Pages

13 Jan 2012

வேகமாக இயங்கும் Chip கண்டுபிடிப்பு



கணினியில் இருக்கும் சிப்களைவிட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கணினி சிப்பை அமெரிக்க வாழ் இந்தியரான ராஜ் தத் கண்டுபிடித்துள்ளார். இந்த சிப்பை பயன்படுத்தினால் இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும் குறையும். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனையும் இந்த கண்டுபிடிப்பு கவர்ந்துள்ளது. அவர்கள் இதனை சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சிப்பை கண்டுபிடித்துள்ள ராஜ் தத், கோரக்பூர் ஐஐடி-யில் படித்தவர். அமெரிக்காவில் கணினி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது கண்டுபிடிப்பு கணினி சிப் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் தத் இது குறித்துக் கூறியது: கணினி சிப்களில் இப்போது எலெக்ட்ரான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக எடை குறைந்த போட்டான்களை பயன்படுத்தியுள்ளேன். இதனால் சிப்களின் அளவு, எடை, மின்சாரப் பயன்பாடு ஆகியவை குறைந்துள்ளது. எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தினால் சிப்கள் சூடாகும். எனவே அதனை குளிரவைக்க வேண்டும். இதற்காக மின்சாரம் அதிகம் செலவாகிறது. அத்துடன் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக தனியாக பாகங்களைப் பொருத்த வேண்டும். இதனால் அளவும், எடையும் கூடும். ஆனால் போட்டான் வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. எனவே பெருமளவில் மின்சாரம் சேமிக்கப்படும். மேலும் இந்த சிப்கள் சிறிய அளவிலேயே இருக்கும். எடையும் குறைவு. இந்த கண்டுபிடிப்பு கணினி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர். ராஜ் தத்துக்கும், அவரது நிறுவனத்துக்கும் பென்டகன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் போர் விமானத்தில் இந்த கண்டுபிடிப்பை சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Blogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEYS

Bogger-ல் நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட SHORTCUT KEYS தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவும் நேரமும் மிச்சமாகும். 

கீழே கொடுத்துள்ள Keys FIRFOX, CHROME ஆகியவற்றின் latest edition-களில் வேலை செய்யாது. மாறாக INTERNET 5.5+ மட்டும் தான் வேலை செய்யும்.   

Blogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEYS


Keyboard Shortcuts
Function
CTRL + Z To Undo
CTRL + X To Cut
CTRL + C To Copy
CTRL + V To Paste
CTRL + B To Bold
CTRL + A To Highlight all the text
CTRL + S To Auto Save and Keep editing
CTRL + D To Save as Draft
CTRL + F To Find a Word or Phrase
CTRL + G Indic Transliteration
CTRL + Y To Redo
CTRL + U To Underline
CTRL + I Change To Italic
CTRL + P Print the Page
CTRL + SHIFT + P To Publish the post
CTRL + SHIFT + A To Insert Hyperlink

Asus Zenbook UX31E Ultrabook



Asus நிறுவனத்தின் புதிய இந்திய வெளியீடு Zenbook UX31E Ultrabook.  இதன் சந்தை விலை ரூபாய் 89,999/- மட்டுமே.  இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு
- 13.3 inches dispaly
- 1600 x 900 தெளிவுத்திறன்
- Intel Core i5 processor
- 1700 MHz processor speed
- 3 MB cache
- HD Graphics 3000
- DDR3
- 128 GB storage
-  SD/MMC Card/SDHC Card
- 10/100/1000 Mbps ethernet
- 802.11 n/b/g Wi-Fi
- USB port
- Bluetooth
- 12.8 inches width
- Microsoft Windows 7 Home Premium
- Built-In Microphone
- Built-In Webcam
- Carrying Case/Cover

Free Online Accounting



புதிதாக நிறுவனம் ஆரம்பித்ததும் எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து accounting மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Online மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி accounting மென்பொருளை ஒரு இணைய தளம் தருகின்றது.
நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரி பார்த்துக் கொள்வதற்கும், நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் online மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு வசதியாக இந்த accounting மென்பொருள் உதவுகின்றது. இத்தளத்திற்கு சென்று Register Now For Free என்ற button அழுத்தி தேவையான தகவல்களை கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும். அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் accounting தகவல்களை கொடுக்க வேண்டியது தான்.


இணைய இணைப்பு மட்டும் தான் தேவை. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு account உருவாக்கிக் கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம். தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. புதிதாக ஒரு மென்பொருள் வாங்கி அதை நம் கணணியில் நிறுவி குறிப்பிட்ட தகவல் தேவைப்படும் நேரத்தில் அங்கு சென்று தேடுவதற்கு பதில் online மூலம் நம் accounting தகவல்களை பாதுகாப்பாக சேமித்துக் கொள்ளலாம். மொபைல் போனில் உள்ள இணையம் வழியாகவும் நம் தகவல்களை update செய்யலாம்.

இதை எல்லாம் விட இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது. அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை அழுத்தினால் இந்த accounting மென்பொருளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று Screen video உடன் சொல்லிக் கொடுக்கின்றனர். இணைய தளத்தின் முகவரி  http://numia.biz/