Pages

9 Mar 2012

பழம் மற்றும் காய்களை கண்டறியும் Scanner


பொதுவாக Super Market போன்ற விற்பனை நிலையங்களில் உள்ள பொருட்களின் விலை மற்றும் அது என்ன பொருள் என்பதற்கு  பார்கோட் scanner பயன்படுத்தப்படும். இவை பொருட்களில் உள்ள பார்கோட் இலக்கங்களை அறிந்து அதிலுள்ள விலை உட்பட்ட விபரங்களை தெரியப்படுத்தும்.

ஆனால் தற்போது Toshiba நிறுவனம் புதிதாக பார்கோட்களை பயன்படுத்தாது பழம் மற்றும் காய் வகைகளை நேரடியாகவே scan செய்து அவற்றின் விபரங்களை அறியும் வகையில் புதிய scanner  ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த scanner பருமன், வடிவம், நிறம் போன்றவற்றை கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் தரவுத் தளத்துடன்(Database)   ஒப்பிட்டு என்ன பழம் காய் என அடையாளம் காண்பிக்கிறது. இது சிறப்பாகவும் செயல்படுகிறது என Toshiba நிறுவனம் தெரிகின்றது.
Scanner-ன் செயல்பாடு எவ்வாறு என்று காண விரும்புகின்றீர்களா? கீழே உள்ள video-வை பாருங்கள்.