ., 1867.

6) ஒக்சிஜனை (.) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
. . . 01 - . - 1774.

7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
. . ., ., 1926. (. இன் .)

8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
. . ., 1876.

9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?
. ., ., 1714.

10) பென்சிலினை (.) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
. ., ., 1928.

11) மின்மாற்றியை (. ) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
. ., 1831 -- . ., 1885 (. .)

12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
. . , ., 1807.

13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
. ., 1628.

14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
. ., ., 1687.

15) . இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு . இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் . கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- . ., . ., . ., 1947.